விஸ்வாசம் படத்திற்காக ஆஸ்திரேலியாவில் இருந்து ட்வீட் செய்த இந்திய கிரிக்கெட் வீரர்

Ash

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து கொண்டிருக்ககிறது. தற்போது டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ள தமிழக வீரரான அஸ்வின் ஓய்வில் உள்ளதால் 3வது டெஸ்டில் ஆடவில்லை. இந்நிலையில் அவர் அஜித் குமார் நடித்துள்ள புதிய படமான விஸ்வாசம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தினை பதிவிட்டுள்ளார்.

ashwin

அந்த பதிவில் அஸ்வின் பதிவிட்டவை : விஸ்வாசம் படத்தின் “கண்ணான கண்ணே” பாடல் மிகவும் அருமையாகவும், மனதை வருடும் பாடலாக உள்ளது. இசை அமைப்பாளர் இமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்றும் மீண்டும் மீண்டும் கேட்கும் பாடலாகவும் இது அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதோடு மட்டுமின்றி சித் ஸ்ரீராம் அவர்களது குரல் மற்றும் தாமரை அவர்களது வரிகளும் சேர்ந்து இந்த பாடல் சிறப்பாக வந்துள்ளது என்றும் மேலும் மகளின் பாசம் கடவுள் கொடுத்த வரம் என்று தனது மகளுடன் அவர் இருக்கும் வீடியோவினை இந்த பாடலோடு சேர்த்து பதிவிட்டு உள்ளார்.

இறுதியாக காத்திருக்க முடியவில்லை விஸ்வாசம் படத்தினை காண ஆவலாக உள்ளேன் என்று பதிவிட்டுள்ளார். ஆஸ்திரேலிய சுற்று பயணத்தில் இருக்கும் அஸ்வின் செய்த டிவீட்டிற்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் பலரும் இந்த டீவீட்டை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

இதையும் படிக்கலாமே :

சூப்பர் நோஸ் கட் , வார்த்தைகளால் ஆஸி கேப்டனுக்கு பதிலடி கொடுத்த ரிஷப் பண்ட்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்