நினைத்த காரியம் நினைத்தபடி நடைபெற வேண்டும் என்றுதான் அனைவரும் விரும்புவோம். அதேபோல்தான் அந்த காரியத்தில் எந்தவித தடைகளும் ஏற்படக் கூடாது என்றும் நினைப்போம். இப்படி நாம் ஒரு காரியத்தை செய்ய நினைக்கும் பொழுது அந்த காரியத்தில் எந்தவித தடைகளும் ஏற்படாமல் நாம் நினைத்தது போல் நடக்க வேண்டும் என்றால் அதற்கான அதற்குரிய தெய்வங்களாக சில தெய்வங்கள் திகழ்கிறார்கள். அப்படிப்பட்ட தெய்வங்களை எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பொதுவாக நம்முடைய காரியங்களில் தடைகளை ஏற்படுத்தக்கூடியவர்களாக திகழ்ந்தவர் ராகு மற்றும் கேது. ராகு கேது தோஷம் இருப்பவர்களுக்கும், நாக தோஷம் இருப்பவர்களுக்கும் காரிய தடைகள் என்பது உண்டாகும். மேலும் லக்னத்தில் ராகு கேது இருந்தாலோ அல்லது இரண்டாம் வீட்டில் ராகு கேது இருந்தாலோ காரிய தடை என்பது உண்டாக்கும். கேது பகவானுக்குரிய தெய்வமாக திகழக்கூடியவர் விநாயகப் பெருமான். அதனால்தான் காரிய வெற்றி உண்டாக வேண்டும் என்று நினைப்பவர்கள் விநாயகர் பெருமானை வழிபடுவார்கள்.
அதே போல் ராகுவிற்கு அதி தேவதையாக திகழக் கூடியவள் காளியம்மன். அதனால் காளியம்மனை நாம் வழிபடும் பொழுது ராகுவால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகள் நீங்குவதற்கும் நினைத்தது நடைபெறுவதற்கும் காளியம்மனை வழிபடும் முறையைப் பற்றி பார்ப்போம்.
எந்த ஒரு காரியத்தை நாம் செய்வதாக இருந்தாலும் அந்த காரியத்தை தொடங்குவதற்கு முன்பாக விநாயகப் பெருமானை எப்படி நாம் வழிபடுகிறோமோ அதே போல் நம் வீட்டில் இருக்கக்கூடிய அம்மனின் படத்திற்கு முன்பாக புள்ளிகள் இல்லாத நல்ல எலுமிச்சம் பழமாக பார்த்து ஒரு எலுமிச்சம் பழத்தை வாங்கி வந்து அதற்கு சந்தனம் குங்குமம் வைத்து அம்மனின் படத்திற்கு முன்பாக வைத்து விட வேண்டும்.
பிறகு அதனுடன் ஒரு ரூபாய் நாணயத்தையும் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். அம்மனின் படத்திற்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்து “ஓம் காளியம்மனே போற்றி” என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். இவ்வாறு உச்சரித்து முடித்துவிட்டு நீங்கள் அந்த காரியத்தை செய்ய தொடங்க வேண்டும். அந்த காரியம் வெற்றிகரமாக நடைபெற்று விட்டது என்னும் பட்சத்தில் எலுமிச்சம் பழத்தை எடுத்து ஓடுகின்ற நீரில் போட்டு விட வேண்டும். ஒரு ரூபாய் நாணயத்தை அருகில் இருக்கக்கூடிய அம்மன் ஆலய உண்டியலில் சேர்க்க வேண்டும்.
இப்படி எந்த ஒரு காரியத்தை செய்வதற்கு முன்பாகவும் நாம் வழிபாடு செய்து விட்டு பிறகு தொடங்கினோம் என்றால் விநாயகர் மற்றும் காளியம்மனின் அருளால் நாம் எந்த காரியத்தை நினைத்து செல்கிறோமோ அந்த காரியம் வெற்றிகரமாக நடைபெறும்.
முக்கியமான குறிப்பு இந்த காரியத்தில் யாருக்கும் எந்த வித கெடுதலும் ஏற்படக்கூடாது. நியாயமான காரியமாக இருந்தால் மட்டும்தான் அது நடைபெறும். மேலும் தொடர்ச்சியாக நாம் காளியம்மனை வழிபடுவதன் மூலம் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். ராகுவால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளும் நீங்கும். ராகு கேது தோஷம் மற்றும் நாக தோஷம் முற்றிலும் நீங்கும்.
இதையும் படிக்கலாமே: அடகு வைத்த நகையை திருப்ப தாந்திரீக பரிகாரம்
மிகவும் எளிமையான இந்த காளியம்மன் வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு நினைத்த காரியம் நினைத்தபடி நடந்திடும்.