சில பிள்ளைகளுக்கு ஜாதக கட்டத்திலேயே படிப்பதில் பிரச்சனைகள் இருக்கும். இதனால் அவர்களுடைய திறமை குறைவாக வெளிப்படும். படிப்பில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். மதிப்பெண்கள் அதிகமாக எடுக்க மாட்டார்கள். இதனால் பெற்றவர்களுக்கு தீராத மனக்கவலை இருக்கும்.
இந்த காலத்தில் நன்றாக படித்தாலே பணம் சம்பாதிக்க வாய்ப்புகள் குறைவு. இதில் படிக்கவில்லை என்றால் என்ன செய்வது. படிக்காத சில பேர் தொழில் அதிபர்களாக, அடுத்தவர்களுக்கு சம்பளம் கொடுக்கும் முதலாளியாக இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி சொல்ல வரவில்லை.
லட்சுமி தேவி நம்மிடம் நிரந்தரமாக தங்க வேண்டும் என்றால், சரஸ்வதி தேவியின் அனுகிரகமும் நமக்கு தேவை அல்லவா. அதற்காகத்தான் இந்த பரிகாரம். உங்களுடைய பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்கவில்லை என்றால் ஆன்மீகம் சொல்லும் இந்த எளிய பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயம் நல்ல மாற்றம் தெரியும்.
பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம்
இதற்கு ஒரு திருநங்கையை உங்கள் வீட்டிற்கு அழைக்க வேண்டும். உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் அவர்களிடம் சொல்லி நம்பிக்கையான திருநங்கையாக பார்த்து வீட்டிற்கு கூட்டிகிட்டு வாங்க. அவங்களுக்கு ஒரு பச்சை நிறத்தில் இருக்கும் புடவையை தானமாக கொடுக்க வேண்டும்.
ஒரு தாம்பூல தட்டில் பச்சை நிற புடவை, வெற்றிலை பாக்கு, பழம் பூ தட்சனையாக உங்களால் முடிந்த ரொக்கம் வைத்து இதை அவர்களுக்கு புதன்கிழமை அன்று தானம் கொடுத்து விட்டால், உங்களுடைய பிள்ளைகள் படிப்பில் இருக்கும் தடை விலகும் என்று சொல்லப்பட்டுள்ளது. காரணம் அர்த்தநாரீஸ்வரர் சொரூபத்தில் இருக்கும் திருநங்கைகள் புதனின் அம்சத்தைக் கொண்டவர்கள்.
ஜாதக கட்டத்தில் புதன் பகவான் சரியாக இல்லை எனும் பட்சத்தில் தான் பிள்ளைகள் சரியாக படிக்க மாட்டாங்க. அதனால் இந்த பரிகாரத்தை செய்யும் போது உங்களுடைய பிள்ளைகளின் படிப்பில் இருக்கும் தடை விலகும் என்பது நம்பிக்கை. அதேபோல உங்களுடைய வீட்டில் ஒரு அர்த்தநாரீஸ்வரர் படத்தை வைத்து தினமும் உங்களுடைய பிள்ளைகளை வழிபாடு செய்யச் சொன்னாலும், நன்மையே.
இதோடு சேர்த்து ஏழை குழந்தைகளுக்கு உங்களால் முடிந்த படிப்பிற்கான உதவியை செய்ய வேண்டும். நிறைய பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வமாக இருப்பாங்க. ஆனால் அவங்க அம்மா அப்பாவால் அவர்களை அரசாங்க பள்ளிக்கூடத்தில் கூட சேர்த்து படிக்க வைக்க முடியாத சூழ்நிலையில் இருப்பார்கள்.
இதையும் படிக்கலாமே: வெற்றி தரும் முருகர் மந்திரம்
அப்படிப்பட்ட பிள்ளைகளுக்கு உதவி செய்து நோட்டு புத்தகம் வாங்கி கொடுப்பது சீருடை வாங்கி கொடுப்பது கல்விக்கு தேவையான உதவிகளை செய்வது போன்ற விஷயங்களை நீங்கள் தானம் செய்யும்போது, உங்களுடைய பிள்ளை தானாக படிக்க தொடங்கி விடும். மேல் சொன்ன விஷயங்களை கடைப்பிடித்தால் நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.