கேட்டை நட்சத்திரக்காரர்களின் வருமானம் பெருக செய்யும் பரிகாரங்கள்

kettai

நாம் அனைவருமே ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கும் 27 நட்சத்திரங்களில் ஏதேனும் ஒரு நட்சத்திர அம்சத்தில் தான் பிறக்கிறோம். அந்த நட்சத்திர ராசி மற்றும் அதை ஆட்சி புரிகிற நவகிரகங்களின் தன்மையை பொறுத்து பலன்கள் மாறுகின்றன. அப்படி 27 நட்சத்திரங்களின் வரிசையில் பதினெட்டாவதாக வரும் கேட்டை நட்சத்திரக்காரர்கள் வாழ்வில் மிகுதியான நன்மைகள் பெற செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

budhan

கேட்டை நட்சத்திரம் நவகிரகங்களில் அறிவாற்றலுக்கு காரகனான புதன் பகவானுக்குரிய நட்சத்திரமாகும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கோட்டை கட்டி ஆள்வார்கள் என்று கூறுவார்கள். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் பார்க்கும் போது பல கேட்டை நட்சத்திரகாரர்கள் பிரச்சனைகள் மிகுந்த சராசரியான வாழ்க்கையை தான் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். கேட்டை நட்சத்திரக்காரர்கள் தங்களின் வாழ்வில் அதிக நன்மைகளை பெற கீழ்கண்ட பரிகாரங்களை செய்து வருவது அவசியம்.

கேட்டை நட்சத்திரத்தின் அதி தேவதை இந்திரன் ஆவார். அந்த இந்திரன் திருமால் அம்சம் கொண்டவர். எனவே மாதத்தில் வருகிற புதன், சனி மற்றும் மாத ஏகாதசி நாட்களில் பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளையும், தாயாரையும் வழிபட வேண்டும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களின் திருமணத்தை ஆனி மாதம் தவிர்த்து பிற மாதங்களில் செய்ய வேண்டும். கல்வி பயிலும் வசதி குறைந்த மாணவர்களுக்கு புத்தகம், எழுது பொருட்கள், ஆடைகள் போன்றவற்றை தானம் தருவது சிறந்த பரிகாரமாகும்.

Perumal

இந்த நட்சத்திரக்கர்களுக்கு ஏற்படும் நட்சத்திர தோஷங்கள் நீங்க வாரம் ஒருமுறை கருணை கிழங்கை சமைத்து சாப்பிட்டு வர வேண்டும். கேட்டையில் பிறந்தவர்கள் காரிய தடை, தாமதங்கள் நீங்க கேட்டை நட்சத்திர தினத்தன்று துர்க்கை அம்மனுக்கு செவ்வரளி பூக்கள் மாலை அணிவித்து, நெய்தீபம் ஏற்றி வழிபட வேண்டும். ஒன்பது மாதங்களுக்கு இந்த வழிபாட்டை மேற்கொள்வதால் தடை, தாமதங்கள் நீங்கி வருமானம் பெருகும்.

இதையும் படிக்கலாமே:
புதிய சொத்துகள் வாங்க இதை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Kettai nakshatra pariharam in Tamil. It is also called as Kettai natchathiram in Tamil or Natchathira pariharam in Tamil or Kettai natchathiram athipathi in Tamil or Kettai natchathiram palangal in Tamil.