- Advertisement -
Homeமந்திரம்அற்புதங்களை நிகழ்த்தும் அழகன் முருகன் மந்திரம்

அற்புதங்களை நிகழ்த்தும் அழகன் முருகன் மந்திரம்

- Advertisement -

யாமிருக்க பயமேன் என்னும் வாசகம் முருகனின் திருவுருவப்படத்திற்கு கீழும் மேலும் இருக்கும். இது முழுக்க முழுக்க உண்மை என்பது முருகனை முழுமனதோடு நம்புவார்களுக்கு அனுபவபூர்வமாகவே நடந்திருக்கும். இதே போல் வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை என்ற வாசகமும் கேள்விப்பட்டிருப்போம். வேல் இருக்கும்பொழுது நமக்கு எந்தவித தீய வினைகளும் நம்மை எந்த விதத்திலும் அண்டாது என்றும் மயில் இருக்கும் பொழுது நமக்கு பய உணர்வு ஏற்படாது. அதனால்தான் பலரும் தங்களுடைய வீட்டில் மயில் தோகையை வைத்து பராமரித்து வருகிறார்கள். பல அற்புதமான நிகழ்வுகளை பலரும் தாங்கள் கண்கூடாக அனுபவ பூர்வமாக பார்த்து முருகனின் அடிமையாகவே மாறி இருப்பார்கள். இதே போல் முருகனின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கும் நம் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடக்கவும் முருகப்பெருமானின் எந்த மந்திரத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் என்றுதான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

அற்புதங்களை நிகழ்த்தும் அழகன் முருகன் மந்திரம்

முருகப்பெருமானுக்கு என்று பல பெயர்கள் இருக்கும். கந்தன், அழகன், முருகன், குகன், சண்முகன், வேலவன், வடிவேலன் என்று கூறிக் கொண்டே செல்லலாம். நமக்கு எந்த பெயர் பிடித்திருக்கிறதோ அந்தப் பெயரிலேயே அவரை நினைத்து மனதார வழிபட்டோம் என்றால் நாம் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து நம்முடைய கஷ்டங்களை தீர்த்து வைப்பார் முருகப்பெருமான். அப்படி அவருடைய அருளை நாம் பரிபூரணமாக பெறுவதற்கு சொல்ல வேண்டிய ஒரு மந்திரத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

இந்த மந்திரத்தை மாதத்தில் ஒருமுறை மட்டும் கூறினால் போதும். அந்த ஒரு நாள் என்பது முருகப்பெருமானுக்கு உகந்த கிருத்திகை நட்சத்திரம் வரும் நாளாக இருக்க வேண்டும். அன்றைய தினம் காலையிலேயே எழுந்து பிரம்ம முகூர்த்த நேரத்தில் குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கும் முருகனின் திருவுருவப்படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு முருகப்பெருமானுக்கு ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து அவரை மனதார வழிபாடு செய்யுங்கள். அன்றைய தினம் எந்த நேரத்தில் உங்களால் முருகனின் ஆலயத்திற்கு செல்ல முடியுமோ அந்த நேரத்தில் செல்லுங்கள்.

அவ்வாறு செல்லும் பொழுது முருக பெருமானுக்காக மலர்களை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும். அந்த மலர்களை முருகப்பெருமானுக்கு கொடுத்துவிட்டு ஆறு நெய் தீபங்களை முருகப்பெருமானுக்கு முன்பாக ஏற்றி வைத்து முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். இப்படி வழிபாடு செய்து முடித்த பிறகு இந்த மந்திரத்தை 11 முறை நிறுத்தி தானத்துடன் முருகப்பெருமானை பார்த்து கூற வேண்டும். இந்த மந்திரம் சண்முக காயத்ரி மந்திரம் என்று கூறப்படுகிறது. கார்த்திகை பெண்கள் ஆறு பேரால் வளர்க்கப்பட்ட ஆறு வடிவத்தில் இருந்த முருகப்பெருமானை அன்றைய தினம் நாம் சண்முக காயத்ரி மந்திரத்தை கூறி வழிபாடு செய்தோம் என்றால் முருகப்பெருமானின் அருளால் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி நல்ல அற்புதமான மாற்றங்கள் ஏற்படும்.

- Advertisement -

மந்திரம்

ஓம் ஷண்முகாய வித்மஹே ஸ்வாமினாதாய தீமஹி
தந்தோ குருகுஹ ப்ரசோதயாத்

இதையும் படிக்கலாமே:விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரை வழிபடும் நேரம்

மாதத்தில் ஒரு நாள் மட்டும் 11 முறை இந்த மந்திரத்தை முழுமனதோடு முருகப்பெருமானை நினைத்து கூறுபவர்களுக்கு வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத அற்புதங்கள் நிகழும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்