உங்களுக்கு காரிய சித்தி உண்டாக, பொருளாதார நிலை உயர மந்திரம் இதோ

vinayagar

உலகில் முழுமுதல் நாயகன் என கொண்டாடப்படும் கடவுள் கணபதி அல்லது கணேசன். கடவுளர்களில் மிகவும் எளிமையானவர். மிக ஆடம்பரமாக கட்டப்பட்ட கோவில்களிலும் வீற்றிருப்பார். ஊரின் ஆற்றங்கரை ஓர மரத்திற்கு அடியிலும் அமர்ந்திருப்பார். அத்தைகைய சிறப்பு அவருக்கே உரிய ஒன்றாகும். புதிதாக ஒரு காரியத்தை தொடங்க இருப்பவர்கள் கணபதியை வழிபட்ட பிறகு தொடங்கும் அக்காரியங்கள் சிறப்பான பலன்களை கொடுக்கும் என்பது அனுபவ உண்மை. அதிலும் வல்லமைகள் அனைத்தையும் தன்னிடம் கொண்டிருக்கும் ஸ்ரீ ஹரித்ரா கணபதி மூல மந்திரம் துதிப்பதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஹரித்ரா கணபதி மூல மந்திரம்

ஓம் ஹும் க்லௌம் ஹரித்ரா கணபதயே
வர வரத ஸர்வஜன ஹ்ருதயம் ஸ்தம்பய ஸ்தம்பய ஸ்வாஹா

கணேசன் எனப்படும் ஹரித்ரா கணபதியை போற்றி இயற்றப்பட்ட இந்த மூல மந்திரத்தை வாரத்தின் எந்த நாளிலும் கூறி வழிபடலாம். சிறப்பான இந்த மூல மந்திரத்தை தினமும் காலையில் எழுந்து, குளித்து முடித்த பின்பு விநாயகரின் படத்திற்கு முன்பு நின்று, விளக்கெண்ணெய் ஊற்றி தீபமேற்றி, பத்திகள் கொளுத்தி வைத்து, இந்த மந்திரத்தை 108 முதல் 1008 முறை மனமொன்றி துதிக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர நீங்கள் புதிதாக தொடங்கும் ஜன வசியம் ஏற்பட்டு நீங்கள் ஈடுபடும் எத்தகைய காரியங்களும் தடை, தாமதங்களின்றி சுலபமாக வெற்றியடையும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி மற்றும் அமைதி ஏற்படும். பொருளாதார நிலை உயரும்.

vinayagar

விநாயகர் வழிபாடு :

- Advertisement -

எந்த ஒரு காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும் அதற்கு நாம் அனைவரும சற்று முன்னதாகவே அக்காரியம் செய்வதற்கான முன் தயாரிப்புகளை செய்திருப்பது அவசியமாகும். நம் வேத புராணத்திலும் இந்த பாரத மக்கள் படித்து நல்லொழுக்கம் பெற்று வாழ மகாபாரதம் என்கிற அமரக் இதிகாசத்தை இயற்ற முன்னமே தீர்மானித்திருந்தார் வேத வியாசர். அப்போது எல்லாவற்றிற்கும் மூலமாக விளங்கும் அந்த விநாயகப் பெருமானை வணங்கி, தனது படைப்பை இயற்ற எண்ணிய போது அந்த விநாயகப் பெருமானே அவருக்காக நேரில் தோன்றி வியாசர் கூற அந்த மஹாபாரத இதிகாசத்தை விநாயகப் பெருமானே தன் கைப்பட எழுதியதால் அந்த ஈடு இணையற்ற இதிகாசம் இன்று வரை புகழோடு உள்ளது.

vinayagar

அது போல நாமும் நமது வாழ்க்கைக்கு உதவக்கூடிய எந்த ஒரு நற்காரியத்தையும் அந்த விநாயகப் பெருமானை வணங்கி தொடங்கும் வழக்கத்தை கடைபிடிப்பது நல்லது இதை வாழ்நாள் முழுதும் பின்பற்றி வரக் கூடிய செயலாக நாம் பின்பற்றவேண்டும் இதனால் நாம் வாழ்வில் விரும்பிய அனைத்து இன்பங்களும் அந்த விநாயகர் பெருமாளின் அருள் ஏற்படும்.

vinayagar

நமது வாழ்க்கை என்பது என்ன தான் நாம் நினைத்த படி வாழலாம் என்று முடிவெடுத்தாலும், பிறப்பிலிருந்து இறப்பு வரை அனைவரின் வாழ்விலும் முக்கிய தாக்கங்களை ஏற்படுத்தும் நவகிரகங்களின் ஆதிக்கத்தை அனைவருமே சுலபமாக வென்று விட முடிவதில்லை. நாம் செய்கிற ஒவ்வொரு செயலுக்கும் கர்மா அல்லது வினை உண்டாகிறது. இந்த வினைகளை தீர்க்கும் நாயகனாக விநாயகர் இருக்கிறார். விநாயகரை தினந்தோறும் துதித்து வருபவர்களுக்கு அனைத்தும் நன்மையாகவே முடியும்.

இதையும் படிக்கலாமே:
உங்களுக்கு வீடு நிலம் சொத்துகளை தரும் மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we Harithra ganapathi Moola mantra in Tamil. This mantra is also called as Vinayagar mantra in Tamil or Ganapathi mantra in Tamil or Moola mantras in Tamil or Pillaiyar manthirangal in Tamil.