தப்பித் தவறி கூட, உங்களது காலால் இந்த ஒரு பொருளை மிதித்து விடாதீர்கள். ஏழேழு ஜென்மத்திற்கும் தீர்க்கமுடியாத சாபம் வந்து சேரும்.

இப்படியெல்லாம் கூடவா நமக்கு சாபம் வரும் என்று சிந்திக்கும் அளவிற்கு ஒரு பெரிய சாபத்தை பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நாம் அன்றாட வாழ்வில் நசுக்கும் எரும்பிலிருந்து, எந்த உயிருக்கு தீங்கு இழைத்தாலும், அதன் மூலம் சாபம் வரும் என்று கேள்விப்பட்டிருப்போம். உயிர் இல்லாத பொருளை அதாவது, அதாவது, இந்தப் பொருளுக்கு உயிர் இல்லை என்று சொல்ல முடியாது. மரம் செடி கொடி புல் வகைகளுக்கு ஒரு அறிவு இருக்கிறது என்று சொல்லுவார்கள் அந்த வகையில் ஓர் அறிவு உள்ள, இந்த ஒரு பொருளை நாம் மிதித்தால் கூட கண்ணுக்குத் தெரியாத சாபம் வரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

Arugampul juice benfits Tamil

அது எந்தப் பொருள் தெரியுமா? விநாயகருக்கு உகந்ததாக சொல்லும் அருகம்புல் தான். பொதுவாகவே புல்கள் இருக்கும் தடத்தில் நாம் நடப்போம். அது தவிர்க்க முடியாத ஒன்று தான். முடிந்தவரை செருப்புகளை அணிந்து கொண்டு அருகம்புல் இருக்கும் இடத்தில் நடப்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது. இது தவிர சில பேர் அடக்கி கொள்ள முடியாமல் இயற்கை உபாதைகளை, அருகம்புல் இருக்கும் இடத்தில், சிறுநீர் கழிப்பது எச்சில் துப்புவது போன்ற தவறான செயல்களை செய்து விடுவார்கள்.

அந்த சமயத்தில் நமக்கு கட்டாயம் சாபம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அருகம்புல்லுக்கு அடுத்தவர்களுக்கு சாபம் விடக்கூடிய சக்தி உண்டு என்றும் சொல்லப்பட்டுள்ளது. முடிந்தவரை அருகம்புல் உள்ள  இடங்களில், சிறுநீர் கழிப்பது செருப்பு காலால் மிதிப்பது எச்சில் துப்புவது இது போன்ற மேலும் சில பல, தவறான காரியங்களில் இனி ஈடுபட வேண்டாம்.

arugampul

இப்படியாக அருகம்புல் இருக்கும் இடத்தை உதாசீனப்படுத்தினால் நம்முடைய வாழ்க்கையில் என்ன நிகழும்? தொடர் தோல்வி, காரியத்தடை, சுப காரியத்தில் தாமதம், திறமை இருந்தும் முன்னேற்றம் இல்லாமல் போவது, இப்படியாக வாழ்க்கையில் முன்னேற்றத் தடைகள் அதிகமாக ஏற்படும். ஏனென்றால் தடைகளை தகர்த்தெறியும் விநாயகருக்கு உரியது அருகம்புல் என்பதையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அருகம்புல்லில் கூட, சில பில்கள் இறைவனை போய்ச்சேரும். சில பில்கள் மருத்துவ குணத்திற்கு பயன்படும். சில பில்கள் எதற்கும் பயன்படாமல் காய்ந்து தான் போகும். இதில் நாம் உதாசீனப்படுத்த கூடிய புல் எது என்பதை நம்மால் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது.

vinayagar-5

முடிந்தவரை உங்களுக்கு எந்த ஒரு சாபமும் எந்த ஒரு தோஷமும் வராமல் இருக்க வேண்டும் என்றால் இப்படிப்பட்ட விஷயங்களில் சற்று பார்த்து கவனமாக இருப்பது நல்லது என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
வாழையடி வாழையாக, உங்கள் குலம் தழைக்க, வாழை மரத்தை உங்கள் வீட்டு தோட்டத்தில் வைக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதா? வாழை மரம் செழிப்பாக வளர, சுலபமான சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.