- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilஅரிசி வடித்த கஞ்சி தண்ணீர் இருந்தால் போதும். வெறும் அழகு இல்லைங்க. பேரழகை 10 நிமிடத்தில்...

அரிசி வடித்த கஞ்சி தண்ணீர் இருந்தால் போதும். வெறும் அழகு இல்லைங்க. பேரழகை 10 நிமிடத்தில் பெறலாம். இந்த ரகசிய டிப்ஸ் மட்டும் உங்களுக்கு தெரிந்தால்.

- Advertisement -

பேரழகியாக இருக்க வேண்டும் என்ற ஆசை நிச்சயம் எல்லோருக்கும் இருக்கும். ஆனால் எளிமையான அழகை பெற வேண்டும் என்றாலே, இந்த காலத்தில் அதிகம் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை. அந்த கிரீம், இந்த கிரீம், அந்த பிராண்ட், இந்த பிராண்ட் என்று ஏகப்பட்ட அழகு சாதன பொருட்கள் இருக்கின்றது. ஆனால், அது எல்லாம் விலை உயர்ந்தவை. அடக்கமான பட்ஜெட்டில் மிக மிக எளிமையான முறையில் நம்முடைய வீட்டில் அரிசி வடித்த கஞ்சி தண்ணீரை வைத்து ஒரு சூப்பரான ஃபேசியல் செய்தாலே போதும். பேரழகை எளிதாக பெறலாம். அந்த எளிமையான ஃபேசியல் எப்படி செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

அரிசி வடித்த கஞ்சி தண்ணீரில் ஃபேசியல் செய்வது எப்படி?
முதலில் இந்த ஃபேசியல் செய்ய மூன்று பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள். அரிசி வடித்த கஞ்சி தண்ணீர், ஆலுவேரா ஜெல், விட்டமின் இ கேப்ஸ்யூல். நேற்று வடித்த அரிசி கஞ்சி தண்ணீர் இருந்தால் இன்னும் நல்லது. அதில் லேசான புளிப்பு இருக்கும். அதை சருமத்தில் போட்டால் சருமம் உடனடியாக பொலிவு பெறும். நேத்து வடித்த கஞ்சி தண்ணீர் ஆக இருந்தால் அது கொஞ்சம் கட்டியாக நமக்கு இருக்கும் அல்லவா. அதை அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். கஞ்சி தண்ணீரை அடுத்த நாள் எடுத்து வைப்பதாக இருந்தால் அதை ஃப்ரிட்ஜில் வைக்காதீங்க. (ஃப்ரிட்ஜில் வைத்தால் கஞ்சி தண்ணீர் புளித்து வராது.)

- Advertisement -

ஒரு சிறிய கிண்ணத்தில் 2 ஸ்பூன் வடித்த கஞ்சி, 2 ஸ்பூன் ஆலோவேரா ஜெல், 1 விட்டமின் ஈ கேப்ஸ்யூல் உள்ளே இருக்கும் ஜெல், மூன்று பொருட்களையும் போட்டு கலந்தால் சூப்பரான ஒரு கிரீம் நமக்கு கிடைக்கும். கடைகளில் விற்கும் ஆலோவேரா ஜெல்லை கலர் இல்லாமல் வாங்கிக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் கற்றாழைக்கு உள்ளே இருக்கும் ஜெல்லை கூட தனியாக எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து இதில் ஊற்றிக்கொண்டால் ரொம்ப ரொம்ப நல்லது.

இந்த 3 பொருட்கள் சேர்ந்த கிரீமை அப்படியே உங்கள் கையில் எடுத்து, முகம் முழுவதும் அப்ளை செய்து வட்ட வடிவில் 15 நிமிடங்கள் அழகாக மசாஜ் செய்யுங்கள். கடையில் பேசியல் செய்தால், எப்படி அவர்கள் வட்ட வடிவில் மசாஜ் செய்வார்கள். அதே போல வட்ட வடிவில் மசாஜ் செய்து, கண்ணுக்கு கீழே, நெற்றி, கழுத்து பகுதி எல்லா இடங்களிலும் மசாஜ் செய்துவிட்டு, மீண்டும் 10 நிமிடங்கள் அப்படியே பேஸ் பேக்கை விட்டு விடுங்கள். (மசாஜ் செய்யும் போது இந்த பேக் உங்களுடைய சருமத்தில் அப்படியே உறிஞ்சும்.) பிறகு குளிர்ந்த தண்ணீரை ஊற்றி முகத்தை கழுவிக்கொள்ளலாம். இதே பேக்கை உங்களுடைய கைகளுக்கும் நீங்கள் போட்டுக் கொள்ளலாம்.

- Advertisement -

முகத்தை இந்த பேசியல் செய்து கழுவிய பின்பு, ஒரு நல்ல பொலிவு உங்களுக்கு கிடைக்கும். அதன் பிறகு ஒரு 5 நிமிடம் சுட சுட இருக்கும் தண்ணீரில் முகத்தை ஆவி பிடிக்க வேண்டும். ஸ்டீம் செய்தால் முகத்தில் இருக்கும் அந்த போர்ஸ் ஓபன் ஆகும் என்று சொல்லுவார்கள். ஆவி பிடித்த பின்பு இறுதியாக அசத்தலான ஒரு ஃபேஸ் பேக் போட வேண்டும்.

அரிசி மாவு, கஞ்சி தண்ணீர் பேக்:
ஒரு சிறிய கிண்ணத்தில் 2 ஸ்பூன் அரிசி மாவு, போட்டு அதை கலக்க தேவையான அளவு எடுத்து வைத்திருக்கும் அரிசி வடித்த கஞ்சி தண்ணீரை ஊற்றி, நன்றாக கலந்தால் ஒரு ஃபேஸ் பேக் கிடைத்திருக்கும். இதை உங்களுடைய முகம் கழுத்து பகுதிகளில் அப்ளை செய்து அப்படியே விட்டு விடுங்கள். 20 நிமிடம் கழித்தால் முகம் அப்படியே இறுக்கிப் பிடிக்கும். ஃபேஸ் பேக் நன்றாக காய்ந்து இருக்கும்.

இதையும் படிக்கலாமே: பட்டு போன்ற மேனிக்கு வீட்டில் இந்த 2 பொருள் இருந்தால் போதும்! பஞ்சால் தொட்டு முகத்தில் இதை தேய்த்தாலே போதும் முகம் பஞ்சு மாதிரி மிருதுவாக இருக்குமே!

பிறகு காய்ந்த பேஸ் பேக்கை நன்றாக ஈரம் செய்து விட்டு, மசாஜ் செய்து, முகத்தை கழுவ வேண்டும். அவ்வளவு தான். உங்களுடைய முகம் பொலிவு பெறும். பேரழகியாக நீங்க மாறியிருப்பீங்க. இந்த மாதிரி வாரத்தில் 2 நாட்கள் செய்து வர உங்களுடைய அழகு கூடிக் கொண்டே செல்லும். வயதான தோற்றம் எளிதில் வராது. சுருக்கங்கள் குறையும். ரிங்கல்ஸ் என்று சொல்லப்படக்கூடிய வயதான தோற்றத்தை மறைக்க கூடிய சக்தி இந்த பேசியலுக்கு உண்டு. உங்களுக்கு இந்த எளிமையான அழகு குறிப்பு படிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்