ஏப்ரல் மாத ராசி பலன் 2024 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

april month rasi palan 2024
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் தைரியம் அதிகரிக்கும் மாதமாக திகிழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்பட்டாலும் அதற்கு இணையான செலவுகளும் ஏற்படும். ஒரு சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தை பொருத்தவரை வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சற்று கவனம் தேவை. கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும் மாதமாகவே இந்த மாதம் இருக்கும். இருப்பினும் கனிவுடன் பேசுவது நன்மையை தரும். திருமணம் முயற்சிகள் வெற்றியடையும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று குறைவாகவே இருக்கும். புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும் என்றாலும் மறைமுக எதிரிகளால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் சற்று கவனத்துடன் செயலாற்ற வேண்டும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு பண பிரச்சனை தீரும் மாதமாக இந்த மாதம் திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பண வரவு ஏற்படும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பண வரவிற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அதே சமயம் சுப விரயங்கள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். வீடு மனை யோகம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. உடல் ஆரோக்கியத்தை பொருத்தவரை சிறு உபாதையாக இருந்தாலும் உடனே தக்க மருத்துவரை ஆலோசிப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வது நன்மையை தரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். புதிய வேலை தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். ஒரு சிலருக்கு பதவி உயர்வு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உள்ளது. வேலை தொடர்பாக வெளிநாடு செல்லும் யோகம் ஒரு சிலருக்கு ஏற்படும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு நல்ல லாபம் கிடைக்கும். இருப்பினும் புதிதாக எந்த முயற்சிகளிலும் புதிதாக எந்த தொழிலிலும் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டமான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு திடீர் பணவரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உள்ளது. அதே சமயம் செலவுகள் செய்யும் பொழுது வீண் விரயங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக குறைவதை உணரலாம். இருப்பினும் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். திருமணம் முயற்சிகள் வெற்றி பெறும்.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையை நிலவுகிறது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. தொழிலை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்க்கு லாபம் கிடைக்கும். தொழிலை முன்னேற்ற எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் வெற்றியை தரும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு சிவ பெருமானை வழிபட வேண்டும்.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஏற்ற இறக்கம் நிறைந்த மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படாது. வரவை விட செலவு அதிகமாகவே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மன அழுத்தம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்து பொறுமையுடன் நடந்து கொள்வது நன்மையை தரும்.

வேலையைப் பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். வேலையை திறம்பட செய்வதன் மூலம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் ஏற்படும். கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கண்டிப்பான முறையில் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் ஏற்பட கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாக்கும். புதிதாக முதலீடு செய்வதற்கு முன்பாக ஒரு முறைக்கு பலமுறை யோசித்து முடிவு எடுக்க வேண்டும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பொறுமையுடன் செயலாற்ற வேண்டிய மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்து அளவிற்கு பணவரவு ஏற்பட்டாலும் அதற்கு இணையான செலவுகளும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. உடல் ஆரோக்கியம் சீராக இருக்க துரித உணவுகளை தவிர்க்க வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். எதிர்மறை எண்ணங்கள் அதிக அளவில் மனதில் தோன்ற ஆரம்பிக்கும். கவனம் தேவை.

வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். கவனத்துடன் வேலையை செய்வதன் மூலம் உயர் அதிகாரிகளின் கண்டிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். ஒரு சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. தொழிலை பொருத்தவரை ஏற்ற இறக்கமான மாதமாகவே திகழும். புதிதாக எந்த முயற்சிகளையும் செய்யாமல் இருப்பது நல்லது. அதை மீறி செய்தால் அதில் பல தடைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் புத்திசாலித்தனத்துடன் செயலாற்ற வேண்டிய மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். பண வரவிற்கு இணையான செலவுகளும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. உடல் ஆரோக்கியத்தை பொருத்தவரை உடல் அசதியை தவிர்த்து வேறு ஏதும் பெரிதாக ஏற்படாது. கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். திருமணம் முயற்சிகள் வெற்றியை தரும்.

வேலையை பொருத்தவரை சாதகமான மாதமாக திகழ்கிறது. புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. இருப்பினும் சக ஊழியர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்து அளவிற்கு லாபம் கிடைக்காது. புதிதாகவோ அல்லது பெரிய அளவிலோ முதலீடு செய்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது. இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு நரசிம்மரை வழிபட வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் திருப்பங்கள் நிறைந்த மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிக அளவு பண வரவு ஏற்படும். இதனால் கடன்கள் தீருவதற்குரிய வாய்ப்புகளும் உண்டு. உஷ்ணம் தொடர்பான உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

வேலையை பொருத்தவரை இதுவரை தடைப்பட்டிருந்த அனைத்து விதமான சலுகைகளும் இந்த மாதத்தில் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. புதிய வேலையும் நினைத்த சலுகைகளும் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். இந்த மாதத்தில் புதிய தொழிலை செய்ய ஆரம்பிப்பதோ அல்லது முதலீடுகள் செய்வதோ மிகப் பெரிய வெற்றியைத் தரும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முன்னேற்ற மிகுந்த மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு பழைய கடன்களை அடைப்பதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தை பொருத்தவரை சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கு உரிய வாய்ப்புகளும் உண்டாகும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். வேலையில் முழு கவனம் செலுத்தி செய்வதன் மூலம் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் சற்று காலதாமதம் ஏற்படும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. அதே சமயம் தொழிலை முன்னேற்றுவதற்கு எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றியைத் தரும். இந்த மாதம், மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு அம்பாளை வழிபட வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கவனத்துடன் செயலாற்ற வேண்டிய மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்து அளவிற்கு பணவரவு ஏற்படும். இருப்பினும் மருத்துவ செலவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. உடல் ஆரோக்கியத்தை பொருத்தவரை சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். கூடுதல் கவனம் செலுத்தி வேலையை செய்வதன் மூலம் பெரிய தவறுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்து அளவிற்கு லாபம் கிடைக்கும். இதனால் தொழிலை நல்ல முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வீர்கள். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு திருச்செந்தூர் முருகனை வழிபட வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சீரான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு திடீர் செலவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. உடல் ஆரோக்கியத்தை பொருத்தவரை இதுவரை இருந்து வந்த உடல் உபாதைகள் நீங்கி நல்ல முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் சிறிது நேரத்திலேயே ஒற்றுமையுடன் சகஜமாக பழகும் சூழ்நிலை உண்டாகும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். கடின உழைப்பின் காரணமாகவே எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்புடன் நடந்து கொள்வார்கள். தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்க சற்று கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு வெங்கடாசலபதியை வழிபட வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கோபத்தை கட்டுப்படுத்தும் மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். இருப்பினும் செலவுகளும் அதிக அளவில் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. உடல் ஆரோக்கியத்தை பொருத்தவரை ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. கவனம் தேவை. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கோபத்தை தவிர்த்து நிதானத்துடனும் பொறுமையுடனும் செயலாற்றுவது நன்மையை தரும். இல்லையெனில் பிரிவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.

வேலையை பொருத்தவரை வேலை பாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. வேலை சுமை அதிகமாகவே இருக்கும். எவ்வளவு கடினமாக உழைத்தாலும் உயர் அதிகாரிகளிடமிருந்து எந்தவித சலுகைகளையும் எதிர்பார்க்க முடியாது. தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. முதலீடு செய்யும் பொழுது நன்றாக யோசித்து செய்வது நன்மையை தரும். இல்லையெனில் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாக்கும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு கால பைரவரை வழிபட வேண்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஏற்ற இறக்கம் நிறைந்த மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்பட்டாலும் அதற்கு இணையான செலவுகளும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. சேமிப்புகள் கரையும் சூழ்நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற மன அழுத்தத்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அதை பேசி உடனுக்குடனே சரி செய்து கொள்வது நன்மையை தரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். அதை எளிதில் செய்து முடித்து விரும்பிய எதிர்பார்த்த பதவி உயர்வை பெறுவீர்கள். தொழிலை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலில் புத்திசாலித்தனமாக முடிவெடுப்பதன் மூலம் பணம் வரவை அதிகரித்துக் கொள்ள முடியும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு வாராக் அம்மனை வழிபட வேண்டும்.

- Advertisement -