பருப்பு சேர்க்காமல் டிபன் சாம்பார் ஒருவாட்டி இப்படி வச்சு பாருங்க! இந்த சாம்பாரின் வாசம் பக்கத்து வீடு வரை வீசும். ஹோட்டல் சாம்பார் போல் சூப்பரா இருக்கும்.

sambar
- Advertisement -

பாசிப் பருப்பு, துவரம் பருப்பு இந்த பருப்பை சேர்த்து தான் சாம்பார் வைக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. பருப்பு சேர்க்காமல் கூட, இட்லி தோசை பொங்கலுக்கு சூப்பரான டிபன் சாம்பாரை செய்ய முடியும். கம கம வாசத்தோடு ஒரு சூப்பரான சாம்பாரை எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஓட்டல் சாம்பாருக்கு நிகரான இந்த சாம்பாரை உங்கள் வீட்டிலும் ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க. பதிவுக்கு செல்லலாமா?

Aravai sambar

Step 1:
முதலில் அடுப்பில் ஒரு குக்கரை வைத்துக் கொள்ளுங்கள். அதில் பழுத்த – 2 பெரிய தக்காளி, பச்சை மிளகாய் – 3, பெரிய வெங்காயம் நறுக்கியது (பெரிய எலுமிச்சைப்பழ அளவு வெங்காயம்) – 1, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், குழம்பு மிளகாய் தூள் அல்லது சாம்பார் பொடி – 1 ஸ்பூன், பூண்டு – 2 பல் தோல் உரித்தது, தேவையான அளவு உப்பு, இந்த பொருட்கள் எல்லாம் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, குக்கரை தயார் செய்து மூடி போட்டு மிதமான தீயில் வைத்து, 2 விசில் விட வேண்டும்.

- Advertisement -

இரண்டு விசில் வந்த பின்பு இந்த விழுதை நன்றாக ஆற வைத்து விட்டு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

sambar-podi1

Step 2:
இப்போது இந்த டிபன் சாம்பாருக்கு ஏற்ற ஒரு பொடியை அரைக்க போகின்றோம். கடாயை அடுப்பில் வைத்து, மல்லி – 2 டேபிள்ஸ்பூன், வர மிளகாய் – 7, சீரகம் – 1 ஸ்பூன், வெந்தயம் – 1/2 ஸ்பூன், மிளகு – ஏழிலிருந்து எட்டு,இந்த பொருட்கள் அனைத்தையும் அந்த கடாயில் சேர்த்து, எண்ணெய் ஊற்றாமல் டிரையாக வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த சாம்பார் பவுடர் எல்லா வகையான டிபன் சாம்பாருருக்கும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. காற்று வெளியில் செல்லாத கண்ணாடி டப்பாவில் போட்டு சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

Step 3:
இப்போது சாம்பாரை தாளித்து விடலாம். ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு – 1/4 ஸ்பூன், சீரகம் – 1/4 ஸ்பூன், வர மிளகாய் – 2, பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன், சின்ன வெங்காயம் – 10, கறிவேப்பிலை 1 கொத்து, இவைகளைப் போட்டு, தாளிக்க வேண்டும்.

Kadaai

சின்ன வெங்காயம் கொஞ்சம் வதங்கிய உடன், மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் தக்காளி சேர்த்த விழுதை ஊற்றி கொள்ளவும். அதன் பின்பு இரண்டாவதாக அரைத்து வைத்திருக்கும் சாம்பார் பொடியில் இருந்து, 1 ஸ்பூன் அளவு சாம்பாரின் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

sambar1

இது கொதித்து கொண்டே இருக்கட்டும். அதற்குள் ஒரு சிறிய கிண்ணத்தில் 2 ஸ்பூன் அளவு கடலைமாவை போட்டு, ஒரு டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி, நன்றாகக் கரைத்து சாம்பாரில் ஊற்றி விடுங்கள். கடலைமாவு சேர்த்து சாம்பார் திக் ஆக ஆரம்பிக்கும். தேவையான அளவு தண்ணீரை முதலிலேயே சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து 15 நிமிடங்கள் வரை சாம்பாரை கொதிக்கவிட்டு, கொத்தமல்லி தழையை தூவி இறக்கினால் கமகம டிபன் சாம்பார் தயார்.

இதையும் படிக்கலாமே
அட இந்த சாதத்தை, பிரியாணி பக்கத்துல வெச்சா, டேஸ்ட்ல பிரியாணியே தோத்தது போயிடுங்க! சூப்பர் ‘வெரைட்டி ரைஸ் ரெசிபி’ உங்களுக்காக!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -