வாழையடி வாழையாக, உங்கள் குலம் தழைக்க, வாழை மரத்தை உங்கள் வீட்டு தோட்டத்தில் வைக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதா? வாழை மரம் செழிப்பாக வளர, சுலபமான சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக.

banana

நாம் எப்போதும் அதிசயக்கின்ற வகையில் பல அற்புதமான தாவரங்களைக் கொண்ட நாடாக நம் இந்தியத் திரு நாடு விளங்குகிறது. இவற்றில் ‘மா, பலா, வாழை” ஆகிய கனிகளைத் தருகின்ற மரங்களுக்கு மட்டுமே தெய்வீக ஸ்தானத்தை தமிழர்கள் கொடுத்தார்கள். தற்காலங்களில் நகர வாழ்க்கை முறையில் வாழுகின்ற பலரும் தங்களுக்கு கிடைக்கின்ற குறைந்த இடத்தில் வளர்க்க விரும்புகின்ற மர வகைகளில் ஒன்றாக “வாழை மரம்” நிச்சயம் இடம் பெறுகின்றது. அத்தகைய வாழை மரங்களை நம் வீட்டு 2தோட்டங்களில், நாம் எந்த முறையில் வளர்த்தால் சிறப்பான பலன்களை அம்மரத்தில் இருந்து பெற முடியும் என்பதை குறித்த சில எளிய வழிமுறைகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

banana-leaf

வாழை மரக் கன்றை தங்கள் வீட்டில் நட்டு வளர்க்க விரும்புவார்கள், அந்த வாழை மரக் கன்று வளர்வதற்கு நன்கு சூரிய ஒளி கிடைக்கின்ற வகையில் இருக்கின்ற ஒரு இடத்தில் குறைந்தது இரண்டு அடி தொலைவிற்கு வரை வேறு எந்த மரம், செடி, கொடிகள் இல்லாதவாறு பார்த்து அந்த இடத்தில் வாழை மரக்கன்றை மிதமான ஆழம் குழி தோண்டி வாழை மரக்கன்றை நட்டு வைக்க வேண்டும்.

வாழைமரம் ஒரு நீர்த் தன்மை வாய்ந்த மரம் என்பதால் கோடை காலங்களில் அவற்றிற்கு நன்கு நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். நகர்ப்புறங்களில் தண்ணீர் பற்றாக்குறையினால் அவதிப்படுபவர்கள் வாழை மரத்திற்கு தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் குறைந்தபட்சம் 1 முதல் 2 கோப்பை அளவாவது தண்ணீர் கிடைக்கும் படி செய்வது அவசியம். அப்போது தான் அந்த வாழைமரம் வெயில் காலங்களில் மிகவும் வற்றிப்போய் விடாமல், சீரான விதத்தில் நன்கு வளர்ந்து இலைகள், காய்களை தருகின்ற மரமாக மாறும்.

வாழை மரம் நன்கு வளர வேண்டும் என விரும்புபவர்கள் வீட்டில் வளருகின்ற தங்கள் வாழைமரத்தில் அடிக்கடி தங்கள் வீட்டுத் தேவைகளுக்காக வாழை இலைகளை அறுக்கக்கூடாது. இப்படி வாழை இலைகளை அடிக்கடி அறுப்பதால், அந்த வாழை மரத்தின் வளர்ச்சி வேகம் குறைந்து, வாழை மரம் பட்டுப் போய் விடக்கூடிய நிலையையும் ஏற்படுத்திவிடும். வாழை மரம் வளருகின்ற காலத்தில் அம்மரத்தில் காய்ந்து தொங்குகின்ற இலைகள் மட்டும் நார்களை அறுத்து வீசி எறியாமல், அவற்றை அந்த வாழை மரத்தின் அடியிலேயே புதைத்து, அதன் மீது மண் போட்டு மூடி விடுவதால் அவை நன்கு மட்கி, அந்த வாழை மரத்திற்கு இயற்கை உரமாக மாறி அந்த மரம் நன்கு வளர்வதற்கு உதவி புரியும்.

- Advertisement -

வாழை மரம் வளருகின்ற காலத்தில் அந்த மரம் நன்கு வளருவதற்கு உங்கள் வீட்டு சமையலறை கழிவுகளை இயற்கை உரமாக இடுவது சிறந்த முறையாகும். அதிலும் குறிப்பாக பழைய பிஸ்கட்டுகள், ரொட்டித் துண்டுகள் போன்றவற்றை அந்த வாழை மரத்தின் அடியில் இருக்கும் மண்ணை தோண்டி எடுத்து, அதில் இந்த கலவையை போட்டு மண் போட்டு மூடி விடுவதால், அவை ஊட்டம் தரும் உரமாக மாறி வாழை மரத்தில் குலை தள்ளும் காலத்தில் அந்த மரத்தின் காய் மற்றும் பழங்கள் மிகப்பெரிய அளவில் வளர்வதற்கு உதவுவதாக வாழை மரம் வளர்ப்பு ஆய்வில் ஈடுபட்டிருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

biscut2

வாழை மரத்திற்கு மற்றுமொரு சிறந்த வளர்ச்சி ஊக்கியாக பசு மாட்டின் சிறுநீர் உதவுகிறது. இந்த பசுமாட்டு சிறுநீர். கோமியம் என அழைக்கப்படும் பசுமாட்டின் சிறுநீர் கலந்த பஞ்சகவ்யா எனும் இயற்கை உரத்தையும் தண்ணீரில் முறையான அளவில் கலந்து, வாழை மரத்திற்கு விட்டு வருவதால் வாழை மரம் நோய் எதிர்ப்பு திறன் பெற்று நன்கு வளரும்.

pasu-komiyam

வாழை மரம் நன்கு வளர்ந்து குலைதள்ளிய பிறகு அந்த மரம் அதிக எடை காரணமாக ஒரு பக்கம் சாயும் நிலை ஏற்படுகிறது. இத்தகைய மரங்கள் அதிக அளவு பலமான காற்று வீசினாலே, முற்றிலும் சாய்ந்து கீழே விழுந்து விடும் நிலையும் ஏற்படும். இதைத் தவிர்ப்பதற்கு குலை தள்ளும் நிலையில் இருக்கும் வாழை மரத்திற்கு அருகில் உறுதியான மரக்கட்டைகள் கொண்டு முட்டுக் கொடுத்து நிற்க வைக்க வேண்டும்.