வெங்காயம் தக்காளி அரைச்சு விட்ட இட்லி சாம்பார் கேள்வி பட்டு இருக்கீங்களா? இப்படி ஒரு சாம்பாரை வாழ்நாளில் நீங்க ருசித்தே இருக்க மாட்டீங்க.

sambar4
- Advertisement -

கமகமன்னு வாசத்தோடு சூப்பரான ஒரு சாம்பார் ரெசிபி. சுடச்சுட இட்லிக்கு மேலே இந்த சாம்பாரை ஊற்றி சாப்பிட்டால் 10 இட்லி பத்தாது. வெங்காயம் தக்காளி அரைத்து ஊற்றி பெரும்பாலும் குருமா தான் செய்வோம் அல்லவா. இன்று வெங்காயம் தக்காளி அரைத்து ஊற்றி நாம் சாம்பார் வைக்க போகின்றோம். அப்போது இதன் ருசி எத்தனை அருமையாக இருக்கும் என்பதை நீங்களே சமைத்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். வாங்க சூப்பரான வித்தியாசமான இந்த இட்லி சாம்பாரை நாமும் தெரிந்து கொள்வோம்.

முதலில் 100 கிராம் அளவு துவரம் பருப்பை குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து 4 லிருந்து 5 விசில் விட்டு குழைய வேக வைத்து, கடைந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் – 2 ஸ்பூன் ஊற்றி, வெந்தயம் – 10 (ரொம்ப கொஞ்சமா போடுங்க இல்ல கசப்பு தெரியும்), சீரகம் – 1/2 ஸ்பூன், பூண்டு பல் தோல் உரித்தது – 8, இந்த பொருட்களை போட்டு சிவக்க விடுங்கள். அடுத்து பெரிய வெங்காயம் நீளவாக்கில் வெட்டியது – 1, பழுத்த பெரிய தக்காளி பழம் – 2, இந்த இரண்டு பொருட்களை போட்டு வதங்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வரும்வரை வதக்கிவிட்டு பிறகு தக்காளி பழத்தை போட்டு வதக்குங்கள்.

இதோடு ஒரு கைப்பிடி அளவு தேங்காய் துருவல், சாம்பாருக்கு தேவையான அளவு உப்பு, போட்டு தக்காளி குழைய குழைய வதக்க வேண்டும். அடுத்ததாக மிளகாய் தூள் – 1 ஸ்பூன், மல்லித்தூள் – 1 ஸ்பூன், சாம்பார் பொடி – 2 டேபிள் ஸ்பூன், சேர்த்து மீண்டும் ஒருநிமிடம் வதக்கி, அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த பொருட்கள் எல்லாம் நன்றாக ஆரட்டும். பின்பு இந்த எல்லா பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுது போல அரைத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது சாம்பாரை தாளித்து விடலாம். பெரிய பாத்திரத்தில் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன் ஊற்றி, கடுகு – 1 ஸ்பூன், வரமிளகாய் – 1 கிள்ளி போட்டு, 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள் போட்டு, பொடியாக நறுக்கிய பூண்டு பல் – 4, சின்ன வெங்காயம் – 10 பல் போட்டு நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் பிரவுன் கலர் வரும் வரை நன்றாக வதக்கி விடுங்கள். கருவேப்பிலை ஒரு கொத்து சேர்த்து விடுங்கள். அதன் பின்பு மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் விழுதை ஊற்றி நான்கு நிமிடம் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.

பிறகு வேக வைத்திருக்கும் துவரம் பருப்பை, கொதித்துக் கொண்டிருக்கும் மசாலாவோடு, ஊற்றி தேவையான அளவு தண்ணீரையும் ஊற்றி, நன்றாக கலந்து விட்டு சாம்பாரை தளதளவென கொதிக்கவிட்டு இறுதியாக கொத்தமல்லி தழையை தூவி இறக்கினால் இந்த சாம்பாரின் வாசம் அட்டகாசமாக இருக்கும். படிப்பதற்கு கொஞ்சம் சிரமமாக இருந்தாலும், இந்த சாம்பார் வைப்பது ரொம்ப ரொம்ப ஈஸிதான்.

இதையும் படிக்கலாமே: உடல் ஆரோக்கியத்தை காக்கும் வேர்க்கடலை பொடி கிச்சடி. பெயரே வித்தியாசமா இருக்கு இல்ல டேஸ்ட்டும் ரொம்ப வித்தியாசமா, சூப்பரா இருக்குங்க வாங்க எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

பின்குறிப்பு: இந்த சாம்பாரில் தேங்காய் வெங்காயம் தக்காளி எல்லாம் அரைத்து இருப்பதால் கொஞ்சம் திக்காக கிடைக்கும். தேவையான அளவு தண்ணீரை சாம்பார் கொதிக்கும்போதே ஊற்றி விடுங்கள். ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -