கோதுமை மாவுல ஹெல்த்தி வெங்காய சமோசா கிரிஸ்பியா ஈஸியா செய்வது எப்படி? இது தெரிஞ்சா இனி பேக்கரியில் வாங்கவே மாட்டீங்க!

samaso-folding1
- Advertisement -

எப்பொழுதும் குட்டி குட்டி வெங்காய சமோசாக்களை நாம் வெளியில் வாங்கி சாப்பிடுவது உண்டு. குறிப்பாக பேக்கரியில் அதிகம் விரும்பி வாங்கும் ஸ்னாக்ஸ் வகையாக இருக்கக்கூடிய இந்த குட்டி வெங்காய சமோசா ஆரோக்கியமான முறையில் கோதுமை மாவில் எப்படி மொறு மொறுன்னு ரொம்ப சுலபமாக நம் வீட்டிலேயே தயாரிப்பது? இதன் வழிமுறை என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் இனி பார்க்க இருக்கிறோம்.

வெங்காய சமோசா செய்ய தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 200 கிராம், உப்பு – தேவையான அளவு, மைதா மாவு – ரெண்டு ஸ்பூன். ஸ்டஃபிங் செய்ய: பெரிய வெங்காயம் – 2, மஞ்சத்தூள் – ரெண்டு சிட்டிகை, மிளகாய் தூள் – அரை ஸ்பூன், கரம் மசாலா தூள் – அரை ஸ்பூன், தனியா தூள் – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ரெண்டு சிட்டிகை, சீரகம் – அரை ஸ்பூன், ரவை – இரண்டு ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – அரை ஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று, நறுக்கிய கருவேப்பிலை, கொத்தமல்லி – அரை கைப்பிடி.

- Advertisement -

வெங்காய சமோசா செய்முறை விளக்கம்:
முதலில் சமோசா செய்வதற்கு சமோசா ஷீட்டுகள் தேவை. இதற்கு 200 கிராம் அளவிற்கு கோதுமை மாவு எடுத்துக் கொள்ளுங்கள். இந்த மாவுடன் தேவையான அளவிற்கு உப்பு போட்டு கைகளால் கலந்து கொள்ளுங்கள். பின்னர் சுடச்சுட கொதிக்க வைத்த எண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு ஊற்றி, ஸ்பூன் வைத்து பிசைந்து கொள்ளுங்கள். சூடு ஆறியதும் கைகளால் கோதுமை மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு கெட்டி ஆக பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பத்து நிமிடம் அப்படியே ஊற விட்டு விடுங்கள்.

கோதுமை மாவு ஊறியதும் ஒவ்வொரு உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். உருட்டிய உருண்டைகளை சப்பாத்தி மாவு போல வட்டமாக தட்டிக் கொள்ளுங்கள். தட்டிய பின்பு தோசை கல்லில் இரண்டு புறமும் 20 செகண்டுகள் மட்டும் ஈரப்பதம் போக திருப்பி போட்டு எடுத்துக் கொள்ளுங்கள். வட்ட வடிவ மாவின் இரண்டு புறமும் ஓரங்களில் மட்டும் கொஞ்சம் போல் அரை இன்ச் அளவிற்கு வெட்டி விடுங்கள். வெட்டியதை வீணாக்காமல் ஸ்டஃப்டு பொருட்களுடன் சேர்க்கலாம். பின் மாவை மூன்றாக நீள வாக்கில் வெட்டி கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்போது உங்களுக்கு சமோசா சீட்டுகள் கிடைத்தாயிற்று! இப்போது ஸ்டப்பிங் செய்வதற்கு நாம் எதையும் வதக்க போவது கிடையாது. ரெண்டு பெரிய வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி உதிர்த்து வைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், தனியா தூள் ஆகிய மசாலாக்களை மேற்கூறிய அளவின்படி சேர்த்துக் கொள்ளுங்கள். ரெண்டு ஸ்பூன் ரவை, சீரகம், பெருங்காயத்தூள், இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலைகளை போட்டு இந்த ஸ்டஃபிங்க்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்.

இப்போது ஸ்டப்பிங் செய்ய தேவையான வெங்காய கலவை கிடைத்தாயிற்று. ரெண்டு ஸ்பூன் மைதா மாவை கெட்டியான பசை போல தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். ஸ்டஃபிங் செய்யும் பொழுது உள்ளே இருக்கும் ஸ்டஃப்டு பொருட்கள் வெளியில் வராமல் இருக்க மாவை தேய்த்து ஒட்டி விட வேண்டும். சமோசா சீட்டுகளை முக்கோண வடிவத்தில் ஒரு முனை பகுதியில் முதலில் மடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் இரண்டாவது முறை மடிக்கும் பொழுது கொஞ்சம் போல் மைதா பேஸ்ட் தடவி ஒட்டி விடுங்கள். இப்போது உள்ளே ஒன்றரை டீஸ்பூன் அளவிற்கு ஸ்டஃப்டு பொருட்களை எடுத்து உள்ளே வைத்து திணியுங்கள்.

இதையும் படிக்கலாமே:
உருளைக்கிழங்கு சிப்ஸ் இப்படி மட்டும் செஞ்சு பாருங்க இனி கடையில் வாங்கவே மாட்டீங்க! வீட்டிலேயே தரமான உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்யும் எளிய முறை என்ன?

பின்னர் மேற்புற பாகத்தை லேசாக அழுத்தம் கொடுத்து மடியுங்கள். கடைசியாக மடிக்கும் பொழுது கொஞ்சம் போல் மைதா மாவை தேய்த்து ஒட்டி விடுங்கள். அவ்வளவுதான் இப்போது தேவையான ஷேப்பில் உங்களுக்கு சமோசா கிடைத்துவிட்டது. இப்ப சுடச்சுட எண்ணெயில் மிதமான தீயில் இரண்டு புறமும் சிவக்க வறுத்து எடுக்க வேண்டும். அப்போதுதான் உள்ளே இருக்கும் பொருட்களும் நன்கு வேகும். மசாலா வாசம் நீங்கி, வெங்காயம் நன்கு வெந்து மேலே கிறிஸ்ப்பியாக உங்களுக்கு கோதுமை மாவு ஹெல்த்தி சமோசா ரெசிபி இப்பொழுது ரெடி! நீங்களும் இதே மாதிரி செஞ்சு பார்த்து அசத்தலமே.

- Advertisement -