இரவு உறங்கச் செல்லும்முன் சமையல் அறையில் இந்த ஒரு பொருளை மட்டும் வைத்து விட்டு செல்லுங்கள். என்ன அதிசயம் நடந்தது என்று மறுநாள் காலை தெரியும்

cash-water
- Advertisement -

வீடு என்றாலே அதில் முக்கிய பங்கு வகிக்கும் இடங்கள் சமையலறை மற்றும் பூஜையறை. ஒருவருடைய இல்லத்திற்கு வருகை தருபவர்கள் முதலில் கண்காணிப்பது அவர்களின் பூஜை அறையையும், சமையலறையையும் தான். அந்த வீட்டில் உள்ள நபர்கள் இந்த இரண்டு இடங்களையும் எப்படி வைத்திருக்கிறார்கள் என்பதன் மூலமே அந்த வீட்டின் ஐஸ்வர்யத்தையும், வீட்டில் உள்ளவர்களின் குணநலன்களையும் அறிந்து கொள்கின்றனர். அவ்வாறு ஒரு வீட்டில் இந்த இரண்டு அறைகளும் எந்த அளவிற்கு தூய்மையாகவும், அழகாகவும் இருக்கிறதோ அதன்படி அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்துள்ளதென்பதையும், அங்கு உள்ளவர்களின் குணநலன்கள் தூய்மையானதாக இருக்குமென்பதையும் தெரிந்து கொள்கின்றனர். அவ்வாறு முக்கிய இடமான இந்த சமையலறையில் இரவு உறங்கச் செல்வதற்கு முன்பு இதனை மட்டும் வைத்து விட்டுச் செல்லுங்கள். இது என்ன? இதனை ஏன் வைக்க வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

vilakku-poojai

வீடு என்றால் அங்கு லட்சுமி கடாட்ஷம் நிறைந்திருக்க வேண்டும். அதற்கு நமது வீட்டில் எப்பொழுதும் இல்லை என்ற வார்த்தை ஒலிக்காமல் இருக்க வேண்டும். உங்கள் வாயிலிருந்து வரும் வார்த்தைகளின்படி தான் இந்த பிரபஞ்சம் அனைத்தையும் உங்களுக்கு அளிக்கிறது. எனவே எப்போதும் பேசுகின்ற வார்த்தைகளில் கவனம் இருக்க வேண்டும்

- Advertisement -

அவ்வாறு வீட்டிலுள்ள பொருட்கள் முழுவதுமாக தீர்ந்து விடுவதற்கு முன்பாகவே மறுபடியும் அவற்றை வாங்கி நிறைத்து வைக்க வேண்டும். வீட்டின் சமையலறையில் எப்பொழுதும் அன்னபூரணியின் வாசம் நிறைந்திருக்க அரிசி பாத்திரத்தில் அரிசியை முழுவதுமாக துடைத்து எடுக்க கூடாது. வீட்டில் எப்பொழுது அரிசி இவ்வாறு காலியாகி விடுகிறது அப்போது அன்னபூரணியும் நமது வீட்டை விட்டு வெளியில் சென்று விடுவார்.

anjarai-petti1

எனவே அரிசி தீரப் போகிறது என்று தெரியும் பொழுதே, அரிசியை புதியதாக வாங்கி நிறைத்து வைக்க வேண்டும். தெய்வங்கள் இரவில் தான் நம் வீட்டை தேடி வருகிறார்கள். அப்படி சமையலறைக்கு வருகின்ற அன்னபூரணி தேவி வீட்டில் உள்ள பொருட்களை ஆராய்ந்து பார்த்து, அவற்றின் அளவு எப்படி இருக்கிறது? சமையல் அறையை எப்படி சுத்தமாக வைத்திருக்கிறோம் என்பதைப் பொறுத்தே நமது வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்ய ஆரம்பிக்கிறாள்.

- Advertisement -

இப்படி நேரடியாக சமயலறைக்குள் வரும் அன்னபூரணியை வரவேற்கும் வகையில் ஒரு டம்ளரில் எப்பொழுதும் தண்ணீர் வைத்திருக்க வேண்டும். நமது வீட்டில் சமைப்பதற்காகவும், குடிப்பதற்க்கவும் தண்ணீர் வைத்திருப்போம். ஆனால் அவற்றை எல்லாம் மூடி போட்டு மூடி வைத்திருப்போம். அப்படி மூடி போட்டு வைத்திருந்தால் வருகின்ற தெய்வங்கள் அந்த தண்ணீரை பருக முடியாது.

water

இவ்வாறு தெய்வத்தை வரவேற்கும் வகையில் அவர்கள் இளைப்பாறுவதற்காக ஒரு டம்ளர் தண்ணீரை எப்பொழுதும் சமையல் அறையில் வைத்துவிட்டு அதன் பிறகு உறங்கச் செல்ல வேண்டும். இப்படி செய்வதன் மூலம் அன்னபூரணி நிரந்தரமாக நமது வீட்டில் நித்ய வாசம் செய்கின்றார். அவ்வாறு அன்னபூரணி இருக்கின்ற வீட்டில் மகாலட்சுமி தேவியாரும் அவர் பின்னாலே வந்து விடுவார். இப்படி இரு தெய்வங்களும் நமது வீட்டில் நிறைந்து விட்டால் பணகஷ்டம், தானிய கஷ்டம் இவை எப்பொழுதுமே நமது வீட்டை நெருங்க முடியாது.

- Advertisement -