அரிசி சாப்பிட்டால் தரித்திரம் வருமா? அரிசி கழுவும் பொழுது தவறியும் இதை மட்டும் செய்து விடாதீர்கள்!

- Advertisement -

நம் முன்னோர்கள் சொல்லிய ஒவ்வொரு விஷயத்திற்கும் பின்னாலும் ஒவ்வொரு அர்த்தம் நிச்சயம் ஒளிந்திருக்கும். சிறுபிள்ளைகள் இடத்தில் அதை புரிய வைப்பது கடினம் என்று நமக்குப் புரியும்படி எதையாவது சொல்லி பயமுறுத்தி வைத்திருப்பார்கள். அந்த வகையில் நம் முன்னோர்கள் கூறிய இந்த ஒரு விஷயமும் நமக்கு புரியாமலேயே இருந்திருக்கும்! அது என்ன? இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பதை இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

‘அரிசி சாப்பிடாதே, கல்யாணத்தில் மழை பெய்யும்’ என்று நம் முன்னோர்கள் அடிக்கடி கூற நாம் நிச்சயம் கேட்டதுண்டு. அரிசி சாப்பிட்டால் எப்படி கல்யாணத்தில் மழை பெய்யும்? என்று நாமும் அதனை அப்போது ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்து இருப்போம். உண்மையிலேயே அரிசி சாப்பிட்டால் என்ன நேரும்? ஏன் அவ்வாறு நம் முன்னோர்கள் கூறி வைத்தார்கள்? என்று உங்களுக்கு தெரியுமா?

- Advertisement -

நம் வாழ்வியலோடு ஒன்றிணைந்தது தான் ஆன்மீகம். ஆன்மீகம் வேறு நம் வாழ்க்கை வேறு அல்ல! இரண்டும் ஒன்றோடொன்று பின்னிப் பிணையப்பட்டது என்பதை நாம் முதலில் உணர வேண்டும். மகாலட்சுமியாக, அன்னபூரணியாக கருதப்படும் அரிசியை எப்பொழுதும் மரியாதையுடன் நடத்த வேண்டும். வீட்டில் கல் உப்பு எப்படி குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமோ, அதே போல இந்த அரிசியையும் நாம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வீட்டில் அரிசி சுத்தமாக தீர்வதற்கு முன்னரே நீங்கள் வாங்கி வைத்து விட வேண்டும். கடைசி அரிசியை கூட விட்டுவைக்காமல் வழித்து எடுக்க கூடாது! இப்படி செய்தால் வறுமை உண்டாகும் என்பது நியதி. சமைக்கும் பொழுது ஒரு பிடி சாதத்தையாவது அந்த பாத்திரத்தில் விட்டு வைத்து சாப்பிட வேண்டும். மொத்தத்தையும் வழித்தால் வறுமை தாண்டவமாடும், கடன் பிரச்சனை ஏற்படும். சிலர் அது போல அரிசியை சாப்பாடு செய்ய கழுவும் பொழுது கொஞ்சம் எடுத்து வாயில் போட்டுக் கொள்வார்கள். அல்லது கழுவி ஊற வைத்த அரிசியில் இருந்து கொஞ்சம் எடுத்து வாயில் போட்டுக் கொள்வார்கள்.

- Advertisement -

இப்படி உலைக்கு வைத்திருக்கும் அரிசியை எடுத்து வாயில் போடுவது தரித்திரத்தை உண்டாக்கிவிடும். உலைக்கு போடும் சாப்பாட்டு அரிசி சாட்சாத் மகாலட்சுமியின் அம்சமாகும். ஊற வைத்த அரிசியை உலை கொதித்த பின்பு நீங்கள் உங்களுடைய வலது கையால் எடுத்து தலைவணங்கி மரியாதையுடன் ஒரு முறை எல்லா ஜீவராசிகளுக்கும் சமர்ப்பணம், வறுமை இல்லாமல் எல்லோரும் வளமாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு மகாலட்சுமி போற்றி! அன்னபூரணி போற்றி! என்று மனதார நினைத்து கொண்டு பின்னர் கொதிக்கும் உலையில் போடலாம். இவ்வாறு செய்யும் பொழுது உங்கள் இல்லத்தில் நிச்சயம் வறுமை என்பதே ஏற்படாது.

இது உங்களை மட்டுமல்ல, உங்களை சார்ந்த உங்கள் சந்ததியினருக்கும் பலனைக் கொண்டு போய் சேர்க்கும். இந்த அளவிற்கு மகத்துவம் வாய்ந்த அரிசியை தான் நாம் சாப்பிட கூடாது என்று கூறுவார்கள். அதே போல பெண்கள் அரிசி அதிகம் சாப்பிட்டால் ரத்த சோகை நோய் உண்டாகும் எனவே தான் நம் முன்னோர்கள் அரிசி சாப்பிட்டால் கல்யாணத்தில் மழை பெய்யும் என்று பயமுறுத்தி வைத்திருந்தனர். இனியும் உலைக்கு கழுவும் அரிசியை, ஊற வைத்திருக்கும் அரிசியை ஒரு பொழுதும் எடுத்து சாப்பிட்டு விடாதீர்கள்!

- Advertisement -