சில பேருக்கு வாழ்க்கையில் தரித்திரம் சுறுசுறுப்பாக வேலை செய்யும். எந்த ஒரு வேலையை தொடங்கினாலும் அது வெற்றி அடையாது. நன்றாக போய்க் கொண்டிருக்கும் வேலை கூட, இவர்கள் கைபட்டதும் நஷ்டத்தை கொடுத்து விடும். இப்படிப்பட்டவர்களை துரதிர்ஷ்டசாலிகள் என்று சொல்லுவார்கள்.
அதிர்ஷ்டம் கெட்டவர்கள் என்று சொல்லுவார்கள். இப்படி துரதிஷ்டமாக இருப்பவர்களை கூட, அதிர்ஷ்டமானவர்களாக மாற்றுவதற்கு ஆன்மீகத்தில் எளிமையான சில பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது. அதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
தரித்திரம் விலக பரிகாரம்
முதலில் இந்த பரிகாரத்திற்கு கல் உப்பு, மஞ்சள் தூள் தேவை. ஓடுகின்ற தண்ணீரில் இந்த பரிகாரத்தை செய்வது ரொம்ப ரொம்ப சிறப்பு. அப்படி இல்லை என்றால் கடல் தண்ணீரில் கூட இந்த பரிகாரத்தை செய்யலாம். ஒரு கிண்ணத்தில் கல் உப்பையும், மஞ்சளையும், சம அளவில் போட்டு கலந்து அதை எடுத்து உச்சந்தலை முதல், உள்ளங் கால் வரை தேய்த்து, ஓடுகின்ற தண்ணீரில் குளித்து விட வேண்டும்.
இப்படி செய்தால் உங்கள் உடம்பை பிடித்த தரித்திரம் விலகும். அப்படி இல்லை என்றால் இரண்டு உள்ளங்கைகளிலும் உப்பு மஞ்சளை வைத்துக் கொண்டு உங்களுடைய கையை நன்றாக தேய்த்து ஓடுகின்ற தண்ணீரில் கழுவி விட்டால் உங்கள் கை அதிர்ஷ்டமான கையாக மாறும் என்பதும் ஒரு நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.
ஓடுகின்ற தண்ணீரில் அல்லது கடலில் ஒரே ஒருமுறை இந்த பரிகாரத்தை செய்தால் போதும். துரதிஷ்டமாக இருப்பவர்கள் கூட அதிர்ஷ்டமானவர்களாக மாறிவிடுவார்கள். உடனடியாக வெளியிடங்களுக்கு சென்று ஓடுகின்ற தண்ணீரில் இந்த பரிகாரத்தை செய்ய முடியவில்லை என்பவர்கள் உங்களுடைய வீட்டிலேயே இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.
ஆனால் குளிக்கின்ற தண்ணீரில் மட்டும் கோவிலில் இருந்து ஏதாவது ஒரு தீர்த்தம் கிடைத்தால் அதை வாங்கி வந்து குளிக்கின்ற தண்ணீரில் கலந்து அந்த நீரில் தலைக்கு குளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டில் இந்த பரிகாரத்தை செய்தால் மூன்று வாரம் ஞாயிற்றுக்கிழமை செய்ய வேண்டும்.
உடம்பு அடித்துப் போட்டது போல இருக்கிறது. சுறுசுறுப்பாக எந்த வேலையையும் செய்ய முடியவில்லை, ஏதோ கெட்ட சக்தி உடம்பில் ஊடுருவியது போல இருக்கிறது. கண் திருஷ்டி பட்டதால் உடம்பில் சுறுசுறுப்பு இல்லை என்ற பிரச்சனை கொண்டவர்களும் மேல் சொன்ன இந்த எளிமையான பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.
ஆண்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். பெண்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். ஆண்களுக்கு இந்த பரிகாரத்தை செய்வதில் சில சந்தேகம் இருக்கும். மஞ்சளை ஆண்கள் தேய்த்து குளிக்கலாமா என்று. ஒரு முறை, இரண்டு முறை தேய்த்து குளிப்பதன் மூலம் ஆண்களுக்கு எந்த பிரச்சனையும் வராது.
இதையும் படிக்கலாமே: நினைத்தது நிறைவேற ஆஞ்சநேயர் வழிபாடு
சாதாரண மஞ்சள் பட்டால் உடம்பில் நிறம் தெரியும் என்று கவலைப்படுபவர்கள் கஸ்தூரி மஞ்சளை இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்மீகம் சொல்லும் இந்த எளிய பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறவும்.