உங்களுக்கு துரதிர்ஷ்டசாலி என்ற பட்டம் உள்ளதா? வருடத்திற்கு ஒரு முறை குளித்தால் போதும், நீங்கள் அதிர்ஷ்டசாலியாக மாறலாம்.

bathing
- Advertisement -

நிறைய பேருக்கு வாழ்க்கையில், ‘அதிர்ஷ்டம் கெட்டவன், துரதிர்ஷ்டசாலி, இவர்கள் தொட்டால் எந்த காரியமும் விளங்காது’, என்ற பட்டம் இருக்கும். இதனாலேயே அவர்களால் வாழ்க்கையில் முன்னேற முடியாத சூழ்நிலை அமைந்து விடும். குறிப்பிட்ட ஒரு நபரைப் பற்றி அடுத்தவர்கள், குறை கூறிக் கொண்டே இருந்தால் அந்த நபருக்கு, தாழ்வான மனப்பான்மை வந்து, தான் ஒரு துரதிர்ஷ்டசாலி என்ற அழுத்தம் ஏற்பட்டு, பின்பு அவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இல்லாமல் கூட போய்விடும். நிறைய மனிதர்களை நாம் நம்முடைய வாழ்க்கையின் அனுபவத்தில் இப்படி சந்தித்திருப்போம். அதாவது, சிலர் எதிரில் வந்தால் கூட, அவர்கள் ராசி கெட்டவர்கள் என்று சொல்லி ஒதுக்கி வைத்திருப்பார்கள்.

sad

இவர்கள் முகத்தில் முழித்தால் நல்ல காரியம் நடக்காது, என்று சில பேரை, அவர்கள் வீட்டில் இருப்பவர்களும், அக்கம்பக்கத்தில் இருப்பவர்களும், உறவினர்களும் கூட வைத்திருப்பார்கள். இதேபோல் சில பேருக்கு, சில நாட்களில் சில விஷயங்களை நடத்தினால், அந்த விசேஷங்களில் பிரச்சனைகள் வரும் என்று அவர்களாகவே எதிர்மறையாக நினைத்துக் கொள்வார்கள். முதலில் எதிர்மறை எண்ணங்கள் உள்ளவர்கள், தங்களுடைய எண்ணங்களை நேர்மறையாக மாற்றிக்கொள்ள வேண்டும். ஒருவருடைய நேர்மறை எண்ணமே அவர்களை அதிர்ஷ்டசாலியாக மாற்றும் என்பதில் சந்தேகமே கிடையாது. இது முதல் பரிகாரம்.

- Advertisement -

இப்படிப்பட்ட துரதிர்ஷ்டசாலி என்ற பட்டம் உங்களுக்கு இருந்தாலும் சரி, அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இருந்தாலும் சரி, அவர்களுக்கு அந்த துரதிர்ஷ்டசாலி பட்டத்தை போக்குவதற்காக ஒரு எளிமையான பரிகாரம் நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. தலைப்பைப் படித்தவுடன் வருடத்திற்கு ஒரு முறை குளித்தால் போதுமா? அதிர்ஷ்டசாலியாக மாறிவிட முடியுமா? என்று, வருடத்தில் இருக்கக்கூடிய மீதமுள்ள நாட்கள் அனைத்தையும் குடிக்காமலேயே விட்டுவிடாதீர்கள். வருடத்திற்கு ஒரு முறை இந்த விசேஷ குளியலை குளிக்க வேண்டும். அது என்ன குளியல்? எப்படி குளிக்க வேண்டும்? என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

arali

நம்மில் பல பேருக்கு தெரிந்த பூ அரளிப்பூ. இந்த அரளிப்பூ விற்கு துரதிர்ஷ்டத்தை போக்கக்கூடிய சக்தி அதிகமாகவே உள்ளது, என்று நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு மட்டுமல்ல தெய்வங்களுக்கும் கூட, சில சமயங்களில் கஷ்டகாலம் வரும். அப்படி அந்த தெய்வங்களுக்கு வரக்கூடிய இக்கட்டான சூழ்நிலையை தகர்த்தெறிய, நம்முடைய முன்னோர்கள் இந்த அரளிப்பூவை வைத்து தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்படுவதாக சில குறிப்புகளில் சொல்லி வைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

தெய்வங்களுக்கே கஷ்டம் வரும் போது, சாதாரண மனிதர்கள் நாம். நமக்கு கஷ்டம் வராதா? சரி, நீங்கள் குளிக்கும் போது, நீங்கள் குளிக்கும் தண்ணீரில் ஒரு கைப்பிடி செவ்வரளி பூவை போட்டு வைத்து விடுங்கள். 5 லிருந்து 10 நிமிடங்கள் அந்த செவ்வரளி பூ தண்ணீரிலேயே இருக்கட்டும். அதன்பின்பு அந்த  அந்த தண்ணீரை எடுத்து, உங்கள் தலைகளில் எப்போதும் குளிப்பது போல், ஊற்றிக் கொள்ளலாம்.

Arali

ஒரு 11 முறை நீங்கள் குறிக்கின்ற கப்பில், அந்த தண்ணீரை மோந்து உங்கள் தலையில் ஊற்றிக் கொள்ளுங்கள், அந்தப் பூக்கள் உங்கள் தலை மேல் விழுந்தால் பரவாயில்லை. உங்கள் குளியலறையில் விழுந்தாலும் பரவாயில்லை. முடிந்தவரை சூரிய உதயத்திற்கு முன்பாக இந்த குளியலை குளிப்பது நல்லது. குளித்து முடித்து விட்டு உங்களது குளியலறையை சுத்தம் செய்து கொள்ளலாம்.

saturday

வருடத்திற்கு ஒரு முறை ஏதாவது ஒரு சனிக்கிழமையில், இந்தக் குளியலை குளித்தாலே போதும். உங்களை பிடித்த பீடை உங்களை பிடித்த துரதிர்ஷ்டம், உங்களை பிடித்த கெட்டது எல்லாமே போய்விடும் என்பதில் சந்தேகமே இருக்காது. நிச்சயம் நீங்களும் அதிர்ஷ்டசாலியாக மாறுவீர்கள். என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -