உங்கள் நோய்கள் அனைத்தும் நீங்க, தொழில் சிறக்க இக்கோயிலுக்கு செல்லுங்கள்

perumal-temple
- Advertisement -

உலகில் எந்த ஒரு நாட்டுக்கு இல்லாத சிறப்பு இந்தியா எனப்படும் பாரத தேசத்திற்கு உண்டு. அந்த சிறப்பு தான் ஆன்மீகம். கடவுளர்கள் மனித உருவம் கொண்டு நடமாடிய புண்ணிய பூமி பாரத தேசம். இந்த நாட்டில் எண்ணற்ற கோயில்கள் இருந்தாலும், பல லட்சம் மக்கள் தினமும் வந்து செல்லும் திருப்பதி திருமலை புனித தலத்திற்கு சற்று அருகே அமைந்திருக்கும் “ஸ்ரீ அப்பலயகுண்ட பிரசன்ன வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயில்” சிறப்புகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Perumal

அப்பலயகுண்ட பிரசன்ன வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயில் வரலாறு

சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கோயிலாக இருக்கிறது இந்த அப்பலயகுண்ட பிரசன்ன வெங்கடேஸ்வரர் சுவாமி திருக்கோயில். இக்கோயிலின் பிரதான இறைவனான பெருமாள் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேஸ்வரர் என்கிற பெயரிலும், லட்சுமி தேவி பத்மவதி என்கிற பெயரிலும் அழைக்கப்பட்டு வழிபடப்படுகிறார்கள். 12 ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாரும், திருமாலுடன் கலந்தவருமான ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரும் இக்கோயிலில் வழிபடப்படுகிறார்.

- Advertisement -

கோயில் புராணங்களின் படி பூலோகத்தில் பத்மவாதி தேவியை திருமணம் செய்ய வந்த பெருமாள் ஆகிய ஸ்ரீனிவாசன் இந்த தலத்தில் சிறிது காலம் ஓய்வெடுத்ததாகவும், பத்மாவதி தேவியை மணந்த போது இத்தலத்தில் இருந்து பெருமாளை நோக்கி தவமிருந்த சித்தேஸ்வரர் முனிவர் மற்றும் அவரது சீடர்களுக்கும் பெருமாள் இங்கு தந்தது திருக்கல்யாண தரிசனம் காட்சி தந்து வரமளித்ததாகவும் கூறுகிறது.

அப்பலயகுண்ட பிரசன்ன வெங்கடேஸ்வர ஸ்வாமி சிறப்புகள்

- Advertisement -

இக்கோயிலில் பத்மாவதி தேவி ஆண்டாள் நாச்சியார், ஆஞ்சநேயர் ஆகியோர்களுக்கு தனி சந்நதிகள் இருக்கின்றன. இங்கிருக்கும் ஆண்டாள் நாச்சியாரின் சிலை பிரம்ம தேவனால் ஸ்தாபிக்க பட்டது என கூறப்படுகிறது. இந்த ஆண்டாள் நாச்சியாருக்கு வேதநாயகி என்கிற பெயரையும் சூட்டினார் பிரம்ம தேவன்.இக்கோயிலில் வெங்கடேஸ்வர பெருமாள் அபய ஹஸ்த முத்திரையில் இருப்பது சிறப்பான அம்சமாகும்.

Perumal

வாயு பகவானுக்கு இக்கோயிலில் விக்ரகம் இருக்கிறது. இவரை பூஜை செய்து வழிபடுபவர்களுக்கு நீண்ட காலமாக இருக்கும் நோய்கள் அனைத்தும் நீங்குவதாக பக்தர்கள் கூறுகிறார்கள். நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் தடைபடும் ஆண்கள் மற்றும் பெண்கள் இங்குள்ள வெங்கடேஸ்வரர் மற்றும் பத்மாவதி தாயாரை வேண்ட விரைவிலேயே திருமணம் நடக்கும் என அனுபவம் வாய்ந்தவர்கள் கூறுகிறார்கள். தொழில், வியாபாரங்கள் சம்பந்தமான பிரச்சனைகளும், உடல் மற்றும் மன நல குறைபாடுகளும் இக்கோயிலில் வந்து வழிபடுபவர்களுக்கு நீங்குகிறது.

- Advertisement -

கோயில் அமைவிடம்

அப்பலயகுண்ட பிரசன்ன வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயில் ஆந்திர பிரதேச மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி நகருக்கு 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

கோயில் நடை திறந்திருக்கும் நேரம்

காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும்.

கோயில் முகவரி

ஸ்ரீ பிரசன்ன வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயில்
அப்பழையகுண்ட
சித்தூர் மாவட்டம் – 517551
ஆந்திர பிரதேசம்

இதையும் படிக்கலாமே:
கேரளபுரம் விநாயகர் கோயில் சிறப்புகள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Appalayagunta temple history in Tamil. It is also called as Appalayagunta venkateswara temple in Tamil or Appalayagunta sri prasanna venkateswara swamy in Tamil or Chittoor district temples in Tamil or Prasanna venkateswara swamy chittoor in Tamil.

- Advertisement -