சிட்னி போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரருக்கு இடமில்லை – நிர்வாகம் அறிவிப்பு

team

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. அந்த போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார அணி தற்போது இந்திய அணி சிட்னி நகரில் கடைசி டெஸ்ட் போட்டிக்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

india

இந்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் அணியில் இடம்பெறவில்லை. இதனை இந்திய அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால் அவருக்கு இந்த போட்டியில் இடம் கிடைக்காமல் போனது.

வெளிநாட்டு தொடர்களின் போது வீரர்கள் காயம் அடையாமல் இருப்பது முக்கியம். ஏற்கனவே இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான பிரிதிவி ஷா பயிற்சி போட்டியில் ஆடும்போது தவறி வீழ்ந்து முதல் வெளிநாட்டு தொடரை விளையாடா முடியாமல் போனது.

ashwin

ரோஹித் சர்மா தனது குழந்தையை பார்க்க மும்பை சென்று உள்ளதால் அவர் கடை டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார். அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்டியா அணியில் இடம் பெறுவார் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே :

ஆஸி கேப்டனின் சவாலுக்கு சம்மதித்த பண்ட் ! என்ன செய்தார் தெரியுமா ?

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்