உங்கள் வீட்டில் அரிசி மூட்டையை வாங்கியதும், அதிலிருந்து முதல் கைப்பிடி அரிசியை இப்படி எடுத்து வையுங்கள்! அரிசி பானை நிரம்பி வழிவது போல, பணப்பெட்டியும் நிரம்பி வழியும்.

- Advertisement -

நம்முடைய வீட்டில் இருக்கும் தன தானியத்திற்கு குறைவு இல்லாமல் இருந்தாலே போதும். நம்முடைய வீட்டில் பணமும் நிரம்பி வழியும் என்று சொல்லுவார்கள். அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் பின்பற்றி வந்த ஒரு பழக்கத்தை தான், இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். காலப்போக்கில் பல விஷயங்கள் மாறியது போல, இந்த விஷயமும் மாறிவிட்டது என்று கூட சொல்லலாம். சிலபேர் வீட்டில் அரிசியை தேவைக்கு ஏற்ப அடிக்கடி வாங்கிக்கொள்வார்கள். சிலபேரு வீட்டில் அரிசியை மூட்டையாக வாங்கி பயன்படுத்தி வருவார்கள். அது அவரவர் வீட்டு உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்து. அவரவர் வீட்டு வருமானத்தைப் பொறுத்தது.

pachcharisi

பொதுவாகவே அரிசியை நீங்கள் எப்படி வாங்கி பயன்படுத்தினாலும் சரி, அமாவாசை முடிந்து வளர்பிறை தொடங்கும்போது அரிசி வாங்குவது நம் வீட்டில் தன தானியத்தை பெருகிக்கொண்டே செல்லும் என்று சொல்லப்பட்டுள்ளது. முடியாதவர்கள் வெள்ளிக்கிழமை, புதன்கிழமை இப்படிப்பட்ட தினங்களில் அரிசியை வாங்கலாம். வீட்டிற்கு உப்பு வாங்கினால் மகாலட்சுமி கடாட்சம் உண்டு என்று சொல்வார்கள் அல்லவா? அதேபோல்தான் அரிசியும் எப்போதும் நிறைந்திருக்க வேண்டும். சுத்தமாக காலியான பின்புதான் அரிசி வாங்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அப்படி அரிசி பானையை துடைத்து காலி செய்துவிட்டு அரிசி வாங்குவது ரொம்ப ரொம்ப தவறு.

- Advertisement -

சரி, இப்ப விஷயத்திற்கு செல்வோம். அந்த காலத்தில் யாசகம் கேட்டு வருபவர்களுக்கு நம்முடைய முன்னோர்கள் யாசகமாக வழங்கியது, இந்த அரிசியை தான். அரிசியை ஆழாகிலோ அல்லது மரக்காயிலோ அளந்து எடுத்து, முறத்தில் போட்டு, பிச்சை கேட்டு வரும் யாசகர்களுக்கு, தானமாக கொடுப்பார்கள். இது நாம் எல்லோரும் அறிந்த விஷயம் தான்.

bikshai

ஆனால் இன்றைய சூழ்நிலையில் யாசகம் கேட்டு வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. யாசகம் கேட்டு வருபவர்கள்,0 உண்மையில் யாசகம் தான் கேட்க வருகின்றார்கள் என்ற சந்தேகம் இருக்கின்றது. பிச்சை கேட்டு, வீட்டில் திருட வருபவர்களின் கூட்டமே அதிகம் என்ற சூழ்நிலை உருவாகிவிட்டது.

- Advertisement -

அன்று குடிசை வீட்டில் வாழ்ந்தவர்களுடைய வாழ்க்கை நிலைமை சீரும் சிறப்புமாக இருந்ததற்கு காரணம் அரிசியை அடுத்தவர்களுக்கு தானமாக கொடுத்ததும் ஒன்று. இன்றைக்கு நம் வீட்டில் வாங்கி வைக்கும் அரிசி மூட்டையில் இருந்து தானமாக ஒரு பருக்கை கூட கொடுப்பதே இல்லை. சமைத்து நீங்கள் காகத்திற்கு வைப்பது வேறு. வாயில்லா ஜீவன்களுக்கு வைப்பது வேறு. சமைக்காத அரிசியை நாம் யாருக்கும் தானம் செய்வது இல்லை.

vasthira-dhanam

நீங்கள் புதிதாக அரிசியை, வாங்கியவுடன் முதலில் அந்த அரிசியில் இருந்து, மூன்று கைப்பிடி அரிசியை எடுத்து ஒரு மஞ்சள் துணியில் முடிச்சுப் போட்டு கட்டி, பூஜை அறையில் வைத்து விட்டு, உங்கள் குடும்பம் செல்வ வளத்தோடு இருக்க வேண்டுமென்று மனதார குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு, அந்த அரிசியை பறவைகளுக்கு தானமாக கொடுக்கலாம்.

- Advertisement -

dhanam

முடிந்தவர்கள் உங்கள் வீட்டில் வாங்கிய அரிசி மூட்டையில் இருந்து உங்களால் முடிந்த அரிசியை இயலாதவர்களுக்கு தானமாக கொடுப்பது பல நன்மைகளைக் உங்களுக்கு தேடித்தரும். அந்த காலத்தில் மூட்டை மூட்டையாக தானியத்தை குடிசை வீட்டில் இருப்பவர்களும், திண்ணையில் அடுக்கி வைத்து தங்களுடைய வாழ்க்கையை நிறைவாக வாழ்ந்தார்கள். ஆனால் இன்று? சற்று சிந்தித்து பாருங்கள். நீங்கள் தானம் கொடுக்கும் அந்த ஒரு படி அரிசியானது உங்கள் வீட்டில் இருக்கும் பணப்பெட்டியில் பணத்தை நிறைவாக வைத்திருக்கும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
கையில பணம் சேராமல் போனதற்கு இப்படி ஒரு காரணம் இருக்குதா? சேமிக்கிற பணத்தை எங்க வைக்கிறீங்க! தினசரி செலவுக்கு தேவைக்கான பணத்தை எங்கிருந்து எடுக்கிறீங்க! சூட்சமமே இதுலதான் அடங்கியிருக்கு.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -