- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஆஷாட நவராத்திரியின் நிறைவு நாள் ஏற்ற வேண்டிய தீபம்

ஆஷாட நவராத்திரியின் நிறைவு நாள் ஏற்ற வேண்டிய தீபம்

- Advertisement -

வாராகி அம்மனை வழிபாடு செய்வதற்கு உகந்த நாட்களாக திகழக்கூடியது ஆஷாட நவராத்திரி என்று நம் அனைவருக்கும் தெரியும். பலரும் இந்த ஆஷாட நவராத்திரியில் தங்களுடைய வீட்டில் கலசம் வைத்து வழிபாடு செய்வார்கள். இன்னும் சிலர் வாராகி அம்மனின் சிலையை வைத்து வழிபாடு செய்வார்கள். சிலை இல்லாதவர்கள் படத்தை வைத்து வழிபாடு செய்வார்கள். இன்னும் சிலரோ மஞ்சளில் வாராகி அம்மனை பிடித்து வைத்து வழிபாடு செய்வார்கள். இது எதுவுமே இல்லை என்றாலும் கூட தீபத்தை மட்டுமாவது ஏற்றி வைத்து வழிபாடு செய்யும் வழக்கம் பலருக்கும் இருக்கும்.

இப்படி ஒன்பது நாட்களும் வாராகி அம்மனை ஆஷாட நவராத்திரியில் வழிபாடு செய்வதன் மூலம் வேண்டிய வரத்தை வாராகி அம்மன் அருள்வாள் என்று கூறப்படுகிறது. அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த 9 நாட்களும் வழிபாடு செய்ய இயலாதவர்கள் ஆஷாட நவராத்திரியின் கடைசி நாளான ஜூலை மாதம் நான்காம் தேதி இந்த ஒரு தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்ய வாராகி அம்மனின் அருளை பரிபூரணமாக பெற முடியும். அப்படிப்பட்ட தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

ஆஷாட நவராத்திரி நிறைவு நாள் வழிபாடு

வாராகி அம்மனுக்காக தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் அதுவும் ஆசாட நவராத்திரி நிறைவு நாளான ஜூலை மாதம் நான்காம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாலை 5 மணியிலிருந்து 6:30 மணிக்குள் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். இந்த தீபத்தை ஏற்றுவதற்கு ஒரு தாம்பாள தட்டை எடுத்து அதில் 5 என்ற எண்ணிக்கையில் சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு மேல் மருதாணி இலைகளை பரப்பி 2 கிராம்பு, இரண்டு ஏலக்காய், சிறிது சில்லறை நாணயங்களை போட்டு அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.

மருதாணி இலை கிடைக்காதவர்கள் செம்பருத்தி இலையை பயன்படுத்தியும் இதே முறையில் தீபம் ஏற்றலாம். ஒன்று அல்லது ஐந்து என்று எண்ணிக்கையில் செம்பருத்தி இலையை வைத்து தீபம் ஏற்ற வேண்டும். செம்பருத்தி இலையும் கிடைக்கவில்லை என்பவர்கள் வெற்றிலையை பயன்படுத்தலாம். இந்த தீபத்தை ஏற்றுவதற்காக நாம் சிறப்பான ஒரு எண்ணையை தயார் செய்ய வேண்டும். இந்த தீபத்தை வாராகி அம்மனின் படம் சிலைக்கும் முன்பாக ஏற்றலாம் அல்லது மகாலட்சுமிக்கு முன்பாகவும் ஏற்றலாம்.

- Advertisement -

தீபம் ஏற்றுவதற்காக சுத்தமான நல்லெண்ணையை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு சுத்தமான பசு நெய்யை ஊற்ற வேண்டும். அடுத்ததாக இரண்டு ஏலக்காயை எடுத்து அந்த ஏலக்காய்க்குள் இருக்கக்கூடிய விதைகள் அதாவது ஏல அரிசியை நன்றாக இடித்து தூள் செய்து அதையும் அதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். அதேப்போல் ஒரு துண்டு பச்சை கற்பூரத்தையும் நன்றாக இடித்து தூள் செய்து அதையும் அந்த எண்ணெயில் போட்டு நன்றாக கலந்து மூடி போட்டு வைத்து விடுங்கள். இது குறைந்தது ஒரு மணி நேரமாவது நன்றாக ஊற வேண்டும்.

இப்படி தெய்வீக மனம் பொருந்திய இந்த எண்ணையை நாம் வாராகி அம்மனை முழுமனதோடு நினைத்து ஆஷாட நவராத்திரி நிறைவு நாள் அன்று தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் பொழுது நாம் வேண்டிய வரத்தை வாராகி அம்மன் அருள்வாள். இந்த தீபத்தை ஏற்றும் பொழுது வாராகி அம்மனுக்காக ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். அதிலும் குறிப்பாக வாராகி அம்மனுக்கும் மகாலட்சுமி தாயாருக்கும் உகந்த மாதுளம் பழ முத்துக்களை வைப்பது கூடுதல் சிறப்பை தரும்.

இதையும் படிக்கலாமே: துரதிஷ்டத்தை நீக்கும் ஆனி நவமி

ஆஷாட நவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. எப்படி ஆஷாட நவராத்திரியின் முதல் நாள் சிறப்பானதோ அதே போல் அதன் இறுதி நாளும் மிகவும் சிறப்பானதே. சிறப்பு மிகுந்த ஆஷாட நவராத்திரியின் இறுதி நாளன்று இந்த ஒரு தீபத்தை ஏற்றி வாராகி அம்மனின் அருளை பரிபூரணமாக பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்