அஷ்ட லட்சுமி அருள் பெற, செல்வம் கொழிக்க, இழந்தவை யாவும் திரும்ப பெற ஏற்ற வேண்டிய தீபம் என்ன? இந்த குபேர சம்பத்தை கொடுக்கக்கூடிய தீபத்தை எப்படி ஏற்றினால் என்ன பலன்கள் கிடைக்கும்?

kuberan-nellikkani
- Advertisement -

ஒரு சில பொருட்களில் தீபம் ஏற்றுவதன் மூலம் நமக்கு அதிர்ஷ்டங்கள் உருவாகக் கூடும் என்கின்றன சாஸ்திரங்கள். அதில் தேங்காய் தீபம் ஏற்றுவது, உப்பு தீபம் ஏற்றுவது, ஜல தீபம் ஏற்றுவது போன்றவற்றை பக்தர்கள் கடைபிடிப்பது உண்டு. அது போல அஷ்டலட்சுமிகளின் அருள் பெறவும், செல்வம் கொழித்து இழந்தவை யாவும் திரும்பப் பெற ஏற்றக்கூடிய இந்த தீபம் எப்படியான பலன்களைக் கொடுக்கக் கூடியது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

மகாலட்சுமியின் அருள் பெற சுத்தமான அகல் விளக்கில் நெய் தீபமேற்றுவது ரொம்பவே விசேஷமானது. அது போல துர்க்கை அம்மனுக்கு ஏற்ற வேண்டிய விளக்கு எலுமிச்சை தீபம் ஆகும். இது போல அஷ்டலட்சுமிகளின் அருள் பெறவும் ஏற்ற கூடிய மிக முக்கியமான ஒரு தீபம் நெல்லிக்காய் தீபம் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. இந்த நெல்லிக்காய் தீபத்தை முறையாக ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த பொருள், செல்வம், சொத்துகள், மனநிம்மதி போன்றவற்றை மீட்டு எடுத்து விடலாம்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி நாட்களில் இந்த தீபத்தை ஏற்றி வழிபடலாம். அஷ்டலட்சுமி படம் இருந்தால் அதனை வைத்து அதற்கு முன்பாக இரண்டு நெல்லிக்காய்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நெல்லிக்காய் என்றால் சிறு நெல்லிக்காய் அல்ல, பெரிய நெல்லிக்காய் இரண்டை எடுத்து அதில் உன் பாகங்களை மட்டும் கத்தி போன்ற கூர்மையான ஆயுதத்தால் மெதுவாக எடுத்துவிட்டு குழி போல தீபம் ஏற்றுவதற்கு ஏதுவாக செய்து கொள்ள வேண்டும்.

நீங்கள் பயன்படுத்த இருக்கும் நெல்லிக்காய் புள்ளிகள், அழுக்குகள் இல்லாமல் இருக்க வேண்டும். முழு நெல்லிக்காயை இப்படி தீபம் ஏற்றுவதற்கு ஏதுவாக குழி செய்து அதில் நெய் அல்லது சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சில் மஞ்சள் திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். பஞ்சுத்திரி மஞ்சளில் தோய்த்த மஞ்சளாக நன்கு உலர வைத்து பின்பு நெல்லிக்காயில் இரண்டு புறமும் தீபம் ஏற்ற வேண்டும். தீபம் கிழக்கு திசையை நோக்கி இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நெல்லிக்காய் தீபம் ஏற்றிவிட்டு மகாலட்சுமி மந்திரங்கள், ஸ்லோகங்கள் போன்றவற்றை உங்களுக்கு தெரிந்தவை உச்சரிக்கலாம். உங்களால் உச்சரிக்க முடியாவிட்டால் அவற்றை ஒலி வடிவமாக வீட்டில் ஒலிக்க விடுங்கள். அதன் பிறகு அஷ்டலட்சுமிகளுக்கும் நைவேத்தியம் படைக்க நெய் ஊற்றிய சர்க்கரை பொங்கல் விசேஷமானது. வெள்ளிக்கிழமையில் இது போல சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் படைத்து, மஞ்சள் திரி இட்டு, நெல்லிக்காய் தீபம் ஏற்றி மகாலட்சுமி மந்திரங்களை உச்சரித்தால் இழந்த செல்வங்கள் யாவும் கிடைக்கும்.

அது போல குபேர சம்பத்து கொடுக்கக் கூடிய தீபமும் இந்த நெல்லிக்காய் தீபம் ஆகும். குபேரனுக்கு மிகவும் பிடித்த நெல்லிக்காய் தீபம் குபேரனுக்கு ஏற்றுவதும் ரொம்பவே விசேஷமானது. நெல்லிக்காய் நைவேத்தியம் படைத்து, குபேரனுக்கு நெல்லிக்காய் தீபமும் ஏற்றி பாருங்கள், சகல செல்வங்களும் உங்களை தேடி நாடி வரும். குபேரனுக்கு நெல்லிக்காய் தீபம் ஏற்றுவது ஆக இருந்தால் வியாழன் கிழமையில் ஏற்ற வேண்டும். அஷ்டலட்சுமிகளுக்கும் வெள்ளிக்கிழமை, பௌர்ணமி நாட்களில் ஏற்ற வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள், பலன் பெறுங்கள்.

- Advertisement -