உங்களுக்கு அர்த்தாஷ்டம சனி நடைபெறும் போது செய்ய வேண்டிய பரிகாரங்கள் இதோ

poosam-natchathiram sani

ஒன்பது கோள்களில் மிகவும் சக்தி வாய்ந்தவராகவும், நமது வாழ்நாளை தீர்மானிக்கும் ஆயுள்காரகனாகவும் சனி பகவான் இருக்கிறார். ஜாதகத்தில் இருக்கிற 12 ராசிகளையும் சனி கிரகம் கடந்து முடிக்க 30 ஆண்டுகள் எடுத்து கொள்கிறது. எனவே சனிக்கு மந்தன் என்கிற மற்றொரு பெயர் உண்டு. சனி பெயர்ச்சி ஜென்ம சனி, ஏழரை சனி என பல வகைப்படுகிறது. அதில் அர்த்தாஷ்டம சனி பற்றி விரிவாக இங்கு அறிந்து கொள்ளலாம்.

ஒருவரின் ஜாதகத்தில் அவரின் ராசிக்கு 4 ஆம் வீட்டில் சனி கிரகம் சஞ்சரிக்கும் காலமே அர்த்தாஷ்டம சனி காலம் எனப்படுகிறது. இந்த அர்த்தாஷ்டம சனி ஒருவருக்கு ஏற்படும் போது அதிகம் மன சஞ்சலங்கள் ஏற்படும், உடல் நலம் அடிக்கடி பாதிப்படையும், வேலையில்லா திண்டாட்டம் உருவாகும். வியாபாரம், தொழில் லாபங்கள் குறைதல், பிரச்சனைகள் ஏற்படும். எப்போதும் மனம் ஏதோ சிந்தித்துக் கொண்டே சஞ்சலமான நிலையில் இருக்கும். வீண் அலைச்சல்கள், மன நிம்மதியற்ற நிலை உருவாகும்.

அர்த்தாஷ்டம சனி நடைபெறும் நபர்கள் வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு வெண்தாமரை மலர் மாலை சாற்றி, புனுகு பூசி, வெண் பூசணி சாம்பார் கலந்த சாதம், அதிரசம் போன்றவற்றை படையல் போட்டு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். தொடர்ந்து 9 சனிக்கிழமை சனீஸ்வரனுக்கு நல்எண்ணையுடன், எள் தீபமும் ஏற்றி, அர்ச்சனை செய்து வர வேண்டும். சதுர்த்தி தினம் அல்லது அஷ்டமி தினத்திலோ பைரவருக்கு அர்ச்சனை செய்து வந்தால் அர்த்தாஷ்டம சனியால் ஏற்படக்கூடிய பாதிப்புகள், தொல்லைகள் விலகும்.

sani bagavaan

சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவதோடு, ஹனுமான் சாலிசா படித்து வந்தால் அர்த்தாஷ்டம சனி பாதிப்புகள் அதிகம் ஏற்படாமல் காக்கும். உடல் ஊனமுற்ற ஏழைகளுக்கு அன்னதானம் செய்து, புத்தாடைகளை தானம் வழங்குவதாலும் அர்த்தாஷ்டம சனி பாதிப்புகள் நீங்கும். சனி கிழமைகள் தோறும் காகங்களுக்கு சோறு வைத்து வர வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
புதன் கிழமை விரதம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Ardhastama sani pariharam in Tamil. It is also called as Ardhastama sani in Tamil or Sani bhagavan in Tamil or Saneeswaran in Tamil or Sani bhagawan in Tamil.