இப்போது பெரும்பாலும் எல்லோர் வீட்டிலும் இந்த இட்லி மாவு இல்லையென்றால் பிரச்சினை தான். எது இருக்கிறதோ இல்லையோ கொஞ்சம் இட்லி மாவு கட்டாயம் இருந்தே ஆக வேண்டும். ஏன்னெனில் அவசரத்தில் கை கொடுக்கும் உணவு பொருள்களில் இதை போல வேறு எதுவும் கிடையாது. இதை விட ஈசியாக செய்யக் கூடிய டிபன் வகைகள் அதிகமாக இருந்தாலும் கூட, உடனடியாக செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் இட்லி அல்லது தோசை தான். இது நமக்கு நல்ல பழக்கமான ஒரு உணவும் கூட. இந்த உணவை இப்போது இன்னும் அதிக ஆரோக்கியத்துடனும் அதே நேரத்தில் மாவு அரை ஊற வைத்து, அரைத்து இது போன்ற வேலைகள் எதையும் செய்யாமல் நினைத்த உடனே இட்லி, தோசை செய்ய இதோ ஒரு அருமையான இட்லி மாவு ரெசிபி இப்படி செய்து கொடுங்கள்.
தேவையான பொருட்கள்: ரவை -1 கப், அவல் -1 கப்,புளித்த தயிர் – கப், உப்பு -1/4 ஸ்பூன், சமையல் சோடா -1 சிட்டிகை.
முதலில் ஒரு கப் வறுக்காத ரவையை ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளுங்கள்.ஒரு கப் ரவைக்கு ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து விட்டு விடுங்கள்.
இன்னொரு பவுலில் ஒரு கப் வெள்ளை அவல் எடுத்துக் கொள்ளுங்கள் அதை ஒரு முறை லேசாக தண்ணீர் விட்டு அலசி தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த அவலில் ஒரு கப் அளவிற்கு புளித்த தயிர் சேர்த்து அதையும் அப்படியே அரை மணி நேரம் ஊற வைத்து விடுங்கள்.
அரை மணி நேரம் கழித்து தயிரில் அவல் நன்றாக ஊறி இருக்கும். இதை அப்படியே ஒரு மிக்ஸி ஜாரில் தண்ணீர் சேர்க்காமல் நல்ல பைன் பேஸ்ட்டாக அரைத்து ஒரு பவுலில் ஊற்றிக் கொள்ளுங்கள். இதில் ஊற்றும் போது தண்ணீர் எல்லாம் சேர்க்க வேண்டாம்.
இதற்கிடையில் ஊறி இருக்கும் ரவையை தண்ணீர் இல்லாமல் ஒட்ட பிழிந்து இந்த அவல் அரைத்த மாவில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்போதும் தண்ணீர் எதுவும் ஊற்றக்கூடாது. இதை ஊற்றி உப்பு சேர்த்து நீங்கள் மாவை கலக்கும் போதே உங்களுக்கு இந்த மாவு, இட்லி மாவு பதத்திற்கு வந்து விடும். இதை புளிக்க வைக்காமல் உடனே ஊற்ற போகிறோம் ஆகையால் கொஞ்சமாக சமையல் உப்பு மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள் போதும். இவை அனைத்தையும் சேர்த்து மாவை நன்றாக அடித்து ஒரு பத்து நிமிடம் வரை வைத்தால் போதும். அவ்வளவு தான் நீங்கள் எப்போதும் போல இட்லி பாத்திரத்தில் இட்லி ஊத்த ஆரம்பிக்கலாம். மிக மிக சாஃப்ட்டான பஞ்சு போன்ற அருமையான ஒரு இன்ஸ்டன்ட் இட்லி உங்களுக்கு தயாராகி இருக்கும்.
இதையும் படிக்கலாமே: கோதுமை மாவுல ஹெல்த்தி வெங்காய சமோசா கிரிஸ்பியா ஈஸியா செய்வது எப்படி? இது தெரிஞ்சா இனி பேக்கரியில் வாங்கவே மாட்டீங்க!
அவலை தனியாக யாரும் அதிகம் சாப்பிட மாட்டார்கள். இது போல உணவு வகைகளில் சேர்த்து கொடுக்கும் போது அந்த பொருள்களின் சத்தும் நமக்கு கிடைக்கும். இனி அடிக்கடி எது போன்ற உணவு வகைகளை செய்து சாப்பிட்டு ஆரோக்கியத்துடன் இருங்கள்.