ஆனி மாதம் வரக்கூடிய, வாராகிக்கு விசேஷமான ஆஷாட நவராத்திரியானது நாளை முதல் துவங்கவிருக்கிறது. 26-6-2025 துவங்கக்கூடிய ஆஷாட நவராத்திரி 4-7-2025ஆம் தேதி அன்று நிறைவடைகிறது. இந்த ஒன்பது நாளும் வாராகி அன்னைக்கு கோலாகலமாக பூஜைகள், புனஸ்காரங்கள் அபிஷேக ஆராதனை அலங்காரங்கள் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் வீட்டின் அருகில் வாராஹி சன்னிதானம் இருக்கக்கூடிய கோவில்கள் ஏதேனும் இருந்தால், அந்த நவராத்திரி விழாவில் கலந்து கொண்டு வாராகியை வழிபட உங்கள் வம்சத்திற்கே வாராகியின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். எதிரி தொல்லை நீங்கும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். தேவையில்லாத கண் திருஷ்டியால் பாதிக்கப்பட மாட்டீர்கள், ஏவல் பில்லி சூனியம் போன்ற எந்த ஒரு கெட்ட சக்தியாலும் உங்களை எதுவும் செய்ய முடியாது.
உங்களுக்கு வாராகி ஒரு பாதுகாப்பு கவசமாக திகழ்வாள். நீங்கள் வாராஹி பக்தர்களாக இருக்கும் பட்சத்தில் இந்த உலகத்தில் எந்த ஒரு கெட்ட விஷயத்திற்கும் பயப்பட வேண்டிய அவசியமே கிடையாது. வாராகி வழிபாடு செய்யும் பக்தர்களுக்கு அவ்வளவு பாதுகாப்பு இருக்கிறது. இது முதல் விஷயம்.
நீங்கள் வாராகியை எப்படி வழிபாடு செய்தாலும் சரி, இந்த வாராஹி நவராத்திரி ஒன்பது நாளும் அந்த வாராகியை மனதில் நினைத்து, பின் சொல்லக்கூடிய இந்த பீஜ மந்திரத்தை சொல்லி வாராகிய வழிபாடு செய்ய, உங்களுடைய வாழ்வில் அளவில்லாத பிரம்மாண்ட வளர்ச்சியை பெறுவீர்கள். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள்.
மேலும் மேலும் செல்வ வளம் அதிகரிக்க வாராகித்தாய் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு பலவிதமான வாய்ப்புகளைக் கொண்டு வந்து கொட்டிக் கொடுப்பாள். வியாபாரத்தில் உங்களை முன்னேற அடைய செய்வாய். அந்த சக்தி வாய்ந்த ஒன்பது பீஜ மந்திரங்கள் என்ன. அதை இந்த வாராகி நவராத்திரி நாளில் நாம் எப்படி உச்சரிக்க வேண்டும் ஆன்மீகம் சார்ந்த தகவலை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
வாராகி சக்தி வாய்ந்த பீஜ மந்திரம்
ஓம் ஐம் வாராகி நமஹ !
ஓம் க்லீம் வாராகி நமஹ !
ஓம் க்ரூம் வாராகி நமஹ !
ஓம் ரம் வாராகி நமஹ !
ஓம் லம் வாராகி நமஹ !
ஓம் யம் வாராகி நமஹ !
ஓம் ரம் வாராகி நமஹ !
ஓம் வ வாராகி நமஹ !
ஓம் சௌ வாராகி நமஹ !
ஓம் ஹ்ரீம் வாராகி நமஹ !
இவ்வளவுதான். இந்த மந்திரத்தை இந்த வாராஹி நவராத்திரியில் ஒரு நாளைக்கு ஒருமுறை படித்தாலும் சரி, அல்லது ஒரு நாளைக்கு ஒன்பது முறை படித்தாலும் சரி. அது உங்களுடைய சவுரியம். நீங்கள் வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் இந்த வாராஹி நவராத்திரியில் தவறாமல் இந்த ஒன்பது வரி மந்திரத்தை படித்து விடுங்கள்.
இதையும் படிக்கலாமே: வெள்ளி மோதிரம் பலன்கள்
இந்த மந்திரம் அதி சக்தி வாய்ந்த மந்திரம். இதில் இருக்கக்கூடிய பீஜங்கள் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் துன்பங்களை விளக்கக் கூடியவை. இந்த ஒன்பது நாளும் காலையில் எழுந்து குளிக்கிறீங்க. வெறும் வயிற்றில் இந்த மந்திரத்தை சொல்றீங்க. உங்க வேலையை தொடங்கிடுங்க. இவ்வளவுதான். பிறகு இந்த ஒன்பது நாட்கள் கழித்து உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை நீங்களே புரிந்து கொள்வீர்கள். வாராகி நிச்சயம் உங்களுக்கு உதவி கரம் நீட்டுவாங்க. நம்பிக்கை உள்ளவர்கள் இதை பின்பற்றி பலம் பெறவும்.