- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் பிரச்சினை தீர்க்கும் கார்த்திகை செவ்வாய்க்கிழமை வழிபாடு

கடன் பிரச்சினை தீர்க்கும் கார்த்திகை செவ்வாய்க்கிழமை வழிபாடு

- Advertisement -

கடனால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் கடன் வாங்குவது எவ்வளவு பெரிய தவறு என்பது தெரிந்திருக்கும். கடன் வாங்குவதற்கு முன்பாக அதை உணர்ந்திருக்க மாட்டார்கள். கடன் வாங்கிய பிறகுதான் அதனால் ஏற்பட்ட அவமானங்களாலும் அசிங்கங்களாலும் எப்படியாவது இந்த கடனை திருப்பிக் கொடுத்து விட வேண்டும், திரும்பவும் கடன் வாங்கவே கூடாது என்று நினைப்பார்கள். இப்படி எத்தனையோ பேர் நினைத்திருந்தாலும் அந்த கடனை திருப்பிக் கொடுப்பதற்குரிய வழி என்பதை கிடைக்காமலேயே இருக்கும். அந்த வழியை பெறச் செய்வதற்கு உதவக்கூடிய கார்த்திகை செவ்வாய்க்கிழமை வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கார்த்திகை செவ்வாய்க்கிழமை வழிபாடு

அடி முடி காணாத தீபச்சுடரொளியாக சிவபெருமான் காட்சியளித்த மாதமாக கார்த்திகை மாதம் திகழ்கிறது என்பதால் தான் இந்த கார்த்திகை மாதத்திற்கு தீபமாதம் என்று பெயர் வந்தது. அதனால் நாம் செய்யக்கூடிய எந்த வழிப்பாடாக இருந்தாலும் அந்த வழிபாட்டில் கண்டிப்பான முறையில் தீபம் என்பது இடம்பெற்றிருக்கும். அப்படிப்பட்ட கார்த்திகை மாதத்தில் ஒவ்வொரு நாளும் சிறப்பு மிகுந்த நாளாகவே கருதப்படுகிறது. அதிலும் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை என்பது மிகவும் பிரசித்தி பெற்ற தினமாகவே திகழ்கிறது. அன்றைய தினத்தில் நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான தீப வழிபாடு நம் கடன் பிரச்சினையை தீர்க்கும் என்று கூறப்படுகிறது. அந்த தீப வழிபாட்டை பற்றி இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

இந்த தீப வழிபாட்டை நாம் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை அன்று செய்ய வேண்டும். காலை 8 மணியிலிருந்து 9 மணிக்குள், மதியம் 12 மணியிலிருந்து 1 மணிக்குள், இரவு 7 மணியிலிருந்து 8 மணிக்குள் இந்த மூன்று நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். அந்த நேரத்தில் வீட்டு பூஜை அறையில் முருகப்பெருமானின் படத்திற்கு முன்பாக ஒரு தாம்பாளத்தை வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு மேல் வாசனை மிகுந்த விபூதியை கொட்டி பரப்பிக் கொள்ள வேண்டும். அதற்கு நடுவே ஒரு அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி சிவப்பு நிற திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

பிறகு அந்த தீபச்சுடரொளியை பார்த்த வண்ணம் முருகப்பெருமானை மனதார நினைத்துக் கொண்டு உங்களுடைய கடன் பிரச்சினைகள் முற்றிலும் தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். இந்த வழிபாட்டை செய்யும் பொழுது உங்களால் இயன்ற ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். அப்படி எதுவுமே இல்லை என்னும் பட்சத்தில் ஒரு டம்ளர் தண்ணீராவது வைக்க வேண்டும். இந்த வழிபாட்டை நிறைவு செய்த பிறகு அந்த ஒரு மணி நேரம் முழுவதும் அந்த தீபம் வீட்டிலேயே எரிய வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து அதை குளிர வைத்து விடலாம்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:ரம்பா திருதியை வழிபாடு

இந்த முறையில் கார்த்திகை செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானை நினைத்து இந்த ஒரு தீபத்தை ஏற்றி வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய கடன் பிரச்சனை படிப்படியாக விலகுவதை உணர முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்