கடைகளில் விற்கும் அதே சுவையில், சூப்பர் தட்டையை சுலபமாக எப்படி செய்வது? வீட்டில் இருக்கும் ரேஷன் பச்சரிசியிலும் இந்த தடையை செஞ்சிடலாம். சூப்பர் தட்டையை தட்ட யாருக்கும் தெரியாத சின்ன சின்ன டிப்சும் உங்களுக்காக!

உங்க வீட்டில இருக்கக்கூடிய ரேஷன் பச்சரிசியை வைத்தும் இந்த தடையை செய்யலாம் அல்லது மாவு பச்சரிசியை கடையிலிருந்து வாங்கியும் இந்த தடையை செய்யலாம். எதுவாக இருந்தாலும், கடையில் வாங்க கூடிய அளவிற்கு சுவை இந்தத் தட்டையில் வரும். கம கம வாசத்தோடு தட்டை செய்வதற்கான சீக்ரெட் டிப்ஸும் உங்களுக்காக! இந்த தீபாவளிக்கு இந்த தட்டையை செய்து எல்லோருக்கும் தந்து மகிழ்ச்சியாக பண்டிகையை கொண்டாடுங்கள்.

தட்டை செய்ய தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 1 கிலோ, கடலைப் பருப்பு –  100 கிராம், கருவேப்பிலை – 4 கொத்து (பொடியாக நறுக்கியது), பெருங்காயம் – 1/4 ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 15(உங்கள் காரத்திற்கு ஏற்ப கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம்.), பூண்டு – 100 கிராம், உப்பு தேவையான அளவு, எண்ணெய் தட்டையை பொறிப்பதற்கு ஏற்ப

Step 1:
முதலில் 1 கிலோ அளவு பச்சரிசியை எடுத்துக் கொள்ளுங்கள். கடையில் வாங்கிய மாவு பச்சரிசி ஆக இருந்தால் சாதாரணமாக 3 முறை கழுவினால் போதும். இதுவே ரேசன் பச்சரிசி யாக இருந்தால் கொஞ்சமாக உப்பு சேர்த்து மூன்றிலிருந்து நான்கு முறை கழுவிக் கொள்ளவேண்டும். அதன் பின்பு அதில் இருக்கும் எல்லா தண்ணீரையும் வடித்துவிட்டு, நல்ல தண்ணீரை ஊற்றி 3 மணி நேரம் ஊற வைத்து விடுங்கள். அரிசி 3 மணி நேரம் ஊறியதும், அரிசியில் இருந்து மறுபடி தண்ணீரை மொத்தத்தையும் வடிகட்டிவிட்டு, அந்த அரிசியை மட்டும் காட்டன் துணியில் பரவலாகப் போட்டு 45 நிமிடங்கள் வரை ஃபேன் காற்றிலேயே காயவைத்து எடுக்கலாம்.

Step 2:
இப்போது இந்த அரிசியை ரைஸ் மில்லில் கொடுத்து அரைத்து கொள்ளலாம். மிக்ஸியில் போட்டும் அரைத்துக் கொள்ளலாம். அரிசியை கட்டாயம் சல்லடையில் சலித்து விட்டு தான் தட்டை செய்ய பயன்படுத்த வேண்டும். சலித்த மாவை கடாயில் போட்டு லேசாக சூடுபடுத்தி எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டு நிமிடம் வரை சூடு படுத்தினால் போதும். ரொம்பவும் வறுத்து விடக்கூடாது. இப்போது தட்டை செய்வதற்கு மாவு தயார். மாவு அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

Step 3:
அடுத்தபடியாக மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் காய்ந்த மிளகாயையும் மேலே சொல்லப்பட்டுள்ள 100 கிராம் பூண்டில் இருந்து 50 கிராம் பூண்டை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு, மிளகாயையும் பூண்டையும் கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். ரொம்பவும் நைஸாக அரைக்க  வேண்டாம் 85% அரைச்சுக்கோங்க. இந்த விழுதும் அப்படியே இருக்கட்டும். (Tip 1 அரைத்த மிளகாய் தூளுக்கு பதிலாக, மிளகாயை இப்படி விழுதாக சேர்த்தால் தட்டையின் சுவை அதிகமாக இருக்கும்.)

milagai-vizhuthu

Step 4:
கடலைப்பருப்பை தண்ணீரில் போட்டு 1 மணி நேரம் நன்றாக ஊற வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மணிநேரம் ஊறிய பின்பு கடலை பருப்பில் இருந்து தண்ணீரை வடித்து விட்டு, அந்த கடலை பருப்பை மட்டும் நாம் பயன்படுத்த போகின்றோம்.

100 கிராம் பூண்டில், ஐம்பது கிராம் பூண்டை மிளகாயில் போட்டு அரைத்து விட்டோம். மீதமிருக்கும் 50 கிராம் பூண்டை சின்ன உரலில் போட்டு நன்றாக நச்சு வைத்துக்கொள்ளுங்கள். பூண்டு தோலோடு நச்சு கொள்ள வேண்டும். (Tip 2 பூண்டு தோலுடன் நைய்த்து போடும்போது கடித்துச் சாப்பிடும்போது சூப்பரா இருக்கும்.)

Garlic poondu

Step 5:
இப்போது அகலமான பேஸினில் தயாராக இருக்கும் பச்சரிசி மாவு, மிளகாய் பூண்டு சேர்த்து அரைத்த விழுது, ஊற வைத்த கடலைப்பருப்பு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, பெருங்காயம், நைய்த்து வைத்திருக்கும் பூண்டு, தேவையான அளவு உப்பு இந்தப் பொருட்களையெல்லாம் ஒன்றாக சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பிசைவது போல பிசைய தொடங்க வேண்டும்.

thattai2

பக்குவமும் சப்பாத்தி மாவு பிசையும் பக்குவத்தில் இருந்தால் போதும். சரியான முறையில் தயாரான பின்பு தட்டைக்கு தேவையான வடிவத்தில் உருண்டை பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கவரின் மேல் எண்ணெய் தடவி சிறு சிறு உருண்டைகளை வைத்து, மேலே ஒரு கவரை வைத்து தட்டையான கிண்ணத்தை அழுத்தி எடுத்தும் தட்டை தயாரித்தாலும் பரவாயில்லை.

thattai2

முடிந்தால் உங்கள் கைகளாலேயே தட்டையை தட்டி தயார் செய்து கொண்டாலும் பரவாயில்லை. (Tip 2 தட்டிய தடைகளின் மேலே உங்கள் வீட்டில் போர்க் ஸ்பூன் இருந்தால் அதன் மூலம் கொஞ்சம் ஓட்டைகளை போட்டுக் கொள்ளுங்கள். அப்படி இல்லையென்றால் வடை சுடும் குச்சையோ அல்லது பணியாரம் சுடும் குச்சி எது இருந்தாலும் அதை நன்றாக கழுவிவிட்டு, தட்டை யின் மேலே 4 ஓட்டைகளைப் போட்டு விட்டுத் தட்டையை சுட்டால் உப்பி வராமல், கடையில் கிடைத்தது போல கிடைக்கும்.)

thattai

இப்படியாக உங்களுடைய விருப்பம் போல் தடைகளை தட்டி ஒரு தட்டின் மீது அல்லது காட்டன் துணியின் மீது அடுக்கி வைத்துக் கொள்ளுங்கள். தட்டை தட்டும் போது எல்லா பக்கங்களும் சரியான தடிமனில் இருக்க வேண்டும். ஓரங்கள் மட்டும் மெல்லிசாக இருக்கக்கூடாது. நடுப் பகுதி தடிமனாகவும் இருக்கக் கூடாது.

thattai

Step 6:
எண்ணெயை நன்றாக சூடுபடுத்தி விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு, தட்டைகளை ஒவ்வொன்றாக கடாயில் போட்டு, பொன்னிறமாக சிவந்ததும் எடுத்துப் பாருங்கள்! இந்த தட்டை நன்றாக ஆறிய பின்பு மொறு மொறு சுவையில் கமகம வாசத்தோடு காரசாரமாக சூப்பரா இருக்கும். உங்களுக்கு இந்த டிப்ஸ் பிடித்திருந்தால் உங்க வீட்லயும் இந்த தீபாவளிக்கு ட்ரை பண்ணி பாருங்க!

இதையும் படிக்கலாமே
பருப்பு சேர்க்காமல் டிபன் சாம்பார் ஒருவாட்டி இப்படி வச்சு பாருங்க! இந்த சாம்பாரின் வாசம் பக்கத்து வீடு வரை வீசும். ஹோட்டல் சாம்பார் போல் சூப்பரா இருக்கும்.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.