1 கப் ரேஷன் அரிசி மாவு இருந்தால் போதுமே இட்லி, தோசையே தேவையில்லை! இப்படிக்கூட 5 நிமிடத்தில் அடை சுட்டு சாப்பிடலாமே!

arisi-maavu-adai
- Advertisement -

தினமும் இட்லி, தோசை சாப்பிட்டு அலுத்துப் போனவர்களுக்கு இந்த அரிசி மாவு அடை வித்தியாசமான சுவையைக் கொடுக்கும். ரேஷன் அரிசியில் செய்யப்பட்ட பச்சரிசி மாவு ஒரு கப் இருந்தால் போதும், சட்டென காய்கறிகளை நறுக்கி சேர்த்து அடை போல தட்டி எடுத்து விடலாம். ரொம்ப ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய இந்த அடை ஆரோக்கியம் மிகுந்ததும் கூட, எனவே நீங்களும் இதே முறையில் உங்கள் வீட்டில் முயற்சி செய்து பார்த்து பயனடைய அதை எப்படி செய்ய வேண்டும்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

arisimavu

அரிசி மாவு அடை செய்ய தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – ஒரு கப், நறுக்கிய வெங்காயம் – ஒரு கப், உப்பு – தேவையான அளவு, நறுக்கிய கொத்தமல்லி – ஒரு கைப்பிடி, நறுக்கிய பச்சை மிளகாய் – 2, நறுக்கிய கறிவேப்பிலை – 2 கொத்து.

- Advertisement -

அரிசி மாவு அடை செய்முறை விளக்கம்:
முதலில் ரேஷன் அரிசியில் பச்சரிசியை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இந்த அரிசியை சுத்தம் செய்து மெஷினில் கொடுத்து மாவாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். நாம் கடைகளில் விலை கொடுத்து வாங்கும் பச்சரிசி மாவிலும் இந்த அடையை செய்து சாப்பிடலாம். ஒரு கப் பச்சரிசி மாவுடன் அதே அளவிற்கு ஒரு கப் பொடிப் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த மாவுக்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணி தெளித்து பிசைந்து கொள்ள வேண்டும்.

rice-flour-adai

பொடிப்பொடியாக நறுக்கிய மல்லித்தழை ஒரு கைப்பிடி, அதே போல பொடிப் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சிறிதளவு சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் 2 பச்சை மிளகாய்களை பொடிப் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து கெட்டியாக வடை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். கைகளில் எடுத்து உருட்டினால் பந்து போல உருண்டு வர வேண்டும். அந்த அளவிற்கு தண்ணீர் சேர்த்தால் போதும். பின்னர் ஒரு வாழை இலையை வட்டமாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். வட்டமாக வெட்டுவதற்கு ஏதாவது ஒரு தட்டு போட்டு சுற்றிலும் கத்தியை கொண்டு வெட்டி எடுக்கலாம்.

- Advertisement -

உங்களிடம் வாழை இலை இல்லை என்றால் ஈரமான காட்டன் துணியை எடுத்துக் கொள்ளலாம். ஒரு கை அளவிற்கு உருண்டையாக மாவை உருட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதனை வாழை இலை அல்லது ஈரத்துணியில் வைத்து வட்டமாக தட்ட வேண்டும். எந்த அளவிற்கு பெரிதாக தட்ட முடியுமோ, அந்த அளவிற்கு பெரிதாக தட்டி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு நான்ஸ்டிக் தவா அல்லது தோசைக்கல்லை வையுங்கள். தவா சூடானதும் எல்லா இடங்களிலும் இலேசாக எண்ணெயை தடவிக் கொள்ளுங்கள். பின்னர் இந்த மாவை அப்படியே சேர்த்து வாழை இலையை எடுத்து விடுங்கள். சுற்றிலும் எண்ணெய் விட்டுக் கொள்ளுங்கள்.

rice-flour-adai1

வாழை இலையில் 2 முதல் 3 அடை வரை செய்யலாம். பிறகு மாற்ற வேண்டும். பின்னர் ஒருபுறம் வெந்ததும், இன்னொரு புறம் திருப்பி போட்டு கொள்ளுங்கள். இருபுறமும் நன்கு வெந்ததும் சுடச்சுட தட்டில் வைத்து பரிமாற வேண்டியது தான். ரொம்ப ரொம்ப சுலபமாக ஐந்தே நிமிடத்தில் எல்லா வேலைகளையும் முடித்து விடலாம். இட்லி, தோசை சாப்பிட்டு புளித்து போனவர்கள் இந்த முறையில் ஒரு முறை அரிசி மாவு அடை செய்து பாருங்கள்! நிச்சயம் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். நீங்களும் இதே முறையில் வீட்டில் செய்து வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடுங்கள்.

- Advertisement -