அருமையான ஆரோக்கியம் நிறைந்த எள்ளு சட்னி வீட்டிலேயே இட்லி, தோசைக்கு எளிதாக அரைப்பது எப்படி?

ellu-chutney_tamil
- Advertisement -

ஒரே மாதிரி சட்னி செய்து சாப்பிடாமல் இது போல வித்தியாசமான பொருட்களை வைத்து சட்னி அரைத்து சாப்பிடும் பொழுது அதன் சுவை நமக்கு ரொம்பவே பிடித்து போய்விடும். அந்த வகையில் இட்லி, தோசைக்கு தொட்டுக்க ரொம்பவே ஆரோக்கியம் நிறைந்த அருமையான இந்த எள்ளு சட்னி ரெசிபி எப்படி எளிதாக தயாரிப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

கருப்பு எள்ளு – கால் கப், நல்லெண்ணெய் – ரெண்டு டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன், பூண்டு – நான்கு பற்கள், வரமிளகாய் – 5, சின்ன வெங்காயம் – ஐந்து, தக்காளி – ஒன்று, உப்பு – தேவையான அளவு, புளி – சிறு கோலிகுண்டு அளவு, துருவிய தேங்காய் – கால் கப், தாளிக்க: எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து அரை – டீஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை

இந்த எள்ளு சட்னி செய்வதற்கு முதலில் கருப்பு எள்ளு கால் கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து வாணலி ஒன்றை வையுங்கள். வாணலி சூடானதும் கருப்பு எள்ளை சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் நன்கு ட்ரையாக வறுத்துக் கொள்ள வேண்டும். நல்ல ஒரு வாசம் வீசத் துவங்கும் அந்த சமயத்தில் அடுப்பை அணைத்து அதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பின் அதே வாணலியில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணெய் சேர்த்து காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் ஒரு ஸ்பூன் வெள்ளை உளுந்து சேர்த்து பொன்னிறமாக சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள். பின் நாலு பல் பூண்டை தோலுரித்து சேர்த்து வதக்குங்கள். உங்கள் காரத்திற்கு ஏற்ப வர மிளகாய் காம்பு நீக்கி சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஐந்து சின்ன வெங்காயத்தை தோலுரித்து முழுதாக அப்படியே சேர்த்து வதக்குங்கள்.

- Advertisement -

வெங்காயம் நன்கு சுருள வதங்கி வரும் பொழுது ஒரு மீடியம் சைஸ் தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்குங்கள் இவை மசிய வதங்கி வர வேண்டும். தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து வதக்குங்கள் சீக்கிரம் வதங்கும். பின்னர் ஒரு சிறு கோலி கொண்டு அளவிற்கு புளியை சேர்த்துக் கொள்ளுங்கள். கால் கப் அளவிற்கு தேங்காயை துருவி சேர்த்து ஒரு ரெண்டு நிமிடம் நன்கு பிரட்டி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
ரெண்டே நிமிஷத்துல இட்லி, தோசைக்கு இவ்வளவு சுவையா நல்ல காரசாரமா ஒரு சட்னியை ரெடி பண்ணவே முடியாது. மிஸ் பண்ணம்மா ட்ரை பண்ணி பாருங்க

பிறகு அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் அறிய பொருட்களையும், முதலில் வறுத்த கருப்பு எள்ளையும் சேர்த்து, அதிகம் தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். தாளிக்க ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கருவேப்பிலை ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்கு பொரிய விட்டு சட்னியுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதாங்க ரொம்ப சூப்பரான, சுவையான இந்த எள்ளு சட்னி இட்லி, தோசைக்கு அருமையாக இருக்கும். கெட்டியாக துவையல் போல அரைத்தால் கலவை சாதங்களுக்கு அட்டகாசமாக இருக்கும். இதே மாதிரி நீங்களும் செய்து அசத்துங்க.

- Advertisement -