சூப்பர் நோஸ் கட் , வார்த்தைகளால் ஆஸி கேப்டனுக்கு பதிலடி கொடுத்த ரிஷப் பண்ட்

pant

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியிலும் தொடர்ந்து ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய அணியை சீண்டிய வண்ணம் உள்ளனர் . ரோஹித் சர்மா பேட்டிங் செய்யும் போது ஸ்டம்ப்க்கு பின் பேட்டிங் தொடர்ந்து வசைபாடி வந்தார் ஆஸி கேப்டன் பெயின். அதோடு மட்டுமில்லாமல் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்ய வந்த போது அவரையும் அவர் விட்டு வைக்கவில்லை.

உனக்கு ஒன்று தெரியுமா ms தோனி ஒருநாள் அணியில் விளையாடுவதால் நீ அணியில் இடமபெறமாட்டாய் ஆகவே என் பரிந்துரையின் பேரில் பிக்பேஷ் போட்டியில் ஆடு ஹபர்ட் பேரில் நன்றாக இருக்கும். மேலும், எனது வீட்டிற்கு வா என் குழந்தைகளை பார்த்துக்கொள்ள பராமரிப்பாளர் வேண்டும். ஒரு நாள் இரவு நீ குழந்தைகளை பார்த்துக்கொள் நான் என் மனைவியுடன் சினிமாவிற்கு சென்று வருகிறேன் என்று பெயின் பண்டினை நோக்கி கூறினார்.

இந்நிலையில் 2வது இன்னிங்க்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்த வண்ணம் இருந்தது. அப்போது பேட்டிங் செய்ய வந்த பெயினுக்கு பண்ட் பதிலடி கொடுக்கும் வகையில் பேச துவங்கினார். பண்ட் கூறியதாவது :அகர்வால் உனக்கு ஒன்று தெரியுமா? தற்காலிக கேப்டனை பார்த்துள்ளாயா இதற்கு முன்னர்? அப்படி பார்க்கவில்லை என்றால் இப்போது நான்றாக பார்த்துக்கொள்.

pant 1

மேலும் ஜடேஜா பந்துவீசும்போது அவரிடம் பண்ட் கூறியதாவது: இந்த பிளேயருக்கு பேச மட்டும் தான் தெரியும். விளையாட தெரியாது எனவே எப்படி வேண்டும் என்றாலும் பந்து வீசுங்கள் பார்த்துக்கொள்ளலாம். என்று தனது பதிலை பெயினுக்கு உரைக்கும்படி பண்ட் விளாசித்தள்ளினார்.

இதையும் படிக்கலாமே :

புஜாராவின் ஆமை வேக ஆட்டம் இந்த பிட்ச்சிற்கு ஏற்றது தான் – ஆஸி வீரர் பளீர்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்