பட்டு போன்ற மேனிக்கு வீட்டில் இந்த 2 பொருள் இருந்தால் போதும்! பஞ்சால் தொட்டு முகத்தில் இதை தேய்த்தாலே போதும் முகம் பஞ்சு மாதிரி மிருதுவாக இருக்குமே!

rose-water-face
- Advertisement -

ஆண், பெண் என்கிற எந்த வித்தியாசமும் இன்றி எல்லோருக்குமே தங்களுடைய சருமமானது மிருதுவாக, பொலிவாக இருக்க வேண்டும் என்பது தான் விருப்பமாக இருக்கிறது. இதற்காக பல வகைகளில் நாம் பல விஷயங்களை செய்து வந்தாலும், ரொம்ப எளிமையாக பஞ்சு போன்ற முகத்தை பெற என்ன செய்ய வேண்டும்? என்பதைத் தான் இந்த அழகு குறிப்பு ரகசியங்களின் மூலம் நாம் இனி தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

பஞ்சு போல பட்டு மாதிரி முகம் இருக்க பஞ்சினால் இதைத் தொட்டு நனைத்து முகத்தில் ஒற்றி எடுத்தாலே போதும். அந்த அளவிற்கு நல்ல ஒரு எபக்ட்டிவ்வான ரிசல்ட் கொடுக்கக்கூடிய இரண்டு பொருள் நம் வீட்டில் இயல்பாக சுலபமாக கிடைக்கக்கூடிய ஒரு பொருளாக இருக்கிறது. முதலில் முகத்தில் இருக்கும் சரும அழுக்குகளை நீக்கி முகத்தை க்லென்ஸ் செய்ய வேண்டும்.

- Advertisement -

இதற்கு நாம் முதலாவதாக எடுக்கப் போவது பால்! இது நம்முடைய சருமத்தை உள்ளிருந்து சுத்தம் செய்து அழுக்குகளை நீக்க பயன்படுகிறது. காய்ச்சாத பசும்பால் கொஞ்சம் ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளுங்கள். சுத்தமான காட்டன் பஞ்சை எடுத்து இந்த பாலில் நனைத்து முகத்தில் ஒற்றி எடுக்க வேண்டும். முகம் முழுவதும் எல்லா இடங்களிலும் பாலை ஊற்றி எடுத்த பிறகு நன்கு உலர விட்டு விடுங்கள்.

பத்து நிமிடத்தில் நன்கு உலர்ந்து காய்ந்ததும், குளிர்ந்த நீரினால் முகத்தை அலம்பி கொள்ளுங்கள். பாலில் இருக்கக்கூடிய நுண் சத்துக்கள் நம் சருமத்தில் இருக்கக்கூடிய அதிகப்படியான ஈரப்பதத்தை, எண்ணெய் பசையை உறிஞ்சி கொள்ளும். நுண்கிருமிகள், அழுக்குகள் போன்றவற்றையும் நீக்கி முகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். பின்னர் எப்பொழுதும் போல நீங்கள் குளித்துவிட்டு வரலாம். பாலை ஒற்றி எடுக்கும் முன்பு குளிக்க கூடாது. பின்னர் நீங்கள் குளித்து வந்த பிறகு முகத்தை நன்கு துடைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதே போல ஒரு பௌலில் பன்னீர் எடுத்துக் கொள்ளுங்கள். ரோஜா இதழ்களால் செய்யப்படுகின்ற இந்த சுத்தமான பன்னீர் நாட்டு மருந்து விற்கப்படுகிறது. இதை தரமாக தேர்ந்தெடுத்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். பின் பஞ்சினால் இந்த பன்னீரை நனைத்து முகத்தில் அதே போல மென்மையாக ஒற்றி எடுக்க வேண்டும். இதனால் சரும துவாரங்களுக்குள் இந்த பன்னீர் சென்று சரும துளைகளை லாக் செய்கிறது. இதனால் முகப்பருக்கள், கரும்புள்ளிகள், வெண் புள்ளிகள், மேடு பள்ளங்கள், தழும்புகள் போன்றவை இருந்தாலும் அவை மெல்ல மறைய ஆரம்பிக்கும்.

இதையும் படிக்கலாமே:
பார்லருக்கு எல்லாம் போக முடியவில்லை! 15 நிமிடத்தில் பேசியல் செய்தது போல முகம் பிரகாசமாக மாற எளிமையாக என்ன செய்யலாம்?

வெயிலினால் உண்டாகக் கூடிய கதிர்வீச்சு நம் முகத்தில் நேரடியாக படாமல் பாதுகாக்கவும் செய்கிறது, மேலும் காற்றில் சுற்றி தெரியும் தூசு மற்றும் நுண்ணிய மாசுக்களால் உண்டாக கூடிய பிரச்சனைகளையும் தவிர்க்கிறது. இதனால் முகத்தில் முகப்பருக்கள் தோன்றாமல் பிரகாசமாக இருக்கும். பன்னீர் உலர்ந்ததும் நீங்கள் குளிர்ந்த நீரினால் கழுவி முகத்தை மென்மையாக துடைத்துக் கொள்ள வேண்டும். வெயிலில் அதிகமாக சுற்றி திரிபவர்கள் இது போல வெயிலில் சென்று வந்த பிறகு செய்து பார்த்தால் நல்ல ஒரு பலன் கிடைக்கும். வெயிலில் செல்லும் முன்பு சன் ஸ்கிரீன் போட்டுக் கொண்டும் செல்லலாம்.

- Advertisement -