விடாமல் துரத்தும் கஷ்டங்கள் கூட வீட்டை விட்டு விலகிச் செல்ல, விநாயகரை நினைத்து இந்த 2 தீபங்களை ஏற்றினால் போதும்.

pillaiyar-prayer
- Advertisement -

சில கஷ்டங்கள் விடாப்பிடியாக நம் வீட்டில் சம்மணம் போட்டு அமர்ந்து கொண்டிருக்கும். அந்த ஒரு குறிப்பிட்ட கஷ்டத்தை சரி செய்வதற்கு நாம் ஏதேதோ செய்து பார்த்து இருப்போம். அதற்கான தீர்வு மட்டும் கிடைத்திருக்காது. அப்படிப்பட்ட கண்கலங்க வைக்கும் கஷ்டத்தை கூட சரி செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். கொஞ்சம் சிரமப்பட்டாவது இந்த ஒரு பரிகாரத்தை வீட்டில் செய்து பாருங்கள். இந்த உலகில் மீதம் இருக்கும் வாழ்க்கையை எப்படித் தான் தள்ளப் போகிறோம் என்று யோசிப்பவர்களுக்கு கூட ஒரு நல்ல வழி கிடைக்க இந்த பரிகாரம் கை மேல் பலன் கொடுக்கும்.

இந்த பரிகார தீபத்தை வீட்டிலேயே ஏற்றலாம். செவ்வாய்க்கிழமை அன்று இந்த தீபம் ஏற்றப்பட வேண்டும். நேரம் காலை அல்லது மாலை உங்கள் சௌகரியபடி ஏற்றிக் கொள்ளுங்கள். இரண்டு மண் அகல் விளக்குகளை எடுத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் பெரிய விளக்காக இருந்தால் பரவாயில்லை. தீபம் சுடர் விட்டு இரண்டு மணி நேரமாவது எரிய வேண்டும்.

- Advertisement -

இரண்டு மண் அகல் விளக்குகளுக்கும் மஞ்சள் குங்குமப்பொட்டு வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெயில் அருகம்புல்லை சிறிய சிறிய துண்டுகளாக உடைத்து போட்டுக் கொள்ள வேண்டும். உங்கள் விரல்களால் அருகம்புல்லை கிள்ளி எடுத்தால் சிறிய சிறிய துண்டுகளாக வந்துவிடும். அந்த அருகம்புல்லை எண்ணெயில் போட்டு தாமரை தண்டு திரி போட்டு தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.

இந்த அருகம்புல் தீபத்திற்கு முன்பாக அமர்ந்து உங்களுடைய கஷ்டங்களை விநாயகரிடம் சொல்லி அந்த கஷ்டங்கள் எல்லாம் சரியாக வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டால் கஷ்டங்களுக்கு உண்டான தீர்வு ஒரு சில வாரங்களில் நிச்சயம் கிடைக்கும். இந்த தீபத்தை தொடர்ந்து 11 வாரங்கள் ஏற்றலாம். அதற்கு மேல் ஏற்றினாலும் தவறு கிடையாது. முடியாதவர்கள் மூன்று வாரம் ஏற்றினாலும் தவறு கிடையாது.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செய்வதோடு சேர்த்து முடிந்தால் தினம்தோறும் விநாயகர் கோவிலுக்கு சென்று மூன்று தொகுப்பு கரணம் போட்டு விநாயகரை மூன்று முறை வளம் வந்து வழிபாடு செய்ய வேண்டும். சங்கடஹர சதுர்த்தி அன்று சூரை தேங்காய் உடைக்க வேண்டும். குறிப்பாக தேய்பிறை சங்கடஹர சதுர்த்தி வரும்போது பிள்ளையாருக்கு மோதகம் அல்லது கொழுக்கட்டையை பிரசாதமாக செய்து வைத்து கோவிலில் நிவேதனம் செய்து அங்கு வரும் பக்தர்களுக்கு அதை உங்கள் கைகளால் பிரசாதமாக கொடுங்கள். குழந்தைகளுக்கு இந்த மோதகத்தை பிரசாதமாக கொடுப்பது சிறப்பான பலன்களை கொடுக்கும்.

வீட்டில் இருக்கும் பெண்கள் தங்களுடைய குடும்பத்தின் நலனுக்காக மாதம் தோறும் வரும் தேய்பிறை சங்கடஹர சதுர்த்தி அன்று எதுவும் சாப்பிடாமல் ஒருபொழுது இருந்து விநாயகர் வழிபாடு செய்தால் அந்த குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும் என்று ஒரு நம்பிக்கையும் இருக்கிறது. வழிபாட்டின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -