2019 உலகக்கோப்பை தொடரில் தோனி இந்த வரிசையில் தான் களமிறங்குவார் – கேப்டன் கோலி

நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து இந்திய அணி நியூசிலாந்து நாட்டிற்கு பயணம் செய்து ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.

indian-team

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 23ஆம் தேதி (23-01-2019)துவங்கி பிப்ரவரி 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணி நியூசிலாந்து புறப்பட தயாராகி உள்ளது.

இந்நிலையில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி கூறியதாவது : உலகக்கோப்பை போட்டிகள் நெருங்கி வருகின்றன. இதற்கான இந்திய அணியும் தீவிரமாக தயாராகி வருகிறது. நடந்து முடிந்த அனைத்து தொடர்களையும் வைத்து பார்க்கும்போது நம்முடைய அணி பலமாக இருந்தாலும், உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெறுவதால் நாம் இன்னும் கடுமையாக பயிற்சி செய்து பார்மில் இருக்க வேண்டும்.

ms

மேலும், தோனி இருப்பது அணிக்கு வலிமையே அவரது பங்களிப்பு அணிக்கு நிச்சயம் அவசியம். அதேபோல் தோனி உலகக்கோப்பை தொடரில் 5ஆவது ஆட்டக்காரராகவே களமிறங்குவார். அவருடைய அனுபவம் பின்வரிசையில் விளையாடி அணிக்கு நிச்சயம் வெற்றியை ஈட்டு தரும் என்பதால் 5ஆவது வீரராக களமிறங்கி போட்டியை வெற்றியோடு முடிப்பார் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது என்று கோலி கூறினார்.

இதையும் படிக்கலாமே :

தோனி பாய் நீங்கள் என்றும் இப்படித்தான். சாம்பியன் என்றும் சாம்பியன் தான். – தலையை புகழ்ந்து தள்ளிய இளம் வீரர்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்