அடுப்பிலா ஆப்பிள் பீடா இனிப்பு செய்முறை

apple peda recipe
- Advertisement -

இப்போதெல்லாம் அடுப்பில்லாமல் சமைக்கும் முறை வெகு பிரபலமாகி கொண்டிருக்கிறது. இது முன் காலத்தில் பின்பற்றிய ஒரு முறை தான் என்றாலும் கால முறை மாற்றத்தால் மறைந்து விட்டது என்றே சொல்லலாம். இப்போது மீண்டும் இந்த அடுப்பில்லா சமையல் முறை புழக்கத்தில் அதிக அளவில் பேசப்படுகிறது.

இந்த சமையல் முறை நம் உடலுக்கு மிக மிக ஆரோக்கியமானது என்றே சொல்லலாம். பெரும்பாலும் நாம் சமைத்த உணவு பொருட்களில் அதிக அளவிலான சத்துக்கள் அழிந்து விடுகிறது. சமைக்காமல் இயற்கையான முறையில் கிடைக்கும் பொருட்களை நாம் அப்படியே சாப்பிடும் போது அதன் சத்துக்கள் முழுமையாக நமக்கு கிடைக்கும்.

- Advertisement -

முழுமையான ஒரு இயற்கை உணவு என்றால் அது அடுப்பு இல்லாமல் சமைத்து உண்ணும் இந்த முறை தான். இதில் பலரும் பல வகையான உணவுகளை பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஒரு இனிப்பு வகையை மிகவும் எளிமையாக எப்படி செய்வது என்றும இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

பொட்டுக்கடலை – 1 கப்,
சர்க்கரை – 1/2 கப்,
நெய் – 4 டேபிள் ஸ்பூன்,
காய்ச்சாத பால் – 4 டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை

இந்த ஸ்வீட் செய்ய முதலில் பொட்டுக்கடலையை மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல பையன் பவுடராக அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அதை கல்வியில் போட்டு நைசாக சலித்துக் கொள்ளுங்கள். பொட்டுக்கடலை எந்த அளவிற்கு நைஸ் மாவாக இருக்கிறதோ அந்த அளவுக்கு ஸ்வீட் உருண்டை பிடிக்க இலகுவாக இருக்கும்.

அடுத்ததாக சர்க்கரையும் இதே போல மிக்ஸி ஜாரில் சேர்த்து ஃபைன் பவுடராக அரைத்துக் கொள்ளுங்கள். சர்க்கரையை சலிக்க தேவையில்லை. மாவுடன் சேர்த்து சர்க்கரையை கலக்கும் போது சர்க்கரை நன்றாக இளகி வந்து விடும்.

- Advertisement -

இப்போது ஒரு பவுலில் முதல் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் அரைத்த சர்க்கரையும், ஜலித்த பொட்டுக்கடலை மாவையும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். இடை இடையே மீதம் இருக்கும் இரண்டு ஸ்பூன் நெய்யும் ஊற்றி விடுங்கள்.

இவையெல்லாம் ஒன்றாக கலக்கும் வரை நன்றாக கலந்த பிறகு பால் லேசாக ஊற்றி மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு சென்று கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த உருண்டையை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி உருண்டையின் மேலே லேசாக ஒரே ஒரு விரல் வைத்து அழுத்தினால் போதும் ஆப்பிள் வடிவில் கிடைத்து விடும்.

ஆப்பிளின் காம்பு போன்ற பகுதிக்கு ஒரு கிராம்பை கிராம்பின் தலைப்பகுதி உருண்டையில் படும்படி வைத்து விடுங்கள். இப்போது இதைப் பார்க்க அப்படியே ஆப்பிள் வடிவில் இருக்கும். இன்னும் அலங்காரத்திற்கு வேண்டுமென்றால் நீங்கள் பாதாம், பிஸ்தா போன்று வகைகளை மேலே வைக்கலாம்.

இதையும் படிக்கலாமே: சென்னா பிரியாணி செய்முறை

மிகவும் எளிமையான முறையில் அதுவும் அடுப்பில்லாமல் செய்யக் கூடிய இந்த ஆப்பிள் பீடா ஸ்வீட் ரெசிபியை நீங்களும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

- Advertisement -