ஒருமுறை இப்படி அரைத்து வைத்த ரசம் செய்யுங்கள் பருப்பு ரசத்துக்கு ஈடான அதே சுவையில் இருக்கும்

rasam
- Advertisement -

ரசம் என்பது பொதுவாக அனைவரது வீட்டிலும் தினமும் செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருளாகும். 5 மிளகு கையிலிருந்தால் போதும். எதிரி வீட்டிலும் விருந்து உண்ணலாம் என்பது பழமொழி. அந்த அளவிற்கு விஷத்தின் தன்மையை கூட முறியடிக்கக் கூடிய வல்லமை மிளகிற்க்கு உள்ளது. அவ்வாறு உடலுக்கும் ஆரோக்கியம் கொடுக்கக்கூடிய இந்த மிளகை தினமும் உணவில் சிறிதளவாவது சேர்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக இப்படி ரசம் வைத்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவது மிகவும் நல்லதாகும். எந்த வித உணவு வகைகளை சாப்பிட்டாலும் இறுதியாக ஒரு கை பிடி சாதத்துடன் ரசம் சேர்த்து சாப்பிட்டால் எளிதாக ஜீரணமாகிவிடும். எந்த ஒரு அஜீரண கோளாறும் வந்துவிடாது. அப்படி கல்யாண வீடுகளில் செய்யும் பருப்பு ரசத்துக்கு தனிப்பட்ட சுவை இருக்கிறது. அது போல வீட்டிலேயும் இப்படி அரைத்து வைத்த ரசம் செய்வது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:
தனியா – 2 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், மிளகு – ஒரு ஸ்பூன், வரமிளகாய் – 2, துவரம்பருப்பு – இரண்டு ஸ்பூன், பெருங்காயம் – கால் ஸ்பூன், பூண்டு – 6 பல், புளி – எலுமிச்சம்பழ அளவு, தக்காளி – 2, சின்ன வெங்காயம் – 1, கருவேப்பிலை – ஒரு கைப்பிடி, கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி, மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், எண்ணெய் – 2 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் எலுமிச்சை அளவு புளியை தண்ணீரில் ஊறவைத்து, அதனுடன் 200 கிராம் தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும். பிறகு 2 தக்காளியை நான்கு துண்டுகளாக அரிந்து, அவற்றை நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஆறு பல் பூண்டை சிறிய உரலில் வைத்து தட்டி வைக்க வேண்டும்.

அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, அதில் 2 ஸ்பூன் துவரம் பருப்பை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். பிறகு இதனுடன் 2 ஸ்பூன் தனியா, ஒரு ஸ்பூன் மிளகு, ஒன்றரை ஸ்பூன் சீரகம் மற்றும் ஒரு வரமிளகாய் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். பிறகு கால் ஸ்பூன் பெருங்காயம், 3 சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி விட்டு அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

- Advertisement -

பிறகு இவை அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஒருமுறை அரைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் மறுபடியும் கடாயில் எண்ணெய் சேர்த்து, எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் ஒரு வரமிளகாய் சேர்த்து வதக்கி விட வேண்டும்.

பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து விட வேண்டும். லேசாக கொதி வரும் பக்குவத்தில் தட்டி வைத்துள்ள பூண்டு சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு இதனுடன் அரைத்து வைத்துள்ள புளிக்கரைசலையும் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பின்னர் இவற்றுடன் உப்பு, மஞ்சள்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி அனைத்தையும் சேர்த்து லேசாக கொதி வர ஆரம்பித்ததும் அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

- Advertisement -