ஆஷாட பஞ்சமி என்பது மிகவும் விசேஷமான பஞ்சமியாக கருதப்படுகிறது. ஆனி மாதத்தில் வரும் பஞ்சமியை தான் நாம் ஆஷாட பஞ்சமி என்கிறோம். பொதுவாகவே பஞ்சமி என்பது வராகி அம்மனுக்குரிய வழிபாட்டு திதியாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஆனி மாதத்தில் வரக்கூடிய பஞ்சமி என்பது வாராகி அம்மன் அவதரித்த தினமாக கருதப்படுவதால் அன்றைய தினம் நம் வாராகி அம்மனை நினைத்து செய்யக்கூடிய எந்த காரியமாக இருந்தாலும் அதில் பல நன்மைகள் உண்டாகும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் ஆஷாட பஞ்சமி தினத்தில் செய்யக்கூடிய ஒரு எளிமையான தாந்திரீக பரிகாரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
எந்த அளவிற்கு நாம் வாராகி அம்மனை மனதார வழிபடுகிறோமோ அதே அளவிற்கு வாராகி அம்மனை மனதார நினைத்துக் கொண்டு செய்யக்கூடிய எந்த ஒரு காரியமாக இருந்தாலும் அந்த காரியம் பல மடங்கு வெற்றியைத் தரும் என்றுதான் கூற வேண்டும். அந்த வகையில் நாளைய தினம் செய்யக்கூடிய இந்த எளிமையான பரிகாரமானது நம் வாழ்வில் இருக்கக்கூடிய வறுமை நிலை அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பு உயர்வதற்கு உதவும்.
இந்த பரிகாரத்தை நாளைய தினம் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். பஞ்சமி திதி ஆரம்பித்த பிறகு அதாவது காலை 8:30 மணிக்கு மேல் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை செய்வதற்கு முன்பாக வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைத்துக் கொண்டு வராஹி அம்மனை மனதார வழிபாடு செய்து கொள்ளுங்கள்.
பிறகு ஒரு கண்ணாடி பாட்டிலை எடுத்து அதில் 11 ஏலக்காய், 11 ஒரு ரூபாய் நாணயங்கள், ஒரு சாதிக்காய், ஒரு விரலி மஞ்சள், ஒரு துண்டு பச்சை கற்பூரம் இவை அனைத்தையும் சேர்த்து அந்த கண்ணாடி பாட்டிலை இறுக்கமாக மூடிவிட்டு நீங்கள் சமைப்பதற்கு உபயோகப்படுத்தும் அரிசி பானைக்குள் இதை வைத்து விட வேண்டும். இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது முழுக்க முழுக்க வாராகி அம்மனை நினைத்துக் கொண்டுதான் செய்ய வேண்டும்.
இந்த கண்ணாடி பாட்டிலை அடுத்த மாதம் வரக்கூடிய வளர்பிறை பஞ்சமி அன்று தான் எடுக்க வேண்டும். அதுவரை எடுக்கக் கூடாது. அடுத்த மாதம் வரக்கூடிய பஞ்சமி திதியில் இந்த பாட்டிலை எடுத்து அதில் இருக்கக்கூடிய ஒரு ரூபாய் நாணயங்களை ஏதாவது ஒரு அம்மன் கோவில் உண்டியலில் சேர்த்து விடுங்கள். மீதம் இருக்கும் பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் சாம்பிராணி போடும்பொழுது இந்த பொடியையும் சேர்த்து போட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய தரித்திரமும் வறுமை நிலையும் நீங்கி செல்வ செழிப்பு உயரும்.
இதையும் படிக்கலாமே: தடைகள் நீங்க நினைத்தது நடக்க வழிபாடு
மிகவும் எளிமையான இந்த தாந்திரீக பரிகாரத்தை வாராகி அம்மனை முழுமனதோடு நினைத்து செய்பவர்களுக்கு அவர்களின் வறுமை நிலை மாறும். செல்வ செழிப்பு உயரும்.