ஆருத்ரா தரிசனம் 2023

nadarajar
- Advertisement -

மார்கழி மாதம் வரக்கூடிய சிறப்பு மிக்க நாட்களில் இந்த ஆருத்ரா தரிசனமும் ஒன்று. ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன. மார்கழி மாதத்தில் வரக்கூடிய திருவாதிரை நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் சேரும் அந்த நேரத்தை தான் ஆருத்ரா தரிசனம் என்று சொல்லுவார்கள். சிவனுக்கு ருத்ரன் என்ற இன்னொரு பெயர் இருக்கிறது.

ருத்ரன் என்றால் கோபமான குணத்தை கொண்டவர், அழிக்கக்கூடிய செயலை செய்யக்கூடியவர், ருத்ரன் முன்பாக ஒரு ‘ஆ’ சேர்த்துக் கொண்டீர்கள் என்றால், ஆருத்ரன் என்று வரும், அதாவது அமைதியாக ஆனந்த தாண்டவம் ஆட கூடிய சிவபெருமானின் தரிசனம் ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படும். இந்த ஆருத்ரா தரிசனம் நாளை வரவிருக்கிறது.

- Advertisement -

அசுரர்களை அழிக்க ருத்ரனாக அவதாரம் எடுத்து, அசுரனை அழித்து, மன சாந்தி அடைந்து பிறகு நடராஜர் கோளத்தில் நடனம் ஆடிக்கொண்டே நமக்கு ஆருத்ரா தரிசனத்தை சிவபெருமான் கொடுப்பார். பெரும்பாலும் இந்த ஆருத்ரா தரிசனமானது எல்லா சிவன் கோவில்களிலும் விசேஷமாக கொண்டாடப்படும். சிவபெருமான் இருக்கக்கூடிய கோவில்களில் எல்லாம் நடனம் ஆடிக் கொண்டிருக்கும் நடராஜரின் சிலை இருக்கும்.

சிவபெருமானுக்கு தினம் தினம் அபிஷேகங்களும் ஆராதனையும் நடக்கும். ஆனால் நடராஜருக்கு தினமும் அபிஷேகம் நடக்காது. நாளைய தினம் இந்த நடராஜருக்கு சிறப்பான அபிஷேகங்களும் ஆராதனை செய்யப்படும். சிவனுக்கு உகந்த சிறப்பு வாய்ந்த ஆருத்ரா தரிசனம் நாளை எந்த நேரத்தில் வருகிறது, இந்த நாளில் சொல்ல வேண்டிய சிவ மந்திரம் என்ன என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் இந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

ஆருத்ரா தரிசன நேரம்

26-12-2023 செவ்வாய்க்கிழமை காலை 5.56 மணியிலிருந்து 27-12-2023 புதன்கிழமை காலை 06.07 மணி வரை பௌர்ணமி திதி இருக்கிறது. 26-12-2023 செவ்வாய்க்கிழமை இரவு 10:58 மணி முதல், 27-12-2023 புதன்கிழமை நள்ளிரவு 12.06 மணி வரை திருவாதிரை நட்சத்திரம் இருக்கின்றது. இப்போது பௌர்ணமி திதியும், திருவாதிரை நட்சத்திரமும் சேரக்கூடிய அந்த நேரத்தை தான் ஆருத்ரா தரிசன நேரம் என்று சொல்லுவோம்.

நடராஜர் கோவிலில் நாளை தான் ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்பட இருக்கின்றது. டிசம்பர் 27ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை 3.00 மணியிலிருந்து 6.00 மணிக்குள்  நடராஜருக்கு சிறப்பு ஆராதனை அபிஷேகங்கள் நடைபெறவிருக்கின்றது. இதனால் நாமும் இந்த நேரத்தையே கணக்கு வைத்துக் கொள்வோம்.‌

- Advertisement -

பின் சொல்லக்கூடிய இந்த மந்திரத்தை நாளை அதிகாலை வேலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் உச்சரிப்பது ரொம்ப ரொம்ப சிறப்பு. உங்கள் வீட்டு பக்கத்தில் சிவன் கோவிலில் ஆருத்ரா தரிசன பூஜைகள் நடந்தால், அங்கு சென்று பூஜையில் கலந்து கொண்டு இந்த மந்திரத்தை சொல்லலாம். முடியாதவர்கள் வீட்டிலிருந்தபடியே சிவபெருமானை நினைத்துக் கொள்ளுங்கள்.

நாளை பிரம்ம முகூர்த்த நேரத்தில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வையுங்கள். உங்கள் மனதில் ஏதாவது ஒரு கோரிக்கையை சிவபெருமானிடம் வையுங்கள். அந்த கோரிக்கை நிறைவேற வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டு பின் சொல்லக்கூடிய மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள்.

ருத்ர காயத்ரி மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தந்நோ ருத்ர ப்ரசோதயாத்

இதையும் படிக்கலாமே: மார்கழி பௌர்ணமியில் பீரோவில் வைக்க வேண்டிய பொருள்

நாளைய தினம் சிவபெருமானை நினைத்து இந்த மந்திரத்தை சொன்னாலே போதும். உங்களுக்கு சிவபெருமானின் அருள் ஆசி முழுமையாக கிடைத்துவிடும். உங்களுடைய வேண்டுதல் பலிக்கும். வேண்டிய வரத்தை சிவபெருமானிடம் உடனே வாங்கிவிடலாம். சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடும் போது சந்தோஷத்தோடு இருப்பார் அல்லவா. வேண்டிய வரங்களை நீங்களும் சந்தோஷமாக கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள்.

- Advertisement -