நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லுவார்கள். ஆனால் இன்று பணம் சம்பாதிப்பதே, மருந்து மாத்திரைக்கு செலவு செய்ய வேண்டிய சூழ்நிலைக்காக என்று மாறிவிட்டது. மருத்துவ செலவுக்காகவாவது பணத்தை அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற சூழ்நிலை நிறைய பேருக்கு இருக்கிறது.
சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு ஆரோக்கிய பிரச்சனை, நிரந்தரமாக மருந்து சாப்பிட வேண்டிய சூழ்நிலை, என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கின்றோம். தினமும், வீட்டில் இருப்பவர்கள் யாராவது ஒருவர், ஒரு மாத்திரையை நிரந்தரமாக சாப்பிடுகின்றோம். சக்கரை வியாதி, ரத்த கொதிப்பு, கெட்ட கொழுப்பு, தைராய்டு, சளி இருமல் தொந்தரவு, ஆஸ்துமா பிரச்சனை என்று பல வகை பிரச்சனைகள் இதிலிருந்து எல்லாம் விடுபட வேண்டும்.
ஆரோக்கியத்தை அந்த இறைவன் நமக்கு கொடுக்க வேண்டும் என்றால், என்ன வழிபாடு செய்வது. கார்த்திகை மாத செவ்வாய்க்கிழமை அன்று முருகப்பெருமானை நம்பிக்கையோடு பின் சொல்லக்கூடிய முறையில் வழிபாட்டை மேற்கொண்டால், ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும் மருத்துவ செலவு குறையும்.
நோய் தீர முருகன் வழிபாடு
இன்று மாலை 6 மணிக்கு மேல் இரவு 8 மணிக்குள் இந்த வழிபாட்டை எப்போது வேண்டும் என்றாலும் செய்யலாம். உங்கள் வீட்டில் வேல் இருந்தால், முருகனது சிலை இருந்தால், அதற்கு சுத்தமான தேன் வாங்கி அபிஷேகம் செய்ய வேண்டும். கொஞ்சம் தேன் கொண்டு முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்ய நோய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும்.
அப்படி இல்லை என்றால் உங்கள் வீட்டு பக்கத்தில் முருகன் கோவிலுக்கு அபிஷேகத்திற்கு சுத்தமான தேன் வாங்கி தானம் கொடுக்க வேண்டும். வீட்டில் வேலுக்கு அபிஷேகம் செய்து முடித்துவிட்டு, சந்தன குங்குமம் பொட்டு வைத்து, வேலுக்கு நெய் தீபமேற்றி 1 ஸ்பூன் தேன் நெய்வேத்தியமாக வைத்து உங்களுடைய பிரார்த்தனையை முருக பெருமானிடம் வையுங்கள். குறிப்பாக ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரார்த்தனை சரியாக பிரார்த்தனை வையுங்கள்.
பிறகு தீப தூப ஆராதனை காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்து கொண்டு, அந்த தேனை பிரசாதமாக வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட வேண்டும். ஒரு வேலை உங்கள் வீட்டில் வேல் இல்லை, முருகரது சிலை இல்லை என்றால், முருகர் திருவுருவப்படத்திற்கு கூட இந்த தேன் நெய்வேதியமாக வைத்து வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே: கடன் பிரச்சினை தீர்க்கும் கார்த்திகை செவ்வாய்க்கிழமை வழிபாடு
நம்பிக்கையோடு செய்பவர்களுக்கு இந்த எளிமையான வழிபாடு நிச்சயம் நல்ல பலனை தரும். ஒரே ஒரு செவ்வாய்க்கிழமை மட்டும் இந்த வழிபாட்டை செய்துவிட்டு முழு பலனை எதிர்பார்ப்பதும் தவறு. வரக்கூடிய ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் இதே போல முருகருக்கு வழிபாடு செய்யுங்கள். நோய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு படிப்படியாக குறைவதை நிச்சயம் உணர முடியும். நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த வழிபாடு நல்லதை செய்யும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.