40 வயதிலும், 20 வயது போலவே ஜொலிக்கலாம். வயதான தோற்றத்தைத் தள்ளிப் போட, வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஃபேஸ் மாஸ்க் தயாரிப்பது எப்படி?

face1
- Advertisement -

சில பேருக்கு 25 வயதைக் கடந்த உடனேயே வயதான தோற்றம் வர தொடங்கிவிடும். முகத்தில் தோல் சுருக்கம் ஏற்பட தொடங்கும். கண்களுக்கு கீழே தோல் சுருங்கி இருக்கும். வாயை சுற்றி சுருக்கம் வரத் தொடங்கியிருக்கும். கழுத்தில் சுருக்கங்கள் அதிகமாக வரத் தொடங்கும். சிறுவயதிலேயே முதுமையான தோற்றம் வருவதற்கு காரணம் என்ன. வயதான தோற்றத்தை தள்ளிப் போட நாம் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் என்னென்ன, என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

face2

முதலில் நம்முடைய தோல் சுருக்குவதற்கு காரணம், நம்முடைய வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் தான். நேரத்திற்கு தூங்குவது கிடையாது. நேரத்திற்கு சாப்பாடு கிடையாது இயற்கையாகக் கிடைக்கக்கூடிய தண்ணீரை நாம் பருகுவது கிடையாது. நல்ல உணவை சாப்பிடுவது கிடையாது. ஊட்டச் சத்து உடலுக்கு கிடைப்பதில் குறைபாடு. இவை எல்லாவற்றையும் தாண்டி இன்றைய சூழ்நிலையில் இருக்கக் கூடிய மன அழுத்தம். இவைகள் எல்லாம் ஒன்று சேரும் போது நமக்கு வயதான தோற்றம் இளமையிலேயே வந்துவிடுகிறது.

- Advertisement -

இவை எதுவுமே எனக்கு கிடையாது. நான் சந்தோஷமாக ஆரோக்கியமான உணவை சாப்பிட்டும் எனக்கு வயதான தோற்றம் வருகிறது என்றால் அதற்கு அவர்கள் உடம்பில் இருக்கும் ஜீனும் ஒரு காரணமாக சொல்லப்பட்டுள்ளது. வயதான தோற்றத்தைத் தள்ளிப் போட வேண்டும் என்றால் நம்முடைய உணவு பழக்க வழக்கத்தில் இயற்கையாக கிடைக்கும் பழங்கள் காய்கறிகள் பயிறு வகைகளை அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

face3

முளைக்கட்டிய பயிறு, பாதாம் பருப்பு, கீரை வகைகள், பச்சைக் காய்கறிகள், மாதுளம்பழம், வெள்ளரிக்காய் வேக வைத்த முட்டை இவைகளை வாரத்தில் ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரும் போது நம்முடைய வயதான தோற்றத்தை தள்ளிப் போட முடியும். தொடர்ந்து ஒரே பொருட்களை சாப்பிடக்கூடாது. எல்லா பொருட்களையும் கலந்து ஒவ்வொரு நாள் மாற்றி மாற்றி சாப்பிட்டு வரவேண்டும்.

- Advertisement -

நிறைய பேர் உடம்பை குறைக்க வேண்டும், அழகாக இருக்க வேண்டும் என்று சொல்லி டயட், உடற்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். தொடர்ந்து ஒரு 3 மாதம் அல்லது 4 மாதம் டயட், உடற்பயிற்சியை செய்து விட்டு உடனே அதை நிறுத்தி விடுவார்கள். இப்படி ஒரு பழக்கத்தை தொடங்கிய பின்பு, அந்த பழக்கத்தை உடனடியாக விட்டு விட்டாலும் நம்முடைய உடலில் உடனடியாக சில மாற்றங்கள் தெரியத் தொடங்கும். வயதான தோற்றம் ஏற்பட இதுவும் ஒரு காரணமாக சொல்லப்பட்டுள்ளது.

face1

சரி இந்த வயதான தோற்றம் வந்து விட்டது. என்ன செய்யலாம். முகத்தில் இருக்கும் சுருக்கத்தை நீக்க வீட்டிலிருந்தபடியே ஃபேஸ் மாஸ்க் தயாரிப்பது எப்படி. மைசூர் பருப்பு 2 ஸ்பூன், பச்சரிசி 2 ஸ்பூன், இந்த இரண்டு பொருட்களையும் எடுத்து மிக்ஸியில் போட்டு நைஸாகப் பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். இந்தப் பொடியை தேவையான அளவு அதாவது 2 ஸ்பூன் சிறிய பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும். இதோடு தயிர் – 1 ஸ்பூன், அரைத்த தக்காளி விழுது – 1 ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் – 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து விழுதாக கலந்து இதை உங்களுடைய முகத்தில் கீழ்ப் பக்கத்தில் இருந்து மேல்பக்கம் அப்ளை செய்து கொள்ள வேண்டும். கழுத்திலிருந்து பேஸ் மாஸ்க் போட வேண்டும்.

face10

பத்து நிமிடம் கழித்து உங்களுடைய தோல் இறுக்கி பிடிக்கத் தொடங்கும். அதன் பின்பு கையில் லேசாக தண்ணீரைத் தொட்டு உங்களுடைய முகத்தில் லேசாக மசாஜ் செய்து குளிர்ந்த தண்ணீரில் சோப்பு போடாமல் கழுவி வந்தால், முகத்தில் நல்ல வித்தியாசம் தெரியும். வாரத்தில் இரண்டு நாட்கள் இதை செய்து வந்தாலே வயதான தோற்றம் தள்ளிப் போகும். முகத்தில் சுருக்கம் வந்தவர்கள் இதை பயன்படுத்தினால் படிப்படியாக முகச்சுருக்கம் குறையும். முகத்தில் சுருக்கம் இல்லாதவர்கள் இளமையாக இருக்கும்போதே இந்த பேக்கை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகத்தில் வரக்கூடிய சுருக்கம் தள்ளிப்போகும். முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -