ஒருமுறை வீழ்வது தோல்வி அல்ல. ஆனால் விழ்ந்தே கிடைப்பதுதான் தோல்வி என்று சொல்லுவார்கள். ஒரு முறை முயற்சிகளில் தோல்வி அடைந்து விட்டால் அந்த தோல்வியை நினைத்து அப்படியே இருந்து விடாமல், மீண்டும் மீண்டும் முயற்சி செய்து வெற்றி என்ற வாகையை சூடிக் கொள்ள வேண்டும்.
அப்படிப்பட்ட மனிதர்கள் தான் இன்று வாழ்க்கையில் ஜெயித்து பெரிய இடத்தில் இருக்கிறார்கள். ஆகவே தோல்வியை கண்டு துவண்டு போகாமல், இறைவனை நினைத்து உங்களுடைய அடுத்தடுத்த முயற்சிகளை மேற்கோள்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
முருகர் மந்திரம்
என்னதான் சொன்னாலும் மனசு சமாதானம் அடையவில்லை. என்னுடைய வாழ்க்கையில் பிரச்சனைகள் மட்டும் தான் என்னை தொடர்கிறது. எவ்வளவு முயற்சி செய்தாலும் தோல்வி மட்டும்தான் கிடைக்கிறது. என்பவர்கள் உங்கள் தலைவிதியை மாற்ற உங்கள் விதியை வெல்ல, முருகப்பெருமானின் இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.
எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும், எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் சாதாரணமாக சரியாகிவிடும். உங்களுடைய தோல்விகளும் படிப்படியாக வெற்றிப்பாதையை நோக்கிச் செல்லும் அது என்ன மந்திரம், அதை எப்படி உச்சரிப்பது ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
நம்பிக்கையோடு மனதை ஒருநிலைப்படுத்தி முருகா என்று கூப்பிட்டால் போதும். எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையும் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து உதவி செய்யக்கூடிய கலியுகத்து கடவுள் முருகன். இந்த மந்திரத்தை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் உச்சரிக்கலாம். காலை, மாலை வேலை செய்யும் இடத்தில், பிரச்சனைகள் வரக்கூடிய இடத்தில், இப்படி எந்த இடத்தில் இந்த மந்திரத்தை உச்சரித்தாலும் தவறு கிடையாது.
‘ஓம் நமோ குமாராய நம’ என்ற ஒரு வரி மந்திரம் உங்களுக்கான வெற்றியை தேடி தரும். இந்த மந்திரம் சாதாரண மந்திரம் அல்ல. முருகப்பெருமானுக்கு சிவபெருமான் அருளிய மந்திரம். இந்த மந்திரத்தை உங்களுடைய நலனுக்காக எதற்கு வேண்டுமென்றாலும் பயன்படுத்தலாம்.
நல்ல வேலை கிடைக்க, நல்ல தொழில் அமைய, தீராத நோய் தீர அல்லது உங்களுடைய பிள்ளைகளின் படிப்புக்காக என்று எந்த தேவையை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்றாலும் முருகப்பெருமானின் நினைத்து இந்த மந்திரத்தை சொன்னால், முருகப்பெருமான் அந்த வேண்டுதலை உங்களுக்கு சீக்கிரமே நிறைவேற்றி வைப்பார்.
செவ்வாய் கிழமை தோறும் வீட்டில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, முருகப்பெருமானின் முன்பாக அமர்ந்து 108 முறை இந்த மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு தோல்வி என்பதே நிச்சயம் இருக்காது. செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உரிய தினம் என்பதால், இந்த நாளில் சொல்வது சிறப்பு என்று சொல்லப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே: பெண்கள் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனை தீர பரிகாரம்
ஆனால் உங்களுக்கு இக்கட்டான சூழ்நிலை வரும்போது, திக்கு தெரியாமல் தவிக்கும் போது இந்த மந்திரத்தை சொன்னால் முருகப்பெருமான் உடனடியாக உதவி செய்ய வருவார். நம்பிக்கையோடு சொல்லுங்கள் நிச்சயம் நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.