ஆஸி கேப்டனின் சவாலுக்கு சம்மதித்த பண்ட் ! என்ன செய்தார் தெரியுமா ?

pant

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. அந்த போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. தற்போது இந்திய அணி சிட்னி நகரில் கடைசி டெஸ்ட் போட்டிக்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

paine

இந்நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனான ரிஷப் பண்ட் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான டிம் பெயின் அவர்களின் வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸி கேப்டன் பண்டை தனது வீட்டிற்கு வந்து என் குழந்தைகளை பராமரிக்க வா என்ற படி அவரை வம்பிழுத்தார். அது ஸ்டம்ப் மைக் பதிவு மூலம் வெளியானது.

இந்நிலையில் பண்ட் பெயினின் வீட்டிற்கு சென்று அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தினை ICC தனது அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. மேலும் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் இந்த புகைபடத்தினை பகிர்ந்தவாறு உள்ளனர் .

போட்டிகளின் போது ஸ்லெட்ஜிங் செய்வது ஆஸ்திரேலிய அணியினரின் பழக்கமாக இருந்து வருகிறது. இந்திய அணியில் தைரியமாக ஸ்லெட்ஜிங் செய்வது பண்ட் ஒருவர் தான். அதுவும், தன்னை வம்பிற்கு அழைக்கும் வீரரிடம் மட்டுமே இவ்வாறு அவர் செய்வார். இந்நிலையில் போட்டி முடிந்து பெயினின் வீட்டிற்கு சென்றதை பார்த்து இந்திய அணி வீரர்களே திகைத்தனர்.

இதையும் படிக்கலாமே :

முன்கூட்டியே புத்தாண்டை வரவேற்ற விராட் கோலி! மனைவியுடன் உள்ள புகைப்படம் இதோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்