வேண்டிய வரம் தரும் வராஹி காயத்ரி மந்திரம்

Varahi-amman

வராக அவதாரம் எடுத்த திருமாலின் அம்சமாக கருதப்படுகிறாள் வராஹி அம்மன். இவள் வராஹம் என்று சொல்லக்கூடிய பன்றி முகத்தோடும், மனித உடலோடும், எட்டு கரத்தோடும், அதில் ஒரு கரத்தில் கலப்பையை ஏந்தியவாறும் சிம்ம வாகனத்தில் காட்சி தந்து தன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள் வராகி அம்மன். வீரநாரி, மகாசேனா, பஞ்சமீ என பல பெயர்களை கொண்ட இவள் துர்க்கையின் படை சேனாதிபதியாக இருந்து வெற்றியை மட்டுமே ஈட்டியவள். ராஜ ராஜ சோழன் போருக்கு சொல்லும் முன்பு வராகி அம்மனை வணங்குவதை வழக்கமாக வைத்திருந்தார் என்று சில குறிப்புகள் கூறுகின்றன. இவள் உக்கிரமான தெய்வமாக பார்க்கப்பட்டாலும் அன்பை பொழிவதில் அன்னைக்கு நிகரானவன். இவளுக்குரிய காயத்ரி மந்திரம் அதை ஜெபிப்போருக்கு கேட்ட வரங்களை மிக விரைவில் தரக்கூடியவள் வராகி அம்மன்.

varahi amman

வராகி காயத்ரி மந்திரம்:

ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்

இந்த மந்திரத்தை தினம் தோறும் 108 முறை ஜபிப்பது சிறந்தது. இந்த மந்திரத்தை ஜெபிப்போருக்கு எதையும் சாதிக்கும் வல்லமை உருவாகும், மனதில் தைரியம் பிறக்கும், கேட்ட வரங்கள் கிடைக்கும். விழுப்புரம் மாவட்டம், சாலாமேடு ஈனும் ஊரில் வராகி அம்மனுக்கு ஒரு கோவில் உள்ளது. இது அஷ்டவராகி கோயில் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலே வராகி அம்மனுக்கு தோன்றிய உலகின் முதல் கோவில் என்று கூறப்படுகிறது. இங்கு சென்று வராஹி அம்மனை வழிபட்டு வந்தால் அவளின் பரிபூரண அருள் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே:
பூர்வ ஜென்ம பாவம் போக்கும் அகத்தியர் மந்திரம்

English Overview:
Varahi Amman is very powerful Goddess. Here Varahi Amman Gayatri mantra in Tamil is given. If one chant Varahi Gayatri mantra then he will get the ability to manage all the problems. He will become brave and powerful. This mantra is also called as Varahi Manthiram in Tamil.