நேரில் பார்த்ததால் நானே இதற்கு சாட்சி. நினைத்தால் பெருமையாக உள்ளது – அனுஷ்கா சர்மா ட்வீட்

anushka

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று (18-01-2019) நடந்து முடிந்தது. இந்திய அணி இந்தப்போட்டியை வெற்றிகரமாக முடித்து இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரையும் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. இந்த தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனியின் ஆட்டம் மிகச்சிறப்பாக அமைந்தது அதோடு, அவர் தொடர்நாயகன் விருதினையும் தட்டிசென்றார்.

indian-team

இந்த போட்டியில் இந்திய அணியின் ஒட்டு மொத்த வீரர்களின் செயல்பாடும் அணிக்கு நம்பிக்கை ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி ரசிகர்களின் வரவேற்பினையும் பெற்றுள்ளது. இந்திய அணியின் இந்த மகத்தான வெற்றியினை உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஆகியோர் இணையதளம் மூலம் வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியினையும் தெரிவித்தபடி உள்ளனர்.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டனான விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா இந்த வெற்றி குறித்து தனது டிவீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அதில் இந்திய அணிக்கும் தனது காதல் கணவருக்கும் அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதோ அந்த ட்வீட் :

மறக்கமுடியாத தருணம் இந்த சுற்றுப்பயணம். நான் இந்த தொடர் வெற்றிகளை பார்த்ததில் சாட்சியாக இருப்பதை மகிழ்ச்சியாக நினைக்கிறன். வாழ்த்துக்கள் இந்திய அணிக்கு மேலும், ரொம்ப பெருமையாக உள்ளது உங்களை நினைத்தால் என்று தன கணவர் விராட் கோலியினை குறிப்பிட்டு ட்வீட் செய்த்துள்ளார். அனுஷ்கா சர்மா.

இதையும் படிக்கலாமே :

2019 உலகக்கோப்பை தொடரில் தோனி இந்த வரிசையில் தான் களமிறங்குவார் – கேப்டன் கோலி

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்