- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்அரைச்சி தாளிச்ச சட்னி சாப்பிட்டு இருக்கீங்களா? காரசாரமா இப்படி ஒருமுறை சட்னி செஞ்சு சாப்பிட்டு பாருங்க,...

அரைச்சி தாளிச்ச சட்னி சாப்பிட்டு இருக்கீங்களா? காரசாரமா இப்படி ஒருமுறை சட்னி செஞ்சு சாப்பிட்டு பாருங்க, 10 இட்லி கூட உங்களுக்கு பத்தவே பத்தாது!

- Advertisement -

எப்போதும் ஒரே விதமான முறையில் வெங்காயம், தக்காளியை போட்டு வதக்கி செய்யும் சட்னியை விட, இது போல ஒரு முறை அரைத்து பின்னர் தாளிச்சு செஞ்சு பாருங்க, சிலர் இப்படி செய்வது உண்டு ஆனால் இந்த வகையில் செய்யும் பொழுது அதன் ருசியே தனியாக இருக்கும். இதுவரைக்கும் ட்ரை பண்ணாதவங்க கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க, அரைச்சி தாளிச்ச கார சட்னி எப்படி செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

கார சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
தக்காளி – இரண்டு, பெரிய வெங்காயம் – இரண்டு, பூண்டு பல் – 5, வர மிளகாய் – 3, மிளகாய் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன், புளி – சிறு நெல்லிக்காய் அளவு, உப்பு – தேவையான அளவு, சீரகம் – அரை ஸ்பூன். தாளிக்க: கடுகு – அரை ஸ்பூன், உளுந்து – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

கார சட்னி செய்முறை விளக்கம்:
அரைச்சி பின்னர் தாளிக்க வேண்டும் என்பதால் முதலில் பச்சையாக எல்லா பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நீங்கள் அரைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு முதலில் இரண்டு பழுத்த தக்காளி பழங்களை சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதே போல பெரிய வெங்காயம் இரண்டை தோல் உரித்து சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளுங்கள். பெரிய வெங்காயத்திற்கு பதிலாக சின்ன வெங்காயம் சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும். ஒரு பத்து சின்ன வெங்காயத்தை தோல் உரித்து சேர்த்துக் கொள்ளலாம்.

நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை மிக்ஸியில் சேர்த்த பின்பு 5 பூண்டு பற்களை தோலுரித்து சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் புளிப்பு சுவைக்கு சிறு நெல்லிக்காய் அளவிற்கு புளியை விதைகள், நார் எல்லாம் நீக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். தேவையான அளவிற்கு உப்பு போட்டுக் கொள்ளுங்கள். அரை ஸ்பூன் சீரகம், காரத்திற்கு மூன்று வர மிளகாய் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு வெறும் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

உங்களிடம் காஷ்மீரி மிளகாய் இருந்தால் சேர்த்துக் கொள்ளுங்கள். நல்ல ஒரு நிறத்தையும் கொடுக்கும். அரைத்து எடுத்த இந்த விழுதை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கொத்து கருவேப்பிலையை கழுவி உருவி சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
மசாலா எதுவும் சேர்க்காமல் பாய் வீட்டு பிளைன் பிரியாணி உதிரி உதிரியாக சுவையாக எளிதாக செய்வது எப்படி? இதே அளவுல செஞ்சு பாருங்க கொஞ்சம் கூட அடிப்பிடிக்காமல் குழையாமல் சூப்பராக வெந்து வரும்.

பிறகு நீங்கள் அரைத்து வைத்துள்ள இந்த சட்னியை இதனுடன் சேர்த்து, மிக்ஸியையும் கழுவி அந்த தண்ணீரையும் ஊற்றிக் கொள்ளுங்கள். இப்போது மசாலா வாசம் போக நன்கு கொதிக்க வேண்டும். கொதித்து சட்னி கெட்டி ஆகி வரும் பொழுது, அடுப்பை அணைத்து ஆறவிட்டு விடுங்கள். அவ்வளவுதான் ரொம்பவே ருசியாக இருக்கக் கூடிய இந்த கார சட்னி ரெசிபி இட்லி, தோசை, சப்பாத்தி என்று எல்லாவற்றுக்குமே தொட்டுக் கொள்ள செமையாக இருக்கும். குறிப்பாக பணியாரம், பஜ்ஜி, வடை போன்றவற்றுடன் சாப்பிட்டுப் பாருங்கள் அட்டகாசமாக இருக்கும்.

சற்று முன்