இட்லி மாவு இல்லனா 1 கப் அரிசி மாவு இருந்தா 5 நிமிடத்தில் கிரிஸ்பியான பேப்பர் தோசை இப்படி கூட தயார் செய்து விடலாமே!

- Advertisement -

இட்லி, தோசை மாவு கைவசம் இல்லை என்றால் அவசரத்திற்கு இந்த தோசை செய்து சாப்பிடலாம். ஒரு கப் அரிசி மாவு இருந்தா போதும் ரவை தோசை எப்படி பேப்பர் போல கிரிஸ்பியாக இருக்குமோ அதே போல சூப்பரான மொறுமொறு கிரிஸ்பி தோசை ஐந்து நிமிடத்தில் சட்டென செய்து அசத்தலாம். அரிசி மாவுல கிரிஸ்பியான தோசை எப்படி செய்வதுன்னு குழப்பமா இருக்கா? இந்த டிரிக்ஸ் அண்ட் டிப்ஸ் ஃபாலோ பண்ணா நீங்களும் செய்யலாம்! அரிசி மாவு தோசை செய்ய தேவையான பொருட்கள் என்ன? எப்படி செய்வது? என்கிற ரகசியத்தை அறிந்து கொள்ள இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்!

rice-flour

அரிசி மாவு தோசை செய்ய தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – ஒரு கப், தண்ணீர் – இரண்டரை கப், பெரிய வெங்காயம் – ஒன்று, கேரட் – ஒன்று, பச்சை மிளகாய் – ஒன்று, இஞ்சி – ஒரு துண்டு, சில்லி ஃப்ளேக்ஸ் – அரை ஸ்பூன், கொத்தமல்லித் தழை – ஒரு கைப்பிடி, கறிவேப்பிலை – ஒரு கொத்து, உப்பு – தேவையான அளவுக்கு, மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்.

- Advertisement -

அரிசி மாவு தோசை செய்முறை விளக்கம்:
முதலில் அரிசி மாவை ஒரு கப் அளவிற்கு அளந்து எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கும் அரிசி மாவு புழுங்கல் அரிசி, பச்சரிசி என்று எந்த அரிசியாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு கப் அரிசி மாவுக்கு இரண்டரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். எந்த கப்பில் அரிசி மாவு எடுத்தீர்களோ அதே கப்பில் தண்ணீரையும் அளந்து ஊற்றுங்கள். ரவா தோசை செய்ய தோசை மாவு நீர்க்க இருக்க வேண்டும். அதே போல இந்த தோசை சுடவும் தண்ணீர் போல மாவு நீர்க்க இருக்க வேண்டும்.

dosai1

அதனுடன் ஒரு பெரிய வெங்காயத்தை தோல் உரித்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு குட்டி குட்டியாக பொடிப் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய கேரட்டை தோல் உரித்து துருவியில் துருவி சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு பெரிய பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி சேருங்கள். ஒரு சிறிய உண்டு இஞ்சியை தோல் நீக்கி துருவலில் துருவி சேர்த்துக் கொள்ளுங்கள். சில்லி ஃப்ளேக்ஸ் எனப்படும் வர மிளகாய் பொடியை அரை ஸ்பூன் அளவிற்கு சேர்த்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.

- Advertisement -

கைவசம் சில்லி ஃப்ளேக்ஸ் இல்லை என்றால் நாலைந்து வர மிளகாய்களை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி பொடியாக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கைப்பிடி அளவிற்கு கொத்தமல்லி இலைகளை நன்கு கழுவி சுத்தம் செய்து பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு கொத்து கறிவேப்பிலையை உருவி கழுவி பொடிப் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். மஞ்சள்தூள் கால் டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள். அப்போது தான் தோசை கலர்ஃபுல்லாக இருக்கும். இப்பொழுது இந்த மாவிற்கு தேவையான அளவிற்கு உப்பு போட்டுக் கொள்ளுங்கள்.

dosai-crispy

இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து நீர்க்க கரைத்து வைத்துள்ள இந்த அரிசி மாவு தோசை புளிக்க வைக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. சூடாக இருக்கும் நான்ஸ்டிக் தவாவில் ஒரு டம்ளர் மாவை எடுத்து சுற்றிலும் ஊற்றி பின்னர் நடுவிலும் ஊற்றி முழுமைப்படுத்த வேண்டும். ரவை தோசை எப்படி சுடுவோம் அது போல சுட்டால் தான் இந்த அரிசி மாவு தோசை கிரிஸ்பியாக சூப்பராக வரும். அலாதியான சுவை கொண்ட இந்த அரிசி மாவு தோசை ரொம்ப சுலபமாக இதே முறையில் நீங்களும் செய்து உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரின் மனதிலும் இடம் பிடித்து விடுங்கள்.

- Advertisement -