அஷ்டம சனி பரிகாரம்

Sani bagavaan

விண்ணில் இருக்கும் ஒன்பது கிரகங்களில் அதி சக்தி வாய்ந்த கிரகமாக சனி கிரகம் இருக்கிறது. ஜாதக கட்டத்தில் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் என 12 ராசிகளையும் கடக்க சனி கிரகம் 30 ஆண்டுகளை எடுத்து கொள்கிறது. ஜாதகத்தில் சனி ஒரு நபரின் ஜாதகத்தில் அது பெயர்ச்சியாகும் இடங்கள், ராசிகளை பொறுத்து பலன்கள் மாறுபடுகின்றன. அந்த வகையில் எல்லோருக்குமே சற்று கலக்கத்தை ஏற்படுத்தும் “அஷ்டம சனி” பற்றியும், அஷ்டம சனி காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பரிகார முறைகளை பற்றியும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Sani Astrology

அஷ்டம சனி என்பது ஒரு நபரின் ஜாதகத்தில் அவர் பிறந்த ராசியிலிருந்து ” 8 ஆம்” இடத்தில் இருக்கும் ராசிக்கு சனி கிரகம் பெயர்ச்சியாவதாகும். அஷ்டம சனி ஏற்பட்டிருக்கும் நபர்களுக்குக் இரண்டரை ஆண்டு காலம் பல விதமான பிரச்சனைகள் ஏற்பட்ட வாறே இருக்கும். அடிக்கடி உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வ புண்ணிய பலன்கள் அதிகம் இல்லாதவர்கள் விபத்துகளை சந்திக்க நேரலாம். வீடுகளில் சுப காரியங்கள் நடப்பதில் தடைகள் ஏற்படும். வழிப்பறி, பணம், நகை கொள்ளை போகுதல் போன்றவையும் சிலருக்கு ஏற்படும். நீதிமன்ற வழக்குகளை சந்தித்து ஒரு சிலர் சிறை செல்லக்கூடிய நிலையும் உண்டாக்கக்கூடியது அஷ்டம சனி.

அஷ்டம சனி காலத்தில் சனி பகவானால் பாதகமான பலன்கள் ஏற்படாமல் இருக்க தினந்தோறும் சனீஸ்வர பகவானின் காயத்ரி மந்திரத்தை துதித்து வர வேண்டும். தினந்தோறும் காலையில் குளித்து முடித்ததும் கருப்பு எள் கலந்த சாதத்தை காக்கைகளுக்கு உணவாக வைக்க வேண்டும். சனி பிரதோஷ தினங்களில் சிவ பெருமான் கோவிலுக்கு சென்று சிவனுக்கு வில்வ இலைகளை சமர்ப்பித்து வணங்கி வர வேண்டும்.

திருநள்ளாறு சனி பகவான் கோவிலுக்கு சென்று சனி பகவானை பூஜித்து வழிபடுவதால் அஷ்டம சனி காலத்தில் கெடுதலான பலன்கள் அதிகம் ஏற்படாமல் அருள்புரிவார் சனிபகவான். தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்ளுக்கு ஆடைகள் மற்றும் அன்ன தானம் அளிப்பது, உடல் அங்கங்களில் குறைபாடு இருக்கும் வசதி குறைந்த நபர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதும் அஷ்டம சனி காலத்தில் சனி பகவானால் கெடுதலான பலன்கள் ஏற்படாமல் தடுக்கும்.

இதையும் படிக்கலாமே:
வாஸ்து குறைகளை சரி செய்யும் வாஸ்து தோஷ பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have details of Ashtama sani pariharam in Tamil, Ashtama sani duration, Ashtama shani effects in Tamil and Ashtama sani pooja in Tamil.