மனிதர்களாக பிறந்த நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விருப்பத்தை மனதில் வைத்துக் கொண்டுதான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இந்த ஆசை நிறைவேறினால் நன்றாக இருக்கும், இந்த ஆசை நிறைவேறினால் நம் வாழ்க்கை மாறிவிடும், இந்த விருப்பம் நிறைவேற வேண்டும் என்று பல விதங்களில் நாம் நினைத்திருப்போம். அந்த ஆசைகள் நிறைவேறுவதற்குரிய முயற்சியையும் நாம் செய்வோம். இருப்பினும் ஒரு சிலருக்கு அந்த ஆசைகள் நிறைவேறாமல் தடைப்பட்டு கொண்டே இருக்கும். அப்படி இருக்கக்கூடிய சமயத்தில் அது நியாயமான ஆசையாக இருக்கும் பட்சத்தில் விநாயகப் பெருமானை எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
விநாயகர் வழிபாடு
தடைகளை நீக்கக்கூடிய தெய்வமாக திகழக் கூடியவர் தான் விநாயகப் பெருமான் என்று நம் அனைவருக்கும் தெரியும். அதனால் தான் எந்த ஒரு காரியத்தை செய்வதற்கு முன்பாகவும் விநாயகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும் அப்பொழுதுதான் அந்த காரியம் தடையின்றி நல்ல முறையில் நடந்திடும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். மிகவும் எளிமையான முறையில் வழிபாடு செய்யக்கூடிய தெய்வங்களுள் ஒருவராகவும் விநாயகப் பெருமான் திகழ்கிறார். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானை வழிபாடு செய்யும் ஒரு முறையைப் பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
இந்த வழிப்பாட்டிற்கு நாம் பெரிதும் செலவு செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அருகில் இருக்கக்கூடிய விநாயகரின் ஆலயத்திற்கு தான் செல்ல வேண்டும். விநாயகரின் ஆலயம் என்பது அரிதான ஒரு ஆலயம் கிடையாது. எங்கு திரும்பினாலும் விநாயகர் வீற்றிருப்பார் என்பது நம் அனைவரும் அறிந்ததே. ஒரே ஆலயத்திற்கு தான் தொடர்ச்சியாக செல்ல வேண்டும் என்றும் இல்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆலயத்திற்கு செல்லலாம். அது நம்முடைய விருப்பம். எந்த நேரத்தில் செல்ல வேண்டும் என்பதும் கணக்கில் இல்லை. தங்களுடைய வசதிக்கு ஏற்ப காலையிலோ, மாலையிலோ எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த வழிபாட்டை செய்யலாம்.
அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு இருக்கக்கூடிய விநாயகப் பெருமானை 21 முறை வலம் வர வேண்டும். இவ்வாறு 21 முறை வலம் வந்த பிறகு விநாயகப் பெருமானிடம் தங்களுடைய ஆசை என்னவோ அந்த ஆசையை கூறி வழிபாடு செய்துவிட்டு தோப்புக்கரணம் போட்டுவிட்டு வரவேண்டும். தங்களால் இயலும் பட்சத்தில் அவருக்கு தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றலாம். அருகம்புல் வாங்கி கொடுக்கலாம். மலர்களை வாங்கி கொடுக்கலாம். இப்படி தொடர்ச்சியாக 21 நாட்கள் 21 முறை வலம் வர வேண்டும்.
இப்படி வலம் வந்து உங்களுடைய நியாயமான ஆசையை விநாயகப் பெருமானிடம் கூறினீர்கள் என்றால் அந்த 21 நாட்கள் நிறைவடைவதற்குள்ளாகவே உங்களுடைய ஆசைகள் நிறைவேறுவதற்குரிய வழிகளை விநாயகப் பெருமாள் அருள்வார் என்று கூறப்படுகிறது. உங்களுடைய ஆசைகள் நிறைவேறிய பிறகு தங்களால் இயன்ற அபிஷேக பொருட்களையும், வஸ்திரங்களையும் வாங்கி விநாயகப் பெருமானுக்கு சாற்றலாம் அல்லது விநாயகப் பெருமானுக்கு பிடித்தமான ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைத்து படைத்து அங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக தரலாம். இந்த வழிபாட்டை செய்யும் பொழுது 21 நாட்களும் அசைவத்தை தவிர்த்து சைவமாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனையாக கருதப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:காணும் பொங்கல் கொண்டாடுவது ஏன்?
மிகவும் எளிமையான இந்த விநாயகர் வழிபாட்டை முழுமனதோடு 21 நாட்கள் சுத்தமாக இருந்து செய்பவர்களுக்கு விநாயகப் பெருமானின் அருளால் அவர்களுடைய ஆசைகள் நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்