5 நாளில், 5 கிலோ உடல் எடையை குறைக்க தினமும் 1 டம்ளர் இந்த ஜூஸ் குடிங்க போதும்.

juice1
- Advertisement -

உடல் எடையை குறைப்பதற்கு எத்தனையோ வழிமுறைகள் உள்ளது. ஆனால் எதை முயற்சி செய்தும் என்னால் உடல் எடையை குறைக்க முடியவில்லை என்பவர்கள் இந்த ஒரு ஜூஸ் ட்ரை பண்ணி பாருங்க. 5 லிருந்து 7 நாட்கள் இந்த ஜூஸை காலையில் 1 டம்ளர், மாலையில் 1 டம்ளர், 250 எம்எல் அளவு குடித்து வர வேண்டும். பின் சொல்லக்கூடிய எல்லா பொருட்களையும் சேர்த்து ஜூஸ் தயாரித்துக் கொள்ளுங்கள். எந்த பொருளையும் ஸ்கிப் பண்ணாதீங்க. உடல் எடையை குறைக்கக்கூடிய ஜூஸ் எப்படி தயார் செய்வது? நேரத்தைக் கடத்தாமல் பார்த்து விடுவோமா?

1 க்ரீன் டீ பாக்கெட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதை 200ml சுடுதண்ணீரில் போட்டு நன்றாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும். டீ தூள் அந்த தண்ணீரில் நன்றாக ஊறி, தண்ணீரும் நன்றாக ஆறிவிடும். இந்த கிரீன் டீ வாட்டர் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பின் சொல்லக்கூடிய எல்லா பொருட்களையும் ஒவ்வொன்றாக போட்டுக் கொள்ள வேண்டும். மீடியம் சைஸில் இருக்கும் 1 – ஆப்பிளை சிறிய துண்டுகளாக வெட்டி போட்டுக்கொள்ளுங்கள். இஞ்சி – 1 இன்ச் அளவு தோல் சீவியது, ஆப்பிள் சீடர் வினிகர் – 2 டேபிள் ஸ்பூன், எலுமிச்சை பழச்சாறு – 3 டேபிள் ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு விட்டு, இறுதியாக முதலில் நாம் கப்பில் தயார் செய்து வைத்து இருக்கிறோம் அல்லவா கிரீன் டீ தண்ணீர், அது சூடு நன்றாக ஆறி இருக்கும்.

க்ரீன் டீ பாக்கெட்டை எடுத்து தூர போட்டுவிட்டு, அந்த தண்ணீரை மட்டும் மிக்ஸி ஜாரில் ஊற்றி மிக்ஸியை ஓட விடுங்கள். விழுது போல எல்லா பொருட்களும் சேர்ந்து அரைபட்டு வெயிட் லாஸ் ஜூஸ் நமக்கு கிடைத்திருக்கும். இதை வடிகட்ட கூடாது. அப்படியே ஒரு டம்ளரில் ஊற்றி குடித்துவிட வேண்டும்.

- Advertisement -

காலையில் ஒருமுறை பிரஷ்ஷாக தயார் செய்து குடிக்க வேண்டும். இரவு ஒரு முறை பிரஷ்ஷாக தயார் செய்து குடிக்க வேண்டும். இரவு தூங்கச் செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு, முன்பு 1 டம்ளர் குடித்து கொள்ளுங்கள். காலை உணவு சாப்பிட்ட பின்பு ஒரு மணி நேரம் கழித்து இந்த ஜூஸை குடிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

5 லிருந்து 7 நாட்கள் மட்டும் இந்த வெயிட் லாஸ் ஜூஸை குடுத்து பாருங்க. நிச்சயமா உங்களுடைய உடல் எடையில் வித்தியாசம் தெரியும். 7 நாட்களுக்கு மேல் தொடர்ந்து இந்த வெயிட் லாஸ் ஜூசை எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பின்குறிப்பு: உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக ஏதாவது பிரச்சனை உள்ளது, அதன் காரணமாக உடல் எடை அதிகமாகிறது என்றாலும், தொடர்ந்து மருந்து மாத்திரை சாப்பிடுபவர்களாக இருந்தாலும், நீங்கள் உங்களுடைய டாக்டரின் ஆலோசனையோடு இந்த வெயிட் லாஸ் ஜூசை குடிப்பது நல்லது.

- Advertisement -