- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஆஷாட நவராத்திரி ஒன்பது நாளும் சொல்ல வேண்டிய மந்திரம்

ஆஷாட நவராத்திரி ஒன்பது நாளும் சொல்ல வேண்டிய மந்திரம்

- Advertisement -

ஆனி மாதத்தில் வரக்கூடிய ஆஷாட நவராத்திரியானது நாளைய தினம் 26-6-2025 வியாழக்கிழமை அன்று தொடங்கி, ஜூலை 4-ம் தேதி நிறைவடைகிறது. இந்த நவராத்திரியை வாராகி நவராத்திரி என்றும் சொல்லுவார்கள். இந்த 9 நாள், ஆஷாட நவராத்திரியில் வாராஹியின் பரிபூரண அருள் கிடைக்க வேண்டும் என்றால், வாராஹியின் எந்த நாமங்களைச் சொல்லி வழிபாடு செய்ய வேண்டும், எளிமையான 12 மந்திர வரிகள் இந்த பதிவில் உங்களுக்காக.

வாராஹியை இந்த ஒன்பது நாட்கள் மனதார நான் வழிபாடு செய்யப் போகின்றேன். எனக்கு வாராகியின் திருவுருவப் படம் வைத்து வழிபாடு செய்ய முடியாது. நெய்வேதியங்கள் செய்து வைத்து வழிபாடு செய்ய முடியாது. காலையில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, ஒரு சில புஷ்பங்களால் பூஜை அறையில் இருக்கும் அம்பாளின் திருவுருவப்படத்திற்கு, அர்ச்சனை செய்துவிட்டு, இந்த 12 வரிகளை படித்தாலே போதும்.

- Advertisement -

நீங்கள் வாராஹிக்கு நவராத்திரி பூஜை செய்த புண்ணியத்தை நிறைவாக பெறலாம். நெய்வேதியம் சமைத்துதான் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வாராஹிக்கு நவராத்திரி தினங்கள் நடந்து கொண்டிருக்கிறது. தினமும் இரண்டு வாழைப்பழங்கள் வாங்கி பூஜை அறையில் வாராகிக்காக வைத்தாலே போதும். அவள் அதை மனநிறைவோடு பெற்றுக் கொள்வாள். சரி, நாளை ஆஷாட நவராத்திரியின் முதல் நாள். நாளையிலிருந்து, தினமும் காலையில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு சொல்ல வேண்டிய வாராகியின் திருநாம மந்திரங்கள் என்னென்ன.

வாராகியின் சக்தி வாய்ந்த பன்னிரண்டு நாமங்கள்

ஓம் ஐம் க்ளெளம் பஞ்சமியை நமஹ.
ஓம் ஐம் க்ளெளம் தண்டநாதாயை நமஹ.
ஓம் ஐம் க்ளெளம் சங்கேதாயை நமஹ.
ஓம் ஐம் க்ளெளம் சமயேஸ்வரியை நமஹ.

- Advertisement -

ஓம் ஐம் க்ளெளம் சமயசங்கேதாயை நமஹ.
ஓம் ஐம் க்ளெளம் வாராஹியை நமஹ.
ஓம் ஐம் க்ளெளம் போத்ரிணியை நமஹ.
ஓம் ஐம் க்ளெளம் சிவாயை நமஹ.

ஓம் ஐம் க்ளெளம் மஹாசேனாயை நமஹ.
ஓம் ஐம் க்ளெளம் அரிக்னியை நமஹ.
ஓம் ஐம் க்ளெளம் வராஹி நமஹ.
ஓம் ஐம் க்ளெளம் வராஹிதேவியை நமஹ.

- Advertisement -

இவ்வளவுதான். தினமும் வரக்கூடிய ஒன்பது நாட்களும் இந்த மந்திர வரிகளை காலையில் ஒரே ஒரு முறை படித்துவிட்டு உங்களுடைய வேலையை தொடங்கி விடுங்கள். வாராகியின் மொத்த அருளும் உங்களுக்கு கிடைக்கும். இந்த நவராத்திரியில் நீங்கள் என்ன வேண்டுதலை முதல் நாள் வைத்திருகிறிர்களோ, அந்த வேண்டுதல் பத்தாவது நாள் நிச்சயம் பலிக்கும்.

அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. நவராத்திரி என்றால் வீட்டில் கலசம் நிறுத்தி வாராகி சிலை வைத்து, வாராகி திரு உருவப்படத்தை வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. மனதில் வாராகியை அமர வைத்து, மனதில் எந்த கெட்ட எண்ணமும் இல்லாமல் சுயநலம் இல்லாமல், அடுத்தவர்களை கெடுக்கக்கூடிய நோக்கம் இல்லாமல், வாராகியை யார் வழிபாடு செய்தாலும் சரி, வாராஹியின் பரிபூரண ஆசி அவர்களுக்கு கிடைத்துவிடும்.

இதையும் படிக்கலாமே: இன்று அமாவாசை கடைசி 1 மணி நேர வேண்டுதல்

உங்கள் வீட்டின் பக்கத்தில் வாராகியின் சன்னிதானம் இருக்கக்கூடிய கோவில் இருக்கிறது என்றால் அந்த கோவிலுக்கு 9 நாளும் சென்று விளக்குப்போட்டு இந்த மந்திரத்தை சொன்னால் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும். வராகிக்கு நடக்கும் நவராத்திரி விழாவில் கலந்து கொள்ளுங்கள். வராகியில் அன்புக்கு நீங்களும் பாத்திரம் ஆக மாறிவிடுவீர்கள். வாராஹியின் அருளை பெறுவீர்கள். நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவுகளை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்