நாவில் கரையும் சுவைமிக்க அப்பளக் குழம்பை இப்படி செய்து பாருங்கள். தட்டு சோறும் காலியாகிவிடம்

kuzhambu
- Advertisement -

சமையலில் தினமும் மதிய உணவிற்கு ஏதேனும் ஒரு குழம்பு வைத்து தான் ஆகவேண்டும். குழம்பு வைப்பது மட்டுமல்லாமல் அதற்கு தொட்டுக்கொள்ள ஏதேனும் ஒரு பொரியலும் சமைக்க வேண்டும். இவை இரண்டையும் யோசித்து செய்வது பெண்களுக்கு மிகவும் சிரமமாகத் தான் இருக்கும். ஒரு சில சமயங்களில் காய்கறி இல்லாவிட்டால் என்ன செய்வது என்ற குழப்பம் வந்துவிடும். அதற்கு இந்த அப்பள குழம்பை ஒரு முறை செய்து பாருங்கள். இதன் சுவை மீண்டும் மீண்டும் உண்ண தூண்டும்.

kulambu

அப்பளக் குழம்பு வைக்க தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 10, தக்காளி – 2, பூண்டு – 10 பல், அப்பளம் – தேவையான அளவு, எண்ணெய் – தேவையான அளவு, புளி – நெல்லிக்காய் அளவு, கருவேப்பிலை – சிறிதளவு, கொத்தமல்லி – சிறிதளவு, பெருங்காயத்தூள் – சிறிதளவு, கடுகு – அரை ஸ்பூன், வெந்தயம் – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், மிளகாய்த்தூள் – 3 ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக காய்ந்தவுடன் அதில் உங்களுக்கு போதுமான அளவு அப்பளத்தை பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே எண்ணெயில் கடுகு, வெந்தயம், சீரகம் சேர்க்கவேண்டும். அதனுடன் சிறிதளவு பெருங்காயம் சேர்க்க வேண்டும். இவை பொரிந்ததும் நறுக்கி வைத்த சின்ன வெங்காயம் அதனுடன் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். இவை வதங்கியதும் இவற்றுடன் கருவேப்பிலை மற்றும் நறுக்கி வைத்த தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

Kadaai

வெங்காயம் தக்காளி நன்றாக வதங்கியவுடன் மிளகாய்த்தூள் சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கி, பின்னர் அதில் தேவையான அளவு நீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்து மிளகாய் தூள் வாசனை போனதும் அதனுடன் புளிக்கரைசலை சேர்க்கவேண்டும். இவை அனைத்தும் சேர்ந்து நன்றாக கொதித்து வரும் வரை ஒரு தட்டை போட்டு மூடி கொதிக்கவிட வேண்டும்.

- Advertisement -

குழம்பு நன்றாக கொதித்த பின்னர் அதில் பொரித்து வைத்த அப்பளத்தை சேர்க்க வேண்டும். அப்பளம் சேர்த்து ஒரு கொதி வந்ததும் குழம்பில் உப்பின் அளவை சரி பார்க்க வேண்டும். ஏனென்றால் அப்பளத்தில் உள்ள உப்பின் அளவு குழம்பிற்கு போதுமானதாக கூட இருக்கும். அப்பளம் போட்ட பின்னர் குழம்பில் உப்பின் அளவு குறைந்து இருந்தால் தேவையான அளவு உப்பினை சேர்த்துக் கொள்ளலாம். பிறகு அடுப்பை அனைத்து குழம்பை இறக்கி வைத்துவிட வேண்டும். பின்னர் சிறிதளவு கொத்தமல்லி இலைகளை தூவி விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான அப்பள குழம்பு தயார்.

kulambu

வடித்த சாதத்துடன் இந்த குழம்பினை சேர்த்து ஒரு முறை சாப்பிட்டு பாருங்கள். இதில் சேர்த்துள்ள அப்பளம் அப்படியே நாவில் கரையும். தட்டில் போட்ட சாதம் ஒரு பருக்கை இல்லாமல் காலியாகிவிடும். இப்படி ஒருமுறை செய்து பாருங்கள் உங்களுக்கே தெரியும் இதன் சுவை.

- Advertisement -